Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 18

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 18

 

வர்க்க சர்வாதிகாரத்தை நாசப்படுத்தும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் குப்புறக் கவிழ்க்க டிராஸ்கி முனைந்தான். 

பாடட்டாளி வர்க்க தலைமைக்கு எதிரான டிராட்ஸ்கியம் “ஆழ்ந்த பொருளிலில்லாத, வெட்டித்தனமான அரசியலாகும்” என்றார் லெனின். தனது விமர்சனத்தில் தொடர்ச்சியாக இந்த ஆய்வுரைகளை எடுத்துக் காட்டி அம்பலப்படுத்திய போது “இந்த வாதங்களை வாசகர்கள் கவனமாகப் பரிசீலித்து தீரச் சிந்தித்துப் பார்ப்பார்களாக. இவற்றில் “முத்துக்கள்” அப்படியே நிரம்பி வழிகின்றன. முதலாவதாக, இந்தப் பிரகடனம் கோஷ்டிவாதத்தின் நோக்கு நிலையில் இருந்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும். டிராட்ஸ்கியும் “வேறு பல” இராணுவத்துறை ஊழியர்களும் அதிகார வர்க்க உணர்வை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள், காட்டுமிராண்டித்தனத்தின் எச்சங்களை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி தோம்ஸ்கி ஒரு கொள்கை விளக்கத்தை வெளியிட்டிருப்பாரானால், டிராட்ஸ்கி என்ன சொல்லியிருப்பார், அதை அவர் எப்படிச் சொல்லியிருப்பார் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கு பகைமைத் தன்மை, கோஷ்டித் தன்மை அனைத்தையும் காணத் தவறுகின்ற, திட்டவட்டமாகவும் கவனிக்கத் தவறுகின்ற, ….” தன்மையை ஸ்டாலின் அல்ல லெனினினே சுட்டிக் காட்டுகின்றார். லெனின் இதை மேலும் அம்பலப்படுத்தும் போது “.. பல தொழிற் சங்கவாதிகள் “தமது மத்தியில் ஒரு உணர்வை வளர்க்கப் பார்க்கிறார்கள்”.. இது முற்றிலும் ஒரு அதிகார வர்க்க அணுகுமுறை. இதில் முழுமையாகக் காணும் அம்சம் கோடிக்கணக்கான மக்கள் திரளின் வளர்ச்சி மட்டமோ, வாழ்க்கை நிலைமைகளோ அல்ல, மாறாக “தமது மத்தியில்” தோமஸ்கியும் லசொல்ஸ்கியும் வளர்க்க முயலும் “உணர்வே”…” என்று டிராட்ஸ்கியத்தின் அதிகார வர்க்கப் போக்கையும், தனக்கு தேவைபட்டவர்களை மக்களுக்கு எதிராக வளர்க்கும் போக்கையும் திட்டவட்டமாக சுட்டிக் காட்டுகின்றார். டிராட்ஸ்கிக்கு எதிராக லெனினின் எதை அம்பலம் செய்து போராடினரோ, அதை அப்படியே டிராட்ஸ்கி, ஸ்டாலின் மீது முத்திரை குத்தினான். இதுவே கடந்த 80 வருட டிராட்ஸ்கியின் அரசியலாகி, நீடிக்கின்றது. டிராட்ஸ்கி கட்சியின் பெயரால் செய்த கோஷ்டிவாத முயற்சி, அதிகார வடிவத்தில் அதிகார வர்க்கம் சார்ந்து மேல் இருந்து சிலர் ஆட்சியை அமைப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தை தூக்கியெறிய முயன்றான். இந்த முயற்சி லெனினுக்கு எதிராகவே முதலில் தொடங்கப் பெற்றது. இது ஸ்டாலினுக்கு எதிராக பின்னால் வளாச்சி பெற்றது.

