Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

விளிம்பு நிலை (Liminal stage)

விளிம்பு நிலை என்ற சொல்லிற்கான உண்மையான அர்த்தத்தினை கண்டடைய வேண்டிய தேவை இருக்கின்றது. இந்தச் சொற்பதம் என்பது பல மயக்கத்தை கொடுத்துள்ளதாகவே கருத வேண்டியிருக்கின்றது. இங்கு (marginalization) தரப்படுத்துதல் அல்லது ஒதுக்குதல், ஒடுக்கப்படுத்தல் (oppressed, exploited) என்று சுரண்டப்படும் மக்கள் தொகுதியை கூற பயன்படுத்தப்படும் பொது சொற்பதங்களாகும். ஆனால் ஒடுக்கப்படும், சுரண்டலுக்கு உள்ளாகும் விழிம்பு நிலை என மக்கள் கூட்டத்தினை விழிப்பதற்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் மயக்கத்தை ஏற்படுத்துகின்றது. இங்கு மேற்கு தேசங்களில் பயன்படுத்தப்படும் அரசியல் சொற்பதங்கள் தமிழ்படுத்துவது ஒன்றும் இலகுவானது அல்ல. உதாரணத்திற்கு லும்பன் (உதிரிப்பாட்டாளி) பூர்சுவா (முதலாளித்துவ) வர்க்கம் என்ற சொற்தொடர்கள் பயன்பாட்டில் உள்ள போதிலும் அதற்கு நிகரான சொற்கள் தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் இருக்கின்றது. மேற்கண்ட சொற்கள் அரசியல் அரங்கில் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. ஆனால் விழிம்பு நிலை என்ற சொற்பொருள் குறித்து அரசியல் உலகில் பரீட்சையம் உள்ளவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை. ஆனால் இணைய விவாதங்களை நோக்குகின்ற போது இந்தச் சொல்லாடல் பின்னவீனத்தில் பின்னரான அரசியல் உரையாடல்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என அறிய முடிகின்றது.

“அடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதார சமூக அடுக்கமைவில் மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாகும். இவர்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக வரையறை செய்வது கடினம். எவ்வளவு உழைத்தும் தொடர்ந்தும் பின் தங்கி நிற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள். எளிமையான வாழ்வு முறைகளைத் தேர்ந்த துறவிகள் போன்றோர், குடிபோதை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பின் தங்கியோர், நோய் சமூகக் கட்டமைப்பு போன்ற இதர காரணிகளால் பின் தங்கியோர் என பல தரப்பட்ட மக்கள் அடித்தட்டு வர்க்கம் என்ற வட்டத்துக்குள் வரக்கூடும். ஆங்கிலத்தில் working class, underclass என்றும் வேறுபடுத்திக் காட்டுவர். அதற்கு சற்று ஒத்து தமிழிலும் உழைப்பாளிகள்இ விளிம்பு நிலை மக்கள் என்ற சொல்லாடல்களும் உண்டு.” (wikipedia)

சமூகத்தளத்தில் இயங்கும் நபர்களின் கருத்துக்கள் சில.......

"marginal என்பதை இங்கு விளிம்பு நிலை என்றே அழைத்து வருகிறார்கள், அதற்கு கீழறு நிலை என்றும் ஒரு சொல்லைப் பயன்படுத்தலாம். ஆனால் சில சொற்கள் பொது வழக்கிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் அதையே நாம் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்பது எனது கருத்து."

“விளிம்பு நிலை மனிதர்கள் என்பவை மிகவும் ஒடுக்கப்பட்ட, சமூகத்தின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு பொருளீய, பண்பாடு சமூக பிரிவினரைக் குறிக்கிறது. இது ஒரு பின் நவீனத்துவ அணுகுமுறை. வர்க்கமற்ற சமூக வகையினம் இருக்கிறது பார் என்று சொல்வதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது என் கணிப்பு. வர்க்கப் பார்வையைத் தவிர்ப்பதற்கான இந்த முயற்சி வரவேற்கத் தக்கதல்ல. அனைத்து சமூக, பண்பாட்டு, ஆதீதன மன ரீதியான ஒடுங்கிய நிலையையும் நீங்க வர்க்கப் போராட்டத்தின் மூலமே ஒழிக்க முடியும் என்பது என் கருத்து.”

“ஒருங்கிணைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தைத் தாண்டி ஒருங்கிணைக்கப்படாத முடியாத உதிரிப்பாட்டாளிகள் வர்க்க ரீதியிலும் சமூக ரீதியிலும் வாழ்கையின் சமூக வரலாற்று அடுக்குகளின் அடித்தளத்தில் அழுத்தப்பட்டு துன்பத்தில் வாழ்பவர்களே விளிம்பு நிலை மனிதர்கள்!!.”

"விளிம்பு நிலை என மார்க்சிய வரையறை ஏதும் இல்லை தோழர். ஒடுக்கும் இனம் ஒடுக்கப்படும் இனம் என இரண்டு மட்டும்தான் உண்டு தோழர். மனித உரிமை விளிம்பு நிலை என்ற வார்த்தைகள் ஏகாதிபத்திய ஆதரவு தொண்டு நிருவனகளும் இ பின் நவீனத்துவ கும்பலும் புதிய இடது கும்பலும் பயன்படுத்தும் வார்த்தைகள்.."

