Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 03

ஐ.நா ஊழியர்களை தண்டிப்பது யார்?

ஐ.நாவின் ஊழியர்கள் பொதுவாக அரசியல் நாடு பேதமில்லாது நடக்குமாறு கோருகின்றது. இவர்கள் பொதுவாக வேலை செய்ய முற்பாட்டாலும் புறநிலை இவர்களை அனுமதிப்பதில்லை. இதற்கு இவர்கள் கொண்டுள்ள சிந்தனை முக்கியமாகின்றது. இவ்வாறான தனிநபர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அக்கறை கொள்கின்றனர் என்பது உண்மை. ஆனால் இதில சிறிய வித்தியாசம் இருக்கின்றது. பொதுவுடமையாளர் சிந்தனையில் பார்க்கின்ற போது இவர்கள் சுரண்டல் அமைப்பை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே செயற்பட்டுக் கொள்கின்றனர். இதனை ஏற்றுக் கொள்ளாவிடினும் இதுவே இன்றைய சமூக நியதியாக இருக்கின்றது. ஈராக் மீது இவ்வூழியர்கள் நடந்து கொண்டார்கள் எனப்பார்ப்போம்.

ஈராக் வெளிநாட்டமைச்சரான ஆழாயஅஅநன Mohammed Said al-Sahof பத்திகையாளர் மாநாட்டில் பரிசோதகர்கள் அரசியல் தலைமையகத்தையும், முன்னைய பாதுகாப்பு அலுவலகத்தையும், வெள்ளிக்கிழமை அன்று குறிப்பிட்ட இடத்தை பார்வையிட வேண்டும் என கோரியபோது, வெள்ளிக்கிழமை ஆகையால் தமது அதிகாரிகள் இல்லாது தனியே செல்ல முடியாது என ஈராக் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பார்வையிடச் சென்ற இடத்தில் 45 நிமிடம் பிந்திவிட்டதாக ஐ. நா அதிகாரிகள் முறைப்பாடு செய்தனர். ஆனால் 20 நிமிடமே தாமதமாகியதாக கூறுகின்றனர். இத்துடன் மாத்திரம் நிற்காது. பக்தாத் சர்வகலாசாலை முதுநிலை மாணவர்களை பேட்டிகான வேண்டும் என Diana Simon கோரிக்கை விடுத்தார். ஆனால் இதனை ஈராக் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

மேலும் 427 சந்தர்ப்பங்களில் ஒத்துழைத்துள்ளனர். ஆனால் ஐ. நா அதிகாரிகள் ஈராக் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என கூறினர். 14.12 98 இல் ஐ.நா விற்கு ஈராக் அனுப்பிய கடிதத்தில் தாம் ஒத்துழைப்புக் கொடுக்க சம்மதிப்பதாக தெரிவித்திருந்தனர். இந்தக் கடிதத்தைப் பற்றி சர்வதேசம் கேள்வி எழுப்பவில்லை என கூறினார்.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற பின்னர் பின்னராக ஈராக்கும், ஏகாதிபத்தியங்களும் மாறி மாறி குற்றம் சாட்டினர். தட்டிக் கேட்க ஆள் இல்லாவிடின் தம்பி தண்டப் பிரசங்கம் என்பது போல் வலுத்தவர்களின் குரல் தான் மேல்லாண்மை கொண்டது. New York Times, Wall Street Journal, Boston Globle, Washington post போன்ற பிரபல பத்திரிகைகள் அமெரிக்கா ஐ. நா அதிகாரிகளின் தகவல்களை பாவித்ததாக அம்பலப்படுத்துகின்றன.

ஐ.நாவின் பெயரை துற்பிரயோகம் செய்யதாக அமெரிக்கா மீது ஈராக் குற்றம் சாட்டியது மட்டும் அல்லாமல் ஐ. நா அதிகாரிகள் இறுதிக் காலகட்டதில் மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்த முன்னேற்பாடுகள் நடைபெற்றதாகவும், ஐ. நா அதிகாரிகள் 5 மேற்கு நாடுகளுக்கு உளவு செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இவற்றை தலைமை பரிசோதகர் Richard Buttler மறுத்துள்ளார். ஆனால் தற்பொழுது அமெரிக்க உபகரணங்களை தாம் பாவித்தகதாகவும் ஏற்றுக் கொண்டுள்ள இவர் Rolf Ekeus என்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் செய்திகளை சேகரிக்கும் பொருட்டு அமெரிக்காவுடன் ஒத்துழைத்ததாக மறைமுகமாக குற்றம் சுமத்தியுள்ளார். இப்படி குற்றம் சுமத்துவதும் ஏகாதிபத்தியங்களுடன் ஓத்துழைப்பது என்பது ஒன்றும் புதுவிடயம் அல்ல.

