Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

உக்ரைனில் தலையீடு அதிகரிப்பு: ரஷியாவுக்கு அமெரிக்கா கண்டனம்!

உக்ரைன் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதற்காக சர்வதேச எல்லைக்கு அப்பால் இருந்து பணத்தின் மூலம் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ரஷியா ஈடுபடுவதுடன், பிரிவினைவாதிகளையும் ஊக்குவிக்கிறது.!

கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளை ஒடுக்கவும், சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து உக்ரைனின் சுதந்திரத்தை நிலைநாட்டவும், கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைனுக்கு ஒரு பாலமாக திகழவும் ரஷியாவுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு போரை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. உக்ரைனின் நலனில் அக்கறை கொள்ளவில்லை எனில் சர்வதேச சமூகத்தில் இருந்து ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்படும் நிலையை எதிர்கொள்ளும்!

நாம் பொருளாதார வலிமையுடன் கூடிய (அமெரிக்கா) வானளாவிய அதிகாரம் பெற்றிருந்தாலும், எங்கள் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் யாருக்கும் நாங்கள் கட்டளையிட மாட்டோம்.!

இவ்விரு சண்டியர்களும் வல்லாதிக்கத்தின் பாற்பட்ட அடக்கி-ஒடுக்கலில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். ஒருவர் தன்னல வல்லாதிக்கத்தை உக்கிரைனுக்குள் செலுத்த முடியாமல், வெள்ளாடு நனையுதுதென்ற வேங்கைப் புலியாட்டம் (உக்கிரைனின் சுதந்திரத்திற்காக) அழுகின்றார். "எங்கள் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் யாருக்கும் நாங்கள் கட்டளையிட மாட்டோம்" எனும் "ஜனநாயக விழுமியப் பாங்கின் பாற்பட்ட பரிணாமத்தை" கேட்கும் உலக மக்கலெல்லாம் புல்லரிப்பில் உள்ளார்கள். ஈராக்கின் கனிவளங்களை தனதாக்கியபின் அந்நாட்டையே சுடுகாடாக்கியதும், சதாமை துடிக்க துடிக்க சாகடித்ததும் யார் விருப்பின் பாற்பட்டது?.....