 

லெனின் இந்த கோஷ்டிவாத டிராட்ஸ்கிய முயற்சியை மேலும் குறிப்பிடும் போது “அவரும் “அடிதாங்கித் தன்மையுடைய” புஹாரின், உள்ளிட்ட இதரர்களும் இத்தகைய கவனத்துடன் தட்டிக் கழிப்புச் செய்தும் மூடிமறைத்தும் வரும் இந்த முழுச் சர்ச்சையின் சாரத்தையும் தோழர் டிராட்ஸ்கி தம்மை அறியாமலே வெளிப்படுத்தி விட்டார்.” என்பதை தெளிவாக அடையாளப் படுத்திவிடுகிறார் லெனின். கட்சியையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஒழித்துக் கட்டும் மூடிமறைத்த செயலை டிராட்ஸ்கி தன்னை அறியாமலே வெளிப்படுத்தியதை லெனின் சுட்டிக்காட்டுகின்றார். சற்று காலம் தாழ்த்தி ஸ்டாலின் காலத்தில் முற்றாக முடிமறைத்தும், சில பகிரங்கமாகவும் வெளிப்பட்டது. இந்த கோஷ்டிவாத திருகு தாளங்களை லெனின் மேலும் துல்லியமாக அம்பலம் செய்வதை இந்த விமர்சனத்தில் இருந்து சுயமாக படித்துத் தெரிந்து கொள்ளமுடியும். என்றாலும், முக்கியமான சில பகுதிகளை தொடாந்து பார்ப்போம்.

தொழிலாளர்களின் ஜனநாயகம் குருட்டு வழிபாட்டிலிருந்து விடுபட்டது என்று தோழர் திரோதஸ்கி தமது ஆராய்ச்சியுரைகளில் எழுதுகின்றார் உண்மையில் தொழிலாளர்கள் லெனின் தலைமையிலான கட்சியையும், அதன் கொள்கைகளையும் குருட்டுத் தனமாக பின்பற்றுவதாக குற்றம்சாட்டி, அதை மறுதலிக்க கட்சியைக் கோருகின்றார். லெனினின் பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் தவறானவை என்றும், அதை தொழிலாளி வர்க்கம் குருட்டுத்தனமாக பின்பற்றுவதாகவும், “சொல்லளவிலான அங்கீகரித்தாக” கூறி தனது போல்ஸ்சுவிக்கல்லாத செயலுக்கு ஆதாரவைக் கோரினான். லெனின் தலைமை மீதும், கட்சி மீதான அப்பட்டமான டிராட்ஸ்கிய அவதூறுகளை பொழிந்தான். சொந்த கருத்தை எற்க மறுத்தவர்கள் மீது தூற்றுவது டிராட்ஸ்கிய வழியாகும். இதற்காக சதிகளை கூட பின்னால் செய்ய முற்பட்டு தோற்ற போது, சதியாளர்களை பாதுகாக்க ஏகாதிபத்தியத்தில் முதுகில் எறி ஜனநாயகம் பற்றியும் மனித உரிமை பற்றியும் கூக்கூரல் இட்டான்.

