Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

“வெல்வோம் அதற்காக...” புத்தக வெளியீட்டு விழா படங்கள்

நேற்றைய தினம் லண்டன் கரோ பகுதியில் முன்னணி வெளியீட்கத்தின் முதலாவது வெளியீடான தோழர் சீலனின் போராட்ட அனுபவமான “வெல்வோம் அதற்க்காக...” நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. அதன் படங்களை இங்கே காண்கின்றீர்கள்.

விழாவில் புத்தகம் குறித்த தமது கருத்துக்களை முன்வைத்து, தோழர்கள் சேனக்க, காமினி, வேலு, பேராசிரியர் நித்தியானந்தன், தயானந்தா, சபேசன், ஸ்ரான்லி மற்றும் தோழர்கள் உரையாற்றினர். ஈழ விடுதலையில் பேரால் நிகழ்த்தப்பட்ட ஜனநாயக மறுப்பு, உட்கொலைகள், துன்புறத்தல்களை, தவறுகளை முடிந்த வரை மக்கள் முன்வைக்க வேண்டிய தருணம் இது. இது போன்ற நூல்கள் பல எழுதப்பட வேண்டும் என எல்லா பேச்சாளர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நூலை வாசித்த சிங்கள தோழர் காமினி பஞ்கலிங்கம் அவர்கள், நூலை பற்றிய விரிவான உரை ஒன்றினை சிங்கள மொழியில் ஆற்றியதுடன் இந்நூல் சிங்கள மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்படல் வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தோழர் ரயாகரன் அவர்கள் தனது உரையில் முன்னணி பதிப்பகத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக உரையாற்றியதுடன், விரைவில் முன்னணி பதிப்பக வெளியீடாக வரவுள்ள மூன்று புத்தங்கள் பற்றியும் அறிவிப்பு செய்தார். மேலும் யாழில் வருகின்ற மாதம் ஆரம்பிக்கவுள்ள படிப்பகம் புத்தக நிலையம் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் தெரிவித்தார். மேலும் கடந்தகால போராட்ட வரலாற்றினை ஆவணப்படுத்துவது எதிகால போராட்டத்திற்கு மிக அத்தியாவசியமானது எனத் தெரிவித்ததுடன், கடந்தகால வரலாற்றினை பதிய முன்வருமாறு அங்கு வருகை தந்திருந்த ஈழப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கோரிக்கை விடுத்ததுடன், அதனை புத்தகமாக வெளியிடும் பணியில் முன்னணி பதிப்பகம் ஆர்வமாக செயற்படும் எனவும் அறிவித்தார்.

மேலும் சிறுவர்கள் கலந்து கொண்டு, ஈழத்து கவிஞர்கள் இயற்றிய பாடல் பாடிய கலை நிகழ்வும் இடம் பெற்றது.