விளிம்பு நிலை என்ற சொல்லாடல் தனித்தே வெறும் சொல்லாக தமிழ் பரப்பில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்கள் கூட்டத்தினை எவ்வாறு விழிக்கின்றது என்பதை அறிய வேண்டும். விளிம்பு நிலை என்ற சொல்லாடல் மானிடவியல் பாடநெறிக்கு உட்பட்டதாகும். மானிடவியல் பாடநெறி எடுத்துச் சொல்லும் விளக்கத்தினை விளிம்பு (marginal -Victor Turner) என்று பார்க்கின்ற போது பின்வருமாறு வரையறுக்கின்றது. எமது முன்னோர்களுக்கு ஏன் சடங்குகளைச் செய்கின்றார்கள்? ஏன் மனித சமூகத்தின் அவ்வாறான பழக்கங்கள் இருக்கின்றது என்பதையும், மனித கூட்டம் இந்தக் கட்டங்களை தாண்டிச் எவ்வாறு செல்கின்றது என்பதை விளக்குகின்றனர். (இதனை பிறகு சடங்குகள் பற்றிப் பார்ப்போம்)

“சமூகத்தில் விளிம்பு நிலையினர் (marginals) என்றும் தனித்த பிரிவினரையும் டர்னர் இனங்காண்கிறார். இவர்கள் மேற்கூறிய புறவயத்தாரிடமிருந்து வேறுபட்டவர்கள். விழிம்பு மக்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவின் பேராளர்களாக இருப்பர். அதோடு அவர்கள் சமூகம், பண்பாட்டு நிலைகளில் தனித்தன்மையுடன் விளங்குவர். சில சமயங்களில் ஒரு குழுவினர் மற்றுறொரு குழுவினருக்கு எதிர் நிலையினராகக் கூட இருப்பர். தாங்கள் தாழ்ந்த பிரிவிலிருந்து தோன்றியவர்கள் என்ற நிலை, நடைமுறையில் அமைப்புக்கு எதிராக "மீசமூகம்" கட்டமைக்கின்ற பண்பைக் கொண்டிருப்பதன் மூலம் தங்களை உயர்ந்த குழுவினராகக் கருதிக் கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் "அமைப்பு" குறித்து விமர்சனம செய்பவர்களாகவும், எதிர் - அமைப்பைக் கட்டமைத்து மீசமூகம் ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பர். எழுத்தாளர்கள், கலைஞர்கள், தத்துவவாதிகள், ஆகியோர் விளிம்பு நிலையினராக அமைகின்றனர் (225 பண்பாட்டு மானிவியல் மணிவாசகர் பதிப்பகம், 1999-ஜீலை பக்தவத்சலபாரதி)

இனக்குழுமங்களாக வாழ்ந்த சமுதாயத்தில் மனிதர்கள் செய்யும் சடங்குகளுக்கும், வழிபாடுகளுக்கும் விளக்கங்களை தேடிச் செல்லும் மானிடவியாளர்கள். அந்த இனக்குழுமத்தின் சின்னங்களின் குறியீடுட்டு அர்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இனக்குழுமம் என்ற நிலையில் இருந்து தேசிய இனங்களாக உருவான பின்னரும் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது.

கிறிஸ்தவத்தில் பிறக்கும் பிள்ளைகள் பாவத்துடன் சேர்ந்தே பிறப்பதாகவும், சாத்தான் குடியிருப்பதாகவும் கூறுகின்றது. கத்தோலிக்க சபையின் கருத்தானது எல்லோரது பாவங்களுக்காகவே யேசு மரித்தார் எனக் கூறுகின்றது. கடவுளைப் பெறுவதன் மூலமே பாவத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள், நரகத்திற்கு செல்வதில் இருந்து தப்பிக்க முடியும் எனக் கருதுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை திருமுழுக்கு பெறாதவர்கள் அனைவரும் பாவத்தில் இருந்து விடுதலை பெறமுடியாது. இவர்கள் சாத்தானின் பிள்ளைகளாகத் தான் இருக்க முடியும் எனக் கருதுகின்றது.

இதனை ஒரு நிலை அதாவது மனிதர்கள் பாவத்திற்கு உட்பட்டிருக்கும் நிலை. இதில் இருந்து அடுத்த நிலைக்கு செல்லும் காலம் ஒன்றிருக்கின்றது. அங்கு ஞானஸ்ஞானம் என்றும் சடங்கினை பெறும் வரையில் அவர் ஒரு கிறிஸ்தவராக ஆக முடியாது. இதற்காக சடங்கினை ஏற்படுத்தும் காலம் ஒன்றிருக்கின்றது. இந்தக் காலம் 30 நாட்கள் அல்லது விரைவாக சடங்கினை நிலைவேற்றிக் கொள்கின்றார்கள். இவ்வாறே பழங்காலத்திலிருந்து தைப்பொங்கல், ஆடிக்கூழ் போன்ற நன்றிக்கடன் செலுத்தும் விழாக்களும், இறந்தவர்களின் ஆவியைச் சாந்தப்படுத்த நிகழ்த்தும் சடங்குகளும் அடங்கும்.

