Wed04172024

Last updateSun, 19 Apr 2020 8am

சுதந்திர வைத்திய சேவையை வென்றெடுக்க அணிதிரள்வோம்!

அன்புக்குரிய தாய்மாரே, தந்தையரே, சகோதரர்களே, சகோதரிகளே!

நாடு முழுவதும் உள்ள வெளிநோயாளர் பிரிவில் வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் தமது முறை வரும்வரை காத்து நிற்பதை நாம் அன்றாடம் காண்கிறோம். அதிகாலையில் இருந்தே மருந்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் படுகின்ற துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

'தனியார் வைத்தியசாலைகள், சனல் நிலையங்கள் போதியளவு இருக்கும் போது நீங்கள் ஏன் அரச வைத்தியசாலையை நாடுகிறீர்கள்?"

பதில் தெளிவானது, பணம் இல்லாமையால் தானே? அதேபோல் உங்களுக்கு வைத்தியசாலையில் தரப்படும் மருந்து சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளில் சில அத்தியாவசிய மருந்துவகைகள் சிலவற்றை 'பார்மஸியில்" வாங்கும்படி அவர்கள் கூறுவது ஏன்? அவை வைத்தியசாலையில் இல்லாதது ஏன்?

இந்தப்பிரச்சினைக்கு நாம் அனைவரும் பதிலை தேடியாக வேண்டும். சுதந்திர வைத்திய சேவை நீடிக்கப்போவதில்லை. தற்போது எம்முன் இருப்பது அதனை வென்றெடுக்கும் போராட்டம்.

சுதந்திர வைத்திய சேவை மக்களின் மறுக்க முடியாத உரிமை. அதாவது நோய் நெடிகள் வந்தால் இலவச வைத்திய சேவையை பெற்று உயிர் வாழ்வதற்காகும். அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளை 'பார்மஸியில்"  வாங்கும்படி கூறுவதன் அர்த்தம், பணமில்லை என்றால் மரணித்துவிடு என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? சுதந்திர வைத்திய சேவை என்பது எமது உரிமை  அதனை பறித்தெடுப்பதற்கு வெவ்வேறு வழிகளில் பல்வேறு விதமான சட்டங்களை கொண்டு வருவதற்க்கு முன்பதாகவே நாங்கள் உங்களை அறிவுறுத்துகிறோம்.

இன்று இலங்கை மக்கள் பெரிய அளவில் தொற்று நோய்களல்லாத    டெங்கு, சிறுநீரக நோய் போன்றவற்றால் அதிக அளவில் மரணிக்கிறார்கள். ஆட்சியாளர்கள் இதைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள். மறுபுறமாக மருந்து வியாபாரிகளிடம் எமது உயிர்வாழும் உரிமையை ஒப்படைக்க ஏற்புடையதான சட்ட திடட்ங்களை தயாரிப்பதில் ஆட்சியாளர் அக்கறை செலுத்தி  வருகின்றனர்.

இது தொடர்பில் நாங்கள் உஙகளுக்கு பல விடயங்களை கூறிவைக்க விரும்புகிறோம். 2014 மருந்து, உபகரணங்ள் ஆகியவை மற்றும் வாசனை திரவியங்கள் சட்மூலம் ஊடாக புதிய சட்டமூலம் தற்போது சுகாதார அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த சட்டமூலம் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது சூழ்ச்சியின் முதலாவது கட்டம். தேசிய பத்திரிகைகளில் கூட இவ் அறிவித்தல் சிங்கள, தமிழ் மொழி பெயர்ப்பு பிரசுரிக்கப்படவில்லை. இது மட்டுமல்ல உங்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் எஞ்சியிருந்த சட்ட பாதுகாப்பு கூட இந்த பயங்கர சட்டத்தின் மூலம் இல்லாமல செய்வதற்க்கு சுகாதார அமைச்சு மருந்து வியாபாரிகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ஒரே மருந்தை பல்வேறு பெயர்களில் அதிக விலைக்கு விற்க முடியும். மருந்தின் பெயரால் சில்லறை நாணய விலைக்குரிய மருந்துகளை 20, 30 ரூபா விலைக்கு விற்க முடியும். புதிய சட்டமூலத்திற்கு இணங்க வைத்தியர் ஒருவருக்கு மருந்து சிட்டையில் மருந்தின் பெயரை குறிப்பிட முடியும். இந்த சட்டமூலத்தின் ஊடாக ஆட்சியாளர் பிரதிநிதித்துவம் செய்வது மருந்து கம்னிகளின் லாபத்துக்காகவேயன்றி, நோயாளரின் உயிர் பாதுகாப்பை முன்னிட்டல்ல. எமது நாட்டில் தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்து பலதடவை அகப்பட்டுள்ளார்கள். மருந்து வகைகளை ஒழுங்குபடுத்த மருந்து கம்பனிகளின் முகவர்கள் தலையீடு செய்ய புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரச்சினை இந்த சட்டமூலம் மட்டுமல்ல. முழு சுகாதார சேவையும்  நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. எம்மை பிடிக்கும் நோய்கள் மருந்து வியாபாரிகளுக்கு லாபத்தை கொடுக்கிறது. சுகாதார சேவை வியாபார துறையாக மாற்றுவதன் இறுதி முடிவு பணமில்லாத ஏழைகளுக்கு மரணத்தையே பரிசாக வழங்கும். நாங்கள் இதற்க்கு இடமழிப்பதா? அல்லது இந்த துஷ்டதனத்தை தோற்கடிப்பதா?

இந்த நிலைமையை தோற்கடிப்பதானால் சுகாதார சேவை நிர்வாக தொழிலாளர்கள், நோய்வாய்பட்டுள்ள – எதிர்காலத்தில் நோயாளர்களாகக் கூடிய அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். உமக்குரித்தான சுதந்திர வைத்திய சேவையை பாதுகாக்க முடிவது அனைத்து மக்களும் ஒன்றிணைந்த போராட்டத்தினால் மட்டுமேயாகும்.

இந்த போராட்டத்தில் பங்காளராகும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.


முன்னிலை சேஸஷலிஸ கட்சி