Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

உணவுகளை அன்பளிக்குமாறு பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை!

பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் பொருளாதாரம் படுபாதாளத்தில் தள்ளப்பட்டு மீளமுடியாத சிக்கலில் சிக்குண்டு கிடக்கின்றது. இதன் காரணமாக விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் என்பன தலைவிரித்தாடுவதன் காரணத்தினால் மக்கள் பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். தமது வாழ்க்கை செலவினை சமாளிக்க முடியாமல் அன்றாட வாழ்வுக்கு அல்லல் பட்டுக் கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியினை காரணம் காட்டி மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த மானியங்களை அரசு பாரிய அளவில் குறைத்துள்ளது.

அண்மையில் வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்த 2000 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின்படி 65ம% மானோர் தங்களின் தினசரி உணவினை வாங்குவதற்க்காகவும் 35%மானோர் ஏற்கனவே பெற்ற கடனை கட்டுவதற்க்காகவுமே கடனுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளனர்.

லிவப்பூல் பகுதியில் அண்மைக்காலமாக குற்றங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது. இது குறித்து விசாரித்த போது விற்பனை நிலையங்களில் உணவுகளை திருடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம், உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் உயிர் வாழ்வதற்க்காக சாப்பாடுகளை களவெடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கின்ற விடயமாகவுள்ளது.

2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர் முதல் தடவையாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பிரித்தானியாவில் உணவுகளை அன்பளிப்பாக தருமாறு கோரிகை விடுத்துள்ளது. இப்படி கோரிக்கை விடுக்குமளவிற்கு பிரித்தானியாவில் நிலைமை நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது.

ஆனால் அரசாங்கமோ பொருளாதார முன்னெற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளதாகவும், அடுத்த ஆண்டிலிருந்து பாரிய வளர்ச்சியினை காணலாம் என தமது அடுத்த தேர்தல் வெற்றியினை குறிக்கோளாக கருதி பொய் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முனைந்து கொண டிருக்கின்றது.

Red Cross To Give Food To Hard-Up UK Families

_