Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அணிதிரள்வோம்

altதமக்கெதிரான கருத்துக்களைக் கூறுபவர்கள் அடக்குமுறை செய்யப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதாக சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர முதலிகே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

"30ம் திகதி ஊடக அமைப்புக்களால் நடத்தப்பட்ட ஊடக நிக்ழவொன்றின் போது திடீரென அங்கு நுழைந்த பொலிஸார் அங்கிருந்த ஐ.எப்.ஜே. அமைப்பைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்களை பலவந்தமாக இழுத்துச் சென்றுள்ளனர். அக்டோபர் 31ம் திகதி மட்டகளப்பிலிருந்து வெளிவரும் @வார உரைகள்" பத்திரிகையின் ஆசிரியர் எம்.ஐ. ரஹ்மத்துல்லா பொய்க் குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுக் கருத்துக்கள் வெளியிடுவதற்கு உள்ள உரிமை மீது தொடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான இந்தத் சம்பவங்களை நாங்கள் அருவருப்போடு வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த அடக்குமுறைக்கு அரசாங்கம் நடைமுறை சட்டத்தையே பயன்படுத்துகின்றது. ஊடகவியலாளர்களிந் நிகழ்விற்கு இடையூறு விளைவித்தமைக்கு காரணமாக, சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள அனுமதி இல்லை என்ற வாதத்தையே முன்வைத்தனர்.

"வார உரைகள்" பத்திரிகையின் ஆசிரியரது வளவிற்குள் கஞச்பாப் பொதியை வைத்துவிட்டு, வீட்டில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே பத்திரிகை ஆசிரியர் ரஹ்மத்துல்லா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் பிரதேசத்தின் பிரபல பத்திரிகையாளராக இருப்பதோடு, போதைவஸ்து வியாபாரத்தில் அவர் சம்பந்தப்படவில்லையென பிரதேச மக்களுக்கு நன்றாகவே தெரியும். அமைச்சர் ஹிபுஸ்ல்லா தொடர்பான செய்தியொன்று பத்திரிகையில் வௌியிடப்பட்டமையே இந்த கைது சம்பவத்திற்குக் காரணமெனத் தெரியவருகிறது. இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரும் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். ஆசிரியரை அடக்குவதற்காக இம்முறை பொலிசார் வந்துள்ளனர். இப்படியான சம்பவங்கள் நடப்பது இது முதன்முறையல்ல. இவற்றிற்கு காத்தான்குடி பொலிசார் மாத்திரம் சம்பந்தப்படுவதில்லை. உதாரணமாக, அக்டோபர் 18ம் திகதி காலி பயங்கரவாத தடுப்புப்பொலிஸ் பிரிவினால் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, ஹபாராதுவ பிரதேசத்தில் சமூக செயற்பாட்டாளரான நோபட் சில்வா கைது செய்யப்பட்டார். பிரதேசத்திலுள்ள சப்பாத்துத் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளினால் சுற்றாடலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படும் அழிவுகளுக்கு எதிராகப் போராடியதன் காரணமாக வளவிற்குள் ஆயுதத்தைப் போட்டு அவர் கைது செய்யப்பட்டமை இரகசியமல்ல. மாற்றுக் கருத்துள்ளவர்களை அடக்குவதற்கு அரசாங்கம் சட்டத்தை கையிலெடுப்பது தெரிகிறது. கருவேப்பிலையை கருவேலமாகக் கருதும் கோட்பாட்டின்படியே அரசாங்கம் செயற்படுகிறது. ஆட்சியாளர்களின் தேவைகளுக்காகவே சட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை ஆட்சியாளர்களின் தேவைகளை அடிக்கடி நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன. மாற்றுக் கருத்துக்களை அடக்குவதற்காக அரசாங்கம் சட்டத்தைப் பயன்படுத்துவதோடு, மக்களது ஜனநாயக உரிமைகள் தொடர்பில் வேறு நிலைபாட்டிலேயே செயற்படுகிறது. உதாரணமாக, சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது கொல்லப்பட்ட நிமலராஜன் தொடர்பான மனித உரிமைகள் மீறல் வழக்கு விசாரணையின்போது, மனித உரிமைகள் சட்டம் பயங்கரவாதிகளுக்குப் பொருந்தாது எனக் கூறப்பட்டது. சட்டத்தை செயற்படுத்துவது அல்லது செயற்படுத்தாமலிருப்பது போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடு என்வென்பது நன்றாகவே தெரிகின்றது. இதற்கு முன்னர், முன்னால் பிரதம நீதியரசர் விடயத்திலும் இந்த அரசியலே செயற்பட்டது.

எவ்வாறாயினும், இந்த நிலைமை மக்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கப்போதை உறுதியாக நம்பும் சம உரிமை இயக்கம், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒற்றுமையாகுமாறும், அணிதிரளுமாறும் சிங்கள-தமிழி-முஸ்லிம் அனைத்து மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றது.