கன்னிப்பெண்கள் இறந்தால், கற்பிணிப்பெண் இறந்தால் அதற்கான சடங்குகளை செய்கின்றனர். கற்பிணி, கன்னிப்பெண் இறந்தால் அவர்களின் ஆவிக்கு சடங்கு செய்ய வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. இறந்தபின்னர் சமாதானமற்று, நிம்மதியற்று அலையும் ஆவி, (ஆன்மா) என்பது முதல்நிலை (புறவய மனிதர்கள் நிலை (outsiderhood) அந்த ஆவிக்கு (ஆன்மா) சடங்கிற்கான தயாரிப்புக்களும், சடங்குமுறைகளும், சாந்தப்படுத்த எடுக்கும் முயற்சிகளும் இரண்டாம் நிலை (விளிம்பு நிலை (marginality - Liminal stage) இறந்த மனிதனிர் இங்குமில்லை அங்குமில்லை என்ற நிலையைக் குறிக்கின்றது. இதனை தான் மானிடவியலில் விளிம்பு நிலை என்று வரையறுக்கப்படுகின்றது. அங்குமில்லை இங்குமில்லாத நிலையில் இருக்கின்ற இறந்தவரின் ஆன்மாவின் சாந்திக்காக செய்யப்படும் சடங்குகள் ஊடாக (அமைப்பு தாழ்வு நிலை structural inferiority) இறந்த ஆன்மாவுக்கு சாந்தியையும் சமாதானத்தை ஏற்படுத்துவதுதாகும்.

இதற்கு இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போமானால் யாத்திரைக்கு செல்லும் காலங்களில் சகல பழக்கவழக்கங்கள், குடும்ப உறவுகள் எல்லாவற்றை ஓடுக்கி வாழ்கின்றார். யாத்திரையை தரிசனம் செய்கின்றபோது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு யாத்திரையை மேற்கொள்கின்றார். (விளிம்பு நிலை) ஆனால் யாத்திரை முடிந்த பிற்பாடு வழமையான வாழ்க்கையில் ஈடுபடுகின்றார். இவரின் யாத்திரை பூரணம் அடைவதற்கு யாத்திரிரையினால் ஏற்படும் மனச்சாத்தியும், திருப்தியுமாகும். யாத்திரை சடங்கு ஒரு நிலையில் இருந்து இன்னொரு (transformation) நிலைமாற்றுவது இந்த இடைப்பட்ட காலத்தை விளிம்பு நிலையாகும். இங்குமில்லை அங்குமில்லை என்ற இரணடும் கெட்டான் நிலையில் இருப்பதைக் குறிக்கின்றது.

விளிம்பு நிலை என்கின்ற போது இவர்கள் மனிதர்களாக அல்ல மாறாக இவர்கள் ஒரு இடைநிலையில் இருக்கின்றார்கள் என்று தான் விளிம்புநிலை வரையறை விளக்கம் கொடுக்கின்றது. இவர்கள் மக்களாக இருக்கின்றார்கள். அது எவ்வாறு சாத்தியமாகும். இதுதான் இங்கு எழும் கேள்வி.

ஒரு மனித கூட்டம் பொருளாதாரத்தில் வலிமை இழந்தவர்களாக இருக்க முடியும். இதனால் படிப்புவாசனை, உங்களைப் போல் வாழாது ஒலைக் குடிசையில் தெருவோரத்தில் உரிமை பறிப்பட்டு வாழலாம். உங்களைப் போல உடுபுடவை உடுத்தாமல் இருக்கலாம், உழைப்பையே நம்பிய மனிதராக இருக்கலாம், தனிபாத்திரங்களில் உணவு கொடுக்கலாம். ஆனால் இவர்களை எந்த சடங்கு செய்து மனிதர்கள் என்ற நிலைக்கு கொண்டுவரப் போகின்றீர்கள். இவர்கள் என்ன தீட்டுப் பட்டா இருக்கின்றனர் அல்லது உடலை விட்டுப்பிரிந்த ஆவியாகவா உலாவுகின்றார்கள், அல்லது பாவத்துடன் பிறந்து பின்னர் ஞானஸ்தானம் என்ற சடங்கின் மூலம் பாவத்தில் இருந்து மீள்வது போல இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் சமூகத்தில் தாழ்வுற்ற நிலைக்குச் செல்லும் சமூகத்தின் உறுப்பினர்களை தலித்தியத்தைப் போலவே வர்க்க அமைப்பிற்குள் அமையமுடியாது என்று கருதுகின்றது. இதில் இன்னுமொருவிடயம் என்னவெனில் பல்கலைக்கழகங்களில் கற்றவற்றை சமூகத்தளத்திற்கு கொண்டுவருவதாகும்.