லெனின் இந்த கோஷ்டிவாத செம்மல்களின் ஜனநாயகம் பற்றிய போலிப் பண்பை தோலுரிக்கும் போது “சம்பிரதாய ஜனநாயக விதிகளின் கீழ், டிராட்ஸ்கிக்கு மத்தியக்கமிட்டி முழுவதற்கும் எதிராகக் கூட ஒரு கோஷ்டிவாதக் கொள்கை விளக்கத்துடன் முன்வருவதற்கான ஓர் உரிமை இருந்தது. இது மறுக்க முடியாது. 1920 டிசம்பர் 24ல் ஏற்கப்பட்ட விவாதச் சுதந்திரம் பற்றிய அதன் முடிவு மூலம் மத்தியக் கமிட்டி இந்த சம்பிரதாய உரிமையை அங்கீகாரம் செய்து விட்டது என்பதும் கூட மறுக்க முடியாதது. இடைப்பட்ட அடிதாங்கித் தன்மையுடைய புஹாரின் இந்த சம்பிரதாய உரிமையை டிராட்ஸ்கி விஷயத்தில் அங்கீகரித்தார், ஆனால் பெத்ரோகிராத் கிளையின் வியத்தில் அங்கிகரிக்கவில்லை. காரணம், 1920 டிசம்பா 30ந் திகதி “தொழிலாளர் ஜனநாயகம் என்னும் புனித கோத்திற்குள்” அவர் சொற்பொழிவாற்றத் தொடங்கி விட்டதே போலும்” என்கிறார், ஜனநாயக பண்பையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் முறைகேடாகவும், தனக்கு சார்பாக கோஷ்டிகள் திரித்துப் பயன்படுத்தியதை அம்பலப்படுத்துகின்றார். இது ஸ்டாலின் செய்யவில்லை. கோஷ்டிவாதத்தில் நின்று கட்சிக்கு அறைகூவல் விடுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையே தூக்கி எறிய முயன்றவர்களின் பண்பாகவும் நடத்தையாகவும் இழிந்து போனது. இது தான் ஸ்டாலின் காலத்திலும் தொடர்ந்தது. லெனின், இந்த கோஷ்டிவாத மக்கள் விரோத திட்டங்களை எடுத்துக் காட்டும் போது “டிராட்ஸ்கியின் “புதிய கடமைகளும் முறைகளும்” உண்மையில் எவ்வளவு பிழைபட்டனவாக இருக்கின்றனவோ (அவை குறித்து பின்னர் விளக்குவோம்), அந்த அளவுக்கு பிழையில்லாதவை என்று வைத்துக் கொண்டாலும் கூட, தொழிச்சங்க இயக்கம், லட்சக்கணக்கான தொழிற்சங்க உறுப்பினர்களின் பயிற்சி மற்றும் குடியரசுக்கு தீங்கு விளைக்கும் என்பதை மறுக்க முடியுமா?” என்று லெனின் கேள்வி எழுப்புகின்றார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், மக்களின் அடிப்படையான நலன்களையும் கூட டிராட்ஸ்கி கட்சியின் பெயரால் குழி தோண்டிப் புதைக்க முயன்றான். தன்னை போல்ஸ்விக் என்றும், லெனினிய தொடர்ச்சி என்று கூறி நடத்தும் திரிபுவாத பித்தலாட்டங்களையும், 1917க்கு பிந்திய கால நிகழ்ச்சிகள் நமக்கு எதை உணர்த்தி நிற்கின்றன என்பதை சுய அறிவுள்ள யாரும் சுயமாகக் கண்டறிய முடியும். இக் காலகட்டத்;தில் மிகவும் நெருக்கடியான நிலை காணப்பட்டது. மாஸ்கோவில் ஒரு நாளைக்கு 225 கிராம் பானும் (ரொட்டி), 7 கிராம் இறைச்சியும், 10 கிராம் சீனியுமே நாள் ஒன்றுக்கு ஒரு தொழிலாளிக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. எங்கும் பற்றாக்குறை தலைவிரித்தடியாது. இந் நிலையில் தான் டிராட்ஸ்கி லெனினுக்கு எதிரான கோஷ்டியை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கினான்.

கட்சியைப் பிளக்கவும், கட்சியை தனக்கு சார்பாக களையெடுக்கவும் டிராட்ஸ்கி 1920களில் முழு வீச்சாக செயல்பட்டான். இந்த அபாயத்தை சுட்டிக் காட்டிய லெனின் “.. எந்த வகையான மோதலிலும் முற்றிலும் தனிப்பட்ட தகராறிலும் கூட நேரலாம், இது அரசியலிலும் நிகழ்கின்றது. எந்த ஒரு வேறுபாடும் அற்பமான ஒன்றாக இருந்தாலும் கூட அது ஒரு பிளவாக வளர்வதற்கு சந்தாப்பம் இருக்கும் பட்சத்தில் அரசியல் ரீதியில் அபாயகரமானதாக ஆகியேதீரும். அரசியல் கட்டமைப்பு முழுவதையும் குலுக்கி நாசமாக்கி விடும் அல்லது தோழர் புஹாரினின் உவமையைப் பயன்படுத்திக் கூறினால் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் வகைப்பட்டதான பிளவையே இங்கு நான் குறிப்பிகிறேன்.” என்று லெனின் டிராட்ஸ்கியின் பிளவுக்கான முயற்சியை விரிவான ஆதாரத்துடன் முன்வைக்கின்றார். (லெனினை படிக்காதவர்கள் பார்க்க விரிவான விமர்சனத்தை)

