Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாரளுமன்ற ஆட்சி முறையை மீண்டும் ஏன் கோருகின்றனர்?

ஜனாதிபதி முறையை மாற்றக் கோருகின்றவர்கள், ஜனாதிபதி முறையை சர்வாதிகாரமானதாகவும், தனிமனித ஆட்சியாகவும், குடும்ப ஆட்சிக்கு காரணமானதும் என்கின்றனர். இவை அடிப்படையான உண்மைகளை மூடி மறைக்கின்ற, வெளிப்படையான வடிங்வகளைக் கொண்டு மக்களை கவருகின்ற தேர்தல் அரசியல் புரட்டாகும்.

மறுபக்கத்தில் இதுதான் உண்மை என்றால்

1. இந்த முறை மூலம் கொண்டு வரப்பட்ட நவதாரளவாத பொருளாதாரக் கொள்கையானது தனிப்பட்ட முடிவா? ஜனாதிபதி முறை மூலம் கொண்டு வரப்பட்ட நவதாரளவாத பொருளாதாரக் கட்டமைப்பை, ஜனாதிபதி முறையை எதிர்க்கின்ற பாரளுமன்றவாதிகள் இல்லாதாக்குவார்களா! எனின் இல்லை.

2. அரசு தானாகவே முன் வந்து ஜனாதிபதி முறையை நீக்கினால், "பொது வேட்பாளார்" கூறும் "ஜனநாயகம்" வந்து விடுமல்லவா!? அதேநேரம் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளினது அரசியல் என்ன!? எதுவம் இருக்காது. மக்களை ஏமாற்றி வாக்கு பெறவதே எதிர்கட்சிகளின் அரசியல் என்பது, வெளிப்படையான உண்மையாக இருக்கின்றது.

ஜனாதிபதி முறையானது, நவதாரளமயமாக்கலை முன்னெடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது. நவதாராளவாத பொருளாதாரத்தை நீக்குவதற்காக எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற முறையைக் இன்று கோரவில்லை. 1980 களில் கொண்டு வந்த ஜனாதிபதி அமைப்பு முறையின்றி, இன்றைய நவதாரளமயத்தை அமூலுக்கு கொண்டு வந்து இருக்க முடியாது.

1970களில் பாரளுமன்றமாகட்டும், சமூதாய வர்க்க அடுக்குகளாகட்டும், முரண்பட்ட வர்க்கங்களுடன் சமரசத்தையும் சீர்திருத்தத்தையும் கொண்ட ஆட்சி முறையே காணப்பட்டது. அரச மூலதனம் பிரதானமானதாகவும், தேசிய மூலதனங்கள் கொண்ட கலப்பு ஆட்சி முறை காணப்பட்டது.

இது சர்வதேச தன்மை கொண்டதாக இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து சீனா உள்ளிட்ட பல காலனிய நாடுகள் சுதந்திரத்தைப் பெற்றதும், அதேநேரம் காலனியவாதிகள் தங்கள் காலனிய நாடுகளின் சுதந்திர போராட்டங்களை தடுக்க, இந்த நாடுகளை அரைக்காலனிகளாக மாற்றின. அதை காலனி நாடுகளின் சுதந்திரமாக கூறி விட்டுச் சென்றனர். அன்றைய சர்வதேச சூழலானது, தேசங்களுக்குள்ளான பல்வேறு வர்க்கங்களுடன் சமரசமின்றி ஆள முடியாது இருந்தது.

அதே நேரம் சோவியத் நாடுகளில் தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளும், சமூக நலத்திட்டங்களும் உலகை அச்சுறுத்தியது. இதனால் ஏகாதிபத்திய அரசுகள் கூட, தன்நாட்டு மக்களுக்கு சோவியத் மாதிரி உரிமைகளையும், சமூக நல திட்டங்கள் சிலவற்றை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இப்படிக் கொடுத்தன் மூலம், அந்த நாடுகளில் மக்களின் எழுச்சிகளையும் புரட்சிகளையும் தடுக்கவும் சிதைக்கவும் முடிந்தது.

இந்த அடிப்படையையே காலனிய நாடுகளும் பின்பற்றின. வர்க்க சமரசம், சீர்திருத்தம் மூலம் நாட்டை ஆட்சி செய்தார். இதை முன்னெடுப்பதில் எற்பட்ட எற்றத்தாழ்வான முரண்பாடே, இடது - வலது ஆட்சியாக வேறுபட்டது. பாரளுமன்றங்களில் இந்த வேறுபட்ட வர்க்கப் பார்வைகள், முரண்பாடுகள், 1970 - 1980 களில் சர்வதேச ரீதியான மாற்றங்களுடன் முடிவுக்கு வந்தது. சோவியத் - சீனா முதலாளித்துவ மீட்சி, தொழிலாளர்களின் உரிமைகளையும், சமூக நலத்திட்டங்களையும் உலகளவில் முடிவுக்கு கொண்டுவந்தது. இதன் அடிப்படையில் வேறுபட்ட இடது - வலது கட்சி வேறுபாடுகளும் கூட இன்று முடிவுக்கு வந்ததுள்ளது.

