Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தாவெனும் "இனவாத புற்று நோயாளி"

மகிந்தா யாழ் வந்தார். தெல்லிப்பளையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். வடமாகாண முதலமைச்சரும் கலந்து கொண்டார். இருவரும் ஒரே மேடையில் பரஸ்பரம் கருத்து மோதலில் ஈடுபட்டனர். யாழிற்கு வந்த மகிந்தா தானொரு "இனவாத புற்றுநோயாளிதான்" என நிரூபித்து சென்றுள்ளார்.

முதலமைச்சர் தனது உரையில்: "வடக்கில் தொடரும் இராணுவப் பிரசன்னத்தால மக்களின் வாழ்வு சவாலாகியிருப்பதாகவும் சிவில் நiடைமுறைக்கு வடக்கை கொண்டுவர வேண்டும் எனக் கோரியிருந்தார்."

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ: "வடக்கு முதலமைச்சருக்கு தெரிந்திருக்குமோ தெரியவில்லை. கடந்த காலத்தில் மிக குறுகிய தூர இடைவெளியில் பல படைமுகாம்கள் காணப்பட்டன. அப்போது 75 ஆயிரம் படை யினர் வடமாகாணத்தில் இருந்தார்கள். இன்று அந்த முகாம்கள் மிக குறைக்கப்பட்டுள்ளது. படையினரின் எண்ணிக் கயும் 12 ஆயிரமாக குறைக்கப் பட்டுள்ளது!" ஜனாதிபதி இப்படி பேசி உண்மையென எல்லோரையும் நம்ப வைக்க முற்படுவது வரலாற்றில் புதுமையானதல்ல. பேரினவாத "முட்டாள்களின" தர்க்க நிலை கொண்ட இப்பேச்சிற்கு நூறு புத்திசாலிகளால் பதில் சொல்ல முடியுமா? அதிகார வர்க்க மையங்களின் காலம் காலமான "லொஜிக்" செயற்பாடுகள் இவைகள்தானே.

இலங்கையில் பேரினவாத-இனவெறி என்பது அரசியல் புற்றுநோய் வகைப்பட்டதாகியுள்ளது. இந்நோயால் மகிந்தா மிக மிக பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோய்க்கான மருந்து வைத்திய உலகத்திடம் இல்லை. சகல இனவாதங்களையும் வெறுத்து ஒதுக்கும் மக்களிடம்தான் உள்ளது.