டிராட்ஸ்கியின் கோஷ்டிவாத பிளவு எப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அழித் தொழிக்கும் என்பதை லெனின் சுட்டிக் காட்டும் போது “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் இருக்கும் ஒரு நாட்டில் பாட்டாளிகளின் அணிகளிலோ, பாட்டாளி வர்க்கக் கட்சிக்கும் பாட்டாளி மக்கள் திரளுக்கும் இடையிலோ ஒரு பிளவு ஏற்படுவது, குறிப்பாக பாட்டாளி வர்க்கம் மக்கள் தொகையில் ஒரு சிறுபான்மையாக அமைந்திருக்கும் பொழுது, சற்று ஆபத்தானது என்பதல்ல, மிகவும் அதிக ஆபத்தானதாகும் என்பது தெளிவு. …தோழர் தோமஸ்கி அரசியல் குழுவின் முன்னால் கடுஞ் சினத்துடன் தோன்றி, மிகவும் சுமுக மனநிலை கொண்ட தோழர் ருத்சுதாக்கினுடைய முழு ஆதாரவுடன் மாநாட்டில் தோழர் டிராட்ஸ்கி தொழிற்சங்களை “துப்புரவாக்குவது” பற்றிப் பேசினார் என்றும் அவர் (தோம்ஸ்கி) இதை எதிர்த்தார் என்றும் விவரிக்கத் தொடங்கினார். அது நிகழ்ந்த போது, கொள்கைதான் (அதாவது கட்சியின் தொழிற்சங்கக் கொள்கை) சர்ச்சையின் மூலவேராக இருக்கின்றது என்றும் தோழர் தோம்ஸ்கிக்கு எதிராகத் தோழர் டிராட்ஸ்கி தனது “துப்புரவாக்கும்” கொள்கையுடன் வந்தது முற்றிலும் தவறானது என்றும் அங்கேயே அப்போழுதே நான் முடிவு செய்தேன்.” என்று லெனின் குறிப்பிடும் போது, கட்சியின் பிளவுபடும் அபாயத்தை கவனமாகவும் சிறப்பாகவும் சுட்டிக் காட்டுகின்றார். கட்சியை தூய்மைப்படுத்தல் என்பது டிராட்ஸ்கியால் தமது கோஷ்டி அணியை பலப்படுத்தல் என்பதைத் தாண்டி எதுவுமற்ற சராமாகிவிடுகின்றது. எதிரியை பாதுகாத்து கோஷ்டிவாதத்தின் உச்சநலன்களை அடைய, பாட்டாளி வர்க்கத்தை துடைத்தெரியவும் இது காரணமாகிவிடும் என்பதை லெனின் இனம் கண்டு, அதை அந்த இடத்திலேயே எதிர்த்துப் போராடுகின்றார்.