ஆனால் முன்னால் தலைமை பரிசோதகரான Scott Retter என்பவர் தாக்குதல் நடைபெறுவதற்கு முதலாக ஈராக்கினை ஆத்திரப்படுத்தும் முயற்சியிலும் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரான கிழமைகளில் நடைபெற்றதாகவும் இதன் மூலம் அதிகார பலப் பிரயோகத்தை பயன்படுத்துவதை நியாயம் கற்பிக்க முடியும் என கருதி செயற்பட்டதாக முன்னால் பரிசோதகர் தெரிவித்தார்.

ஈராக் பரிசோதகர்கள் திரும்பவும் தம் நாட்டுக்குள் வரஅனுமதிக்கு மாட்டாது எனவும் புனர்வாழ்வு ஊழியர்களை மாற்றும் படியும் கோரிக்கை விட்டனர். உதவி நிறுவனங்கள் சட்டத்திற்கு முரணாக வட ஈராக்கில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதில் pitish mine adversory group என்ற கண்ணிவெடி அகற்றும் அமைப்பும் இவற்றில் ஒன்றாகும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் ஈராக்கில் இருந்ததாகக் கூறப்பட்ட மனித இனத்தை (weapons of mass destruction) அழிக்கும் சக்தி கொண்ட ஆயுதங்கள் இருப்பதான ஈராக் மீது சோதனை நடத்தப்பட்டது, இறுதியில் ஈராக் மீது ஆக்கிரமிக்கப்பட்டது எல்லாவற்றிற்கும் பின்னால் ஐ.நா ஊழியர்களின் பங்கும் இருப்பதை மறுத்துவிட முடியாது.

இவ்வாறான சர்வதேசிய அரங்கில் தனிநபர்களின் வேகமான செயற்பாட்டுத் திறனும் முக்கிய பாத்திரத்தினை வகிக்கின்றது. அதில் அங்கம் வகிக்கும் நபர் (வர்க்கத் சார்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்) வேகமாக செயற்படுவர். ஒவ்வொரு தனிநபர்களும் தாம் பெரும் சாதனையை நிலைநாட்டுவதாக எண்ணிக் கொள்கின்றனர். இதனால் வேகமாக செயற்பட்டுக் கொள்கின்றனர். ஏகாதிபத்திய நலனுக்காய் இருக்கின்ற ஊடகவியலாளர்களும், தொலைத் தொடர்புச்சாதனங்கள் பிரச்சனையை முக்கியத்துவப்படுத்திக் காண்டுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு அவர்களை குறிப்பிட்ட பிரச்சனையில் ஈடுபடும் படி ஆவலையும் ஊட்டுகின்றனர். ஆனால் நடைமுறை வாழ்வில் ஐ. நா அதிகாரிகள் பணம் படைத்த நாடுகளின் நலனைப் பாதுகாக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இவ்வாறானவர்களையே முள்ளிவாய்க்கால் இறுதிக் காலத்தில் தம்முடன் மக்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் மக்களுடன் நிற்காது முழு ஐ.நா ஊழியர்களும் வெளியேறினார்கள். இன்று ஐ.நாவும் தம்மீது ஒரு குழுவை அமைத்துக்கொண்டு இறுதி யுத்தகாலத்தில் தாம் தவறு விட்டதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் ஒரு நாட்டின் நீதிமன்றம், அரசாங்கம் என்பது எவ்வாறு பாரபட்சமாக இயங்குகின்றதோ அதேபோலதான் பூகோள ரீதியில் இயங்கும் பெரும் அமைப்புக்களும் ஒரு குறிப்பிட்ட சக்திகளின் நலனின் பின்னால் இயங்குவதுமாகும்.

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 01

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 02