இந்த சர்வதேச பின்புலத்திலேயே 1970-1980 களில் நவதராளமய பொருளாதாரம் அழுலுக்கு வருகின்றது. இலங்கையின் பல்வேறு வர்க்கங்களைப் பிரதிநித்துவம் செய்த பாரளுமன்ற முறை, ஏகாதிபத்தியம் கொண்டு வந்த நவதாரமயத்துக்கு முரணாகவும் தடையாகவும் இருந்தது. இதைத் தடுத்து நிறுத்தி நவதாரளமய பொருளாதாரத்தை முன்னெடுக்கவே, அன்று ஜனாதிபதி முறை அவசியமாக இருந்தது.

ஜனாதிபதி முறை பல்வேறு வர்க்கப் பின்னணி கொண்ட பாரளுமன்ற பிரதிநிதிகளின் முரண்பாடுகளைக் கடந்து, நவதாரளமயத்தை திணிக்கும் சர்வாதிகாரமாக இருந்தது. இதன் மூலமே நவதாரளமயம் இலங்கையில் அமுலுக்கு வந்தது.

இன்று நவதாரளவாத முறை அமுலாகி, அதுவே அனைத்துமாக மாறிவிட்டது. இந்த நிலையில் நவதாரள பொருளாதாரதுக்கு ஜனாதிபதி ஆட்சிமுறை இனி அவசியமில்லை என்பது வெளிப்படையான உண்மையாகி நிற்கின்றது. அதாவது ஜனாதிபதி முறை அதன் சுதந்திரமான செயற்பாட்டை தடை செய்கின்ற ஒன்றாக மாறிவிடுகின்றது.

நவதாரளமய பொருளாதார விருத்திக்கு, தடையற்ற சுதந்திரமான அமைப்பையே முதலாளித்துவம் விரும்புகின்றது. தனிமனித அதிகாரம் மூலம் தனிச் சலுகை பெற்ற நவதாரள உறுப்புகளுடான போட்டியை இல்லாதாக்க, பாரளுமன்ற முறையை நவதாரளமயம் கோருகின்றது. தனிச்சலுகை பெற்ற நவதாரளமய உறுப்பை ஜனாதிபதி முறை மூலம் ஏற்படுத்து தான், பராளுமன்றத்தைக் கோருவதற்கான காரணம்.

இன்றைய பராளுமன்ற உறுப்பினர்கள் 1970 களில் பிரதிநிதித்துவம் செய்த வர்க்க அடிப்படைகளைக் கொண்டவர்களல்ல. 1970 இருந்த வர்க்க அமைப்புச் சிதைவுகளும், புதிய வர்க்க அணி சேர்க்கையாக இன்று நடந்தேறி இருக்கின்றது. அதே நேரம் தேர்தல் கட்சிகள் அனைத்தும் நவதாரளமயத்தை ஆதரிக்கின்ற, அதை முன்னெடுக்கின்ற வர்க்க பிரதிநிதிகளாகவே இருக்கின்றனர்.

"புனித" பராளுமன்றம் முன்பு போல் வர்க்க பேரங்களுக்கு இடமிருப்பதில்லை. நவதாரள பொருளாதாரத்தை ஆதரிக்கின்றதும், தனிப்பட்ட நலன் சார்ந்த (இதற்காக இனம், மதம் சாதி, பால் .. அடையாளங்களை முன்னிறுத்திக் கொண்ட) பேரங்களுக்குரிய பாரளுமன்றமாக மாறிவிட்டது. இந்த நிலையில் நவதாரளமயத்தை முன்னெடுக்க பாரளுமன்ற முறை இலகுவானதாக தேவையானதாகவும் இருக்கின்றது.

ஜனாதிபதி முறை

1. 1980 களில் சலுகை பெற்ற நவதாரள உறுப்பை முன்னுக்கு கொண்டு வர உதவியது. இன்று நவதாரள பொருளதாரமாகிய பின், இந்த முறை அதன் சுததந்திரத்தை தடுக்கும் கூறாக வீரியம் பெறுகின்றது. யுத்தம், யுத்த வெற்றி மூலம் சலுகை பெற்ற நவதாரள பொருளாதாரக் கூறு, சுதந்திரமான நவதாரள பொருளாதாரத்தை சந்தையில் இருந்து அகற்ற முனைகின்றது முரண்பாடாகி வருகின்றது. அந்த முரண்பாடு பராளுமன்ற முறையை முன்னிறுத்துகின்றது.

2. அதே நேரம் தனிச் சலுகை பெற்ற நவதாரளக் கூறு முனைப்பு பெற்று, மக்கள் மத்தியில் தனிமைப்படுகின்றது. இது நவதாரமயத்துக்கு எதிரான மக்கள் போhராட்டகளாகவும், நவதாரளமயத்தை அழித்துவிடும் என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கின்றது.

இந்த இரு பிரதான கூறும் தான், பராளுமன்ற அரசியல் சீர்திருத்தத்தை இன்று கோருகின்றது. ஜனாதிபதி முறைக்கு மாற்றான பாரளுமன்ற கோரிக்கையானது, நவதாரமய பொருளாதாரத்தை சுதந்திரமானதாக மாற்றி அதை பாதுக்கின்ற அரசியல் கோரிக்கையாகும்.