டிராட்ஸ்கி தொழிச்சங்களை துப்பரவாக்க கோரி பின் அதுவே அரசியல் அர்த்தம் பெற்று, எதிரிக்கு எதிரானதாக மாறிய போது, துப்பரவாக்குவதை மறுக்க தொடங்கினர். இதை லெனின் சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தும்; போது “.. மேலிருந்து துப்புரவாக்கும்” கொள்கை தம் மீது சார்த்தப்படுவது தோழர் டிராட்ஸ்கிக்குப் “படுமோசமான கேலிப் போலித்தனமாக” இப்போது தோன்றுகிறது. ஆனால் “துப்புரவாக்குதல்” என்பது ஒரு மெய்யான “கோம்” தோழர் டிராட்ஸ்கியால் ஐந்தவாது அகில ருஷ் மாநாட்டில் உச்சரிக்கப்பட்ட பிறகு கட்சி முழுவதிலும் தொழிற்சங்களிலும் “பற்றிக் கொண்டுவிட்டது” என்று கூறப்படும் பொருளில் மட்டுமல்ல, துரதிருஷ்டவசமாக இன்றும் கூட மேலும் அதிகக் கருத்தாழமான அர்த்தத்தில் இது உண்மையில் நிலவுகின்றது.” அலை அலையாக தனது தவறுகளுக்கு எற்ப இடைவிடாது குட்டிக்காரணம் அடித்த டிராட்ஸ்கி, தனது அதிகாரத்துக்காக எதையும் எப்படியும் புரட்டிக் காட்ட முயன்றார். லெனினின் சரியான நிலையை ஏற்று சுயவிமர்சனம் செய்வதற்கு பதில், மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக தனது நிலையை தக்க வைக்க பிரயத்தனம் செய்தான். லெனின் டிராட்ஸ்கியின் தவறை எடுத்துக் காட்டும் போது 1920 டிசம்பர் 30 இல் முதலாவது உரையிலேயே தோழர் ஸினொவியெவ் இப்பிரச்சினையை மொட்டையாகவும் சரியாகவும் சாற்றினார். “தோழர் டிராட்ஸ்கியின் நிதானம் தவறிய ஆதாரவாளர்கள்” தான் ஒரு பிளவைக் கொண்டு வந்தார்கள் என்று அவர் கூறினார். இதனால் தான் தோழர் புஹாரின் தோழர் ஸினோவியெவின் உரையில் “ஏராளமான வெப்பக் காற்று” என்று நிந்தனையாக வருணித்தார் போலும்? …தோழர் ஸினோவியெவ் தான் மெய்விவரங்களை மேற்கோள் காட்டிச் செயல்படுகிறார் என்பதையும் டிராட்ஸ்கியும் புஹாரினும் மெய்விவரங்கள் இல்லாத, அறிவுஜீவிகளியல்பான “சொல்லடுக்குகளில்” ஈடுபட்டிருறார்கள் …” என்பதை லெனின் சுட்டிகாட்டி பிளவின் அபாயத்தை கடுமையாக எச்சரிக்கின்றார்.

