Mon02242020

Last updateTue, 10 Dec 2019 10am

சுகாதாரம்

யுத்தம் மக்களின் வாழ்வாதாரங்களை மட்டும் அழித்து விட்டுச் செல்லவில்லை. யுத்தம் கட்டுமானங்களை சிதைத்துச் சென்றுள்ளது. யுத்தமென்பது பண்பாட்டு, உளவியல், வாழ்வியல் சிந்தனையிலும் அழிவை ஏற்படுத்திப் போயியுள்ளது. யுத்தத்தின் மூலம் இவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதற்காக இழந்தவற்றை மீளவும் உருவாக்கித் தான் ஆகவேண்டும். யுத்தம் உளவியல் பிரச்சினையையும், புதுப் வியாதிகளையும் உருவாக்கி விட்டுச் சென்றுள்ளது.

உளவளப்பிரச்சினைக்கு சிலதற்காலிகத் தீர்வுகள் கிடைத்துத் தான் உள்ளது. உதாரணத்திற்கு சமயக் கோவில்கள், தேவாலயங்கள், உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் (சாந்தி) நிறுவனங்கள் ஊடாக ஒரளவு தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. உளவியல் தேவை என்பது பெரும் நகரங்களைவிட கிராமங்களுக்கே அதிகம் கவனிப்பின்றி பாதிக்கப்படுகின்றது.

யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் இருந்து வெளியேறிய கதிரியம் இருந்து கொண்டே இருக்கும். கதிரியம் பல்வேறு வழிகளில் மனிதரின் உடலைத் தாக்குகின்றன. இதனால் புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. யுத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தற்பாதுகாத்துக் கொள்ளும் பொறிமுறையை இலங்கை ஆழும் அரசு மேற்கொள்வது சந்தேகமே. ஒரு இனத்தின் அழிப்பில் ஈடுபட்ட அரசு இவ்வாறு முன்னேற்பாட்டான விடயங்களில் ஈடுபடும் என்பது சந்தேகமே. இதேபோல படைகளில் இருந்த போர்வீரர்களின் பாதிப்புப் பற்றிய முன்னேற்பாடு இருப்பதா என்பதும் ஒரு சந்தேகமே.

சுகாதார சேவை என்பது முக்கியத்துவமான ஒரு துறையாகும். இந்தத் துறையினை வளர்த்தெடுப்பதன் ஊடாகவே ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது என்பது குடும்ப உறுப்பினிரில் இருந்து முழு நாட்டின் பிரசைகளின் உரிமைகள், உணர்வுகள் மதிப்பழிக்கப்பட வேண்டும். தனிமனிதர்களில் இருந்து முழுநாட்டின் பிரசைகளுக்குமான சுகாதார சேவையை வளர்த்தெடுக்க வேண்டும். சுகாதார சேவையை வளர்த்தெடுப்பது இன்றைய பொருளாதார அமைப்பு முறையில் அவ்வளவு இலகுவாக காரியமல்ல. அதுவும் இன்றையை உலக அரசியல் என்பது நவகாலனித்துவத்தி;ற்கும், தாராளமயமாக்கலுக்கும் ஆட்கொண்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை இந்தியா போன்ற நாடுகள் விதிவிலக்காகவில்லை. இந்த நாடுகளின் சுகாதார சேவையை அடிநிலை மக்களுக்கானதாக மாற்றுவதில் உள்ள சிக்கலை கவனத்தில் கொள்வோம்.

இந்த பொருளாதார அமைப்பின் அவல நிலை காரணமாக நாட்டின் திறைசேரியில் இருந்து நிதியினை சுகாதார சேவைக்கு ஓதுக்க முடியாது உள்ளது. ஒதுக்கப்பட வேண்டிய நிதியானது பணக்காரர்களுக்;கு கொடுக்கப்படும் வரிச் சலுகையினாலும் திறைசேரிக்கு நிதியத்திற்கு வரவேண்டிய வருவாய் என்பது வரமுடியாமல் போகின்றது.

சுகாதார சேவையை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகும். சுகாதார சேவையை வளர்த்தெடுப்பதால் நாட்டிற்கு பல நன்மைகள் இருக்கின்றது. ஒரு நாட்டின் வளர்ச்சியை அளவிடுதற்;கும் சுகாதாரத்தின் வளர்ச்சி அளவுகோளாகின்றது. ