Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

சரத் பொன்சேகாவை பொதுமக்கள் சிறைச்சாலை மதிலை உடைத்து விடுதலை செய்வார்கள்!


செய்தி குறித்த கண்ணோட்டம்

சரத் பொன்சேகாவை பொதுமக்கள் சிறைச்சாலை மதிலை உடைத்து விடுதலை செய்வார்கள்: சோமவன்ச அமரசிங்க!

அரசாங்கம் சரத் பொன்சேகாவை விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்காது விட்டால் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வெலிக்கடை சிறைச்சாலையின் மதில் சுவரை உடைத்து அவரை விடுதலை செய்வதற்கும் தயங்க மாட்டார்கள் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் விடுதலையை வேண்டி ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் இன்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கண்டனப் பேரணியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.

 

கறுப்பு எதிர்ப்பு பேரணி என்று பெயர் குறிப்பிடப்பட்டிருந்த குறித்த கண்டனப் பேரணி ஹைட்பார்க்கில் ஆரம்பமாகி மருதானை பொரளை வழியாக வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக நிறைவுற்றது.

கறுப்பு உடையணிந்த பொதுமக்களும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் அந்தப் பேரணியில் கலந்து கொண்டதாக இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பேரணியில் உரையாற்றிய திருமதி அனோமா பொன்சேகா இலங்கையின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் பாரிய பங்காற்றியவர் சரத் பொன்சேகா என்பதுடன் அவரை விடுதலை செய்விக்கும் போராட்டத்தில் தனக்கும் அவர் பெரும் உந்துசக்தியாக அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்ணணியின் இச் செய்தி குறித்த கண்ணோட்டம்:

உணர்வுகள்--உணர்ச்சிவசப்பட்ட கோசங்கள் சிறைகளை உடைக்கா! மக்களை அதைநோக்கி நகர்த்த வேண்டும்!  பார்வையாளர்களாக அல்ல! போராடுபவர்களாக!