மார்க்சியத்தின் அடிப்படையான அடிச்சுவட்டையே டிராட்ஸ்கி மறுத்து திரித்த போது லெனின் “இத்தகைய சாதாரண பிரச்சினைக்கு நாம் திரும்ப வேண்டியிருப்பது விசித்திரமே, ஆனால் துரதிருஷ்டவசமாக டிராட்ஸ்கி மற்றும் புஹாரின் பொருட்டு நாம் இவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் எற்பட்டுள்ளது. பிரச்சனையைத் திடீரென்று “மாற்றியதற்காகவும்” அவர்கள் “பொருளாதார” அணுகுமுறையைப் பின்பற்றுகின்ற பொழுது நான் “அரசியல் அணுகுமுறையைப் மேற்கொள்வதற்காகவும் அவர்கள் இருவருமே என்னை இடித்துரைக்கின்றனர்…. இது வெளிப்படையான தத்துவார்த்தத் தவறாகும்; எனது “அரசியல்” அணுகுமுறை ஒரு மார்க்சியவாதிக்கு முரணான முறையில், ஏற்பில்லாத முறையில் இடித்;துரைக்கப்பட்ருப்பதை முன்பே கேள்விப்பட்ட காரணத்தால் ….எல்லா வகைகளிலும் அரசியல் பொருளியலை விட தலைமையான முக்கியத்துவமுடையது. வேறு வகையான வாதம் செய்வது என்பது மார்க்சியத்தின் அடிச்சுவடியையே மறுத்துவிடுவதாகும். நான் எனது அரசியல் மதிப்பீட்டில் தவறு செய்துள்ளேனா? அப்படி நீங்கள் கருதினால் அதைக் கூறுங்கள் மற்றும் நிருபியுங்கள். ஆனால் அரசியல் அணுகுமுறை “பொருளாதார” அணுகுமுறைக்குச் சமமானது என்ற நீங்கள் கூறும் போது, “இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்” என்ற சொல்லும் போது நீங்கள் மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுத்து விடுகிறீர்கள். வேறு சொற்களில் கூறினால், அரசியல் அணுகுமுறை என்பதன் அர்த்தம் என்ன? தொழிற்சங்களின் பாலான தவறான போக்கு சோவியத் ஆட்சி அதிகாரத்தை நாசப்படுத்தும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நாசப்படுத்தும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் குப்புறக் கவிழ்க்கும் என்பதே. (ருசியாவைப் போன்ற ஒரு விவசாய நாட்டில் தொழிற்சங்கங்களுக்கும் கட்சிக்கும் இடையில் கட்சியின் தவறு காரணமாகப் பிளவு ஏற்பட்டால் சோவியத் ஆட்சி அதிகாரம் சரிந்து விழுவது நிச்சயம்.) ….தாம் உற்பத்தி வளர்ச்சியில் அக்கறை கொண்டிருப்பதாகவும் அப்படியிருக்க நம் மனதில் சம்பிரதாய ஜனநாயகத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பது போலவும் நிலைநாட்ட டிராட்ஸ்கியும் புஹாரினும் முயலுகின்றார்கள். ஆனால் இந்தப் படப்பிடிப்பு தவறானது. …இந்தக் காரியத்தில் சரியான அரசியல் அணுகுமுறை இல்லாமல் சம்பந்தப்பட்ட வர்க்கத்தால் ஆட்சியில் நிலைத்திருக்க முடியாது, பின்விளைவாக அது தனது உற்பத்திப் பிரச்சனைக்கத் தீர்வு காணவும் திரணியற்றதாகிவிடும்” என்று ஸ்டாலினோ, மாவோவோ கூறவில்லை, லெனின் தான் கூறுகின்றார். மார்க்சியத்தை கைவிட்டு கதம்பங்களாக பாட்டாளி வர்க்க ஆட்சியை தூக்கியெறிய கோஷ்டிவாத பிரதிநிதியான டிராட்ஸ்கி முனைந்தான். முதலாளித்துவ மீட்சிக்குரிய உள்ளடகத்தை அன்றே டிராட்ஸ்கி முன்வைத்தான். பாட்டாளி வர்க்க ஆட்சியின் உயிரை கழுத்தைத் திருகி கொன்றுவிடும் முயற்சியில் டிராட்ஸ்கி ஈடுபட்டான். கோஷ்டிவாதத்தையும், பிளவையும் முன்நிறுத்தி தனது தலைமையை லெனினுக்கு மாற்றக முன் தள்ளிய டிராட்ஸ்கி, பாட்டாளி வர்க்க அரிச்சுவட்டையே மறுத்து நின்றான். லெனின் முன்வைப்பது மார்க்சியமல்ல என்று தூற்றி கொச்சைப்படுத்தினான். இதையே பின்னால் ஸ்டாலினுக்கும் செய்தான். லெனின் மார்க்சியத்தை கைவிட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய டிராட்ஸ்கி, அரசியல் அடிப்படையை மறுத்து பொருளாதார கூறைக் கொண்டு சமுதாயத்தை மாற்ற முடியும் என்றான். இதைத் தான் குருச்சேவும், தெங் சியவோ பிங்கும் செய்தானர். இதனால் தான் டிராட்ஸ்கியவாதிகள் அதை முதாலளித்துவ மீட்சியாக எற்பதில்லை. அன்று டிராட்ஸ்கி வெற்றி பெற்று இருந்தால், 1920 களிலேயே சோவியத்தில் முதலாளித்துவ மீட்சி டிராட்ஸ்கியின் தலைமையில் நடைபெற்று இருக்கும். இதை லெனினிய ஆய்வுரைகள் தெட்டத் தெளிவாகவே சந்தேகத்தக்கிடமின்றி நிருபிக்கின்றன. டிராட்ஸ்கி அன்று தோற்ற போதும், அவன் தனது ஆயுள் வரை முதலாளித்துவ மீட்சிக்காகவே போராடினான். கோட்பாட்டிலும், சதிகளிலும் ஒன்று இனைந்து உலகளவில் சோவியத் எதிர்பளர்களை ஒன்று திரட்டினான்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17