Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மைத்திரி - ரணில் தேசிய அரசின் மாணவர் மீதான வன்முறை!

இன்று (31.03.2015) கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது, கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து அதிரடிப்படை மற்றும் பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் அமைதியாக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை பிரயோகித்து, மாணவர்கள் பலரைக் கைது செய்துள்ளனர்.  

இன்று பிற்பகல் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன் ஆரம்பமான இந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி ஹைலெவெல் வீதி ஊடாக கொழும்பு நோக்கி சென்றது. சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி பெற்று  நடத்தப்பட்ட இப்போரட்டத்திற்கு சரியான ஏற்பாடுகளை செய்து கொடுக்கத் தவறிய பொலிசாரும், அதிரடிப்படையும்  மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறி உள்ளனர்.

இப்போராட்டமானது,

உயர் கல்வியை தனியார்மயப்படுத்தலை நிறுத்து!

மாணவர்களின் அரசியல் சுதத்திரத்தை மதி!

கல்விக்கான மானியத்தை உயர்த்து!

சுகாதாரக் கல்வியின் தரத்தைக் குறைக்காதே!

மற்றும் அனைத்து  பயங்கரவாதச் சட்டங்களையும் உடனே அகற்று! என்பது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்டது. இப்போராட்டத்தை, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது .