Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்திய தேர்தல் ஸ்பெசல்கள்….

மோடி வந்தால் மோட்சம் கிடைக்கும்! பொன் ராதாக்கிருஸ்னன்

இஸ்லாமியர்களுக்கு நரேந்திர மோடி அரசுதான் முழுமையான, பாதுகாப்பான அரசு என்பதை பல்வேறு புள்ளி விவரங்களுடன என்னால் தெரிவிக்க முடியும்…வை.கோ.

பா.ஜ.கட்சி ஆட்சி அமைத்தால் அயோத்தியில் ராமர் கோயில்! – பாஜக தேர்தல் அறிக்கை

தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போருக்கு ஆதரவு: கருணாநிதி!

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இந்தியாவை பிளவுபடுத்தும் நச்சுக் கருத்துகள் இடம் பெற்றுள்ளது….. சிதம்பரம்

தமிழர்கள் வாழவேண்டுமெனில் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: சீமான்

பிரதமர் பதவியோ அமைச்சர் பதவியோ எங்களுக்கு முக்கியம் அல்ல. எங்களை பொறுத்த வரையில், தமிழகத்தின் நலன் தான் முக்கியம். தமிழகம் முன்னேற என்னென்ன திட்டங்கள் தேவை என்பது தான் எங்கள் சிந்தனை!.... ஜெயலலிதா

காமராஜர் பிள்ளைகளை படிக்க சொன்னார். ஆனால் திராவிட கட்சிகள் குடிக்க சொல்கிறது. இப்போது பள்ளி மாணவர்கள், பெண்கள் கூட குடிக்க தொடங்கியுள்ளனர். தமிழக காங்கிரஸ்

குஷ்பு வந்துட்டாங்க: ஓடிவாங்கோ…ஓடி வாங்கோ!

குஷ்பு வந்திருக்கிறார் செய்தி பரவியதும், குடித்துக் கொண்டிருந்த குடிகாரர்கள் எல்லாம் பாட்டிலும் கையுமாக ஓடி வந்தாங்களாம்.

ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு, மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இல்லை. கலைஞருக்கு 92 வயசாகிறது, அவர் இந்த வயதிலும் தொண்டர்களின் முகத்தை பார்க்கணும் என்பதற்காக காரில் போகிறார். ஆனால் ஜெயலலிதாவோ ஹெலிகாப்டரில் பறக்கிறார். என்றதும் உடன் பிறப்புகளும் அந்தரத்தில் பறந்தார்களாம்.

"அண்ணன், தம்பி உறவிலிருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது' ! கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோம்…. சகோதர சண்டையால் திமுகவில் இருந்தே நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி