Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தாயும், மகளும் பூஸா முகாமில் அடைப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி  3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்திய தேவைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது அந்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததையடுத்து, அந்த உத்தியோகத்தர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் குற்றவாளி ஒருவரைத் தமது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பதற்காகவே, விஜயக்குமாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

காணமல் போயுள்ள தனது மகனுடைய விடுதலைக்காகப் போராட்டம் நடத்தியமைக்காகவே இந்தப் பெண்ணும் அவருடைய மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதில்  எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை. இந்த தாயும் மகளும் தமது மகன்களுக்காகவும் சகோதரர்களிற்க்காகவும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த பலரில் அடங்குவர்.

மேலும் இந்த தாயினையும் மகளையும் கடந்த சில நாட்களாக அரச படைகளின் உளவுப்பிரிவும், இனந்தெரியாத நபர்களும் தொடர்வதாகவும் தமக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் சனல் 4 தொலைக்காட்சிக்கு ஒரு விசேட ஒளிப்பதிவினை அனுப்பியுள்ளனர். 

குற்றவாளி துரத்தல், பொலீசார் மீது துப்பாக்கி பிரயோகம் என்ற நாடகத்தினை அரங்கேற்றி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

காணாமல் போன உறவுகள் குறித்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையே இது.