Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்தியாவின் உதவியுடன் வடமாகாணசபையை இயக்க முடியும் - ஐ.தே.கட்சி

அரசாங்கம் தற்போது வடமாகாண சபைக்கு எதிரான அடக்குமுறையை கையாண்டு வருகிறது. வடமாகாண சபையை சுயாதீனமாக செயற்பட மத்திய அரசாங்கம் தடையாக இருக்கிறது. இந்தியாவின் உதவியுடன் வடமாகாண சபையை தனித்து இயங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம் என்று ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது

"உக்ரெயினில் இருந்து கிரைமியாவை ரஷ்யா பிரித்தமைக்கு, இலங்கை அரசாங்கம் வரவேற்பை தெரிவித்திருக்கிறது". எனவே நீங்கள் இப்படித்தான் என்றால் நாங்களும் இந்திய உதவி கொண்டு உப்படித்தான் வடமாகாண சபைக்கு செய்வோம் என்கின்றது யூ.என்.பி. கூட்டமைப்பு ஓடிச் சறுக்கிய (இந்தியக்) குதிரையில், யூ.என்.பியும் ஏறியோட ஆசைப்படுகின்றது. அந்நியப் பாதாரவிந்தங்களின் பாற்பட்ட இருபகுதியினரும் அந்நியங்களுக்கு ஊடான "இலவச ஆக்கிரமிப்பின்" மூலமே மகிந்தாவை அகற்றவும், தாம் நினைத்ததை நடாத்தவும் துடிக்கின்றார்கள். இவர்கள் தங்களுக்கானவர்கள் இல்லையென மக்கள் நிராகரிக்க, நாங்கள் உங்களுக்காகத்தான் உலகமெல்லாம் ஓடுகின்றோம் ஓடுகின்றோம்……என்கின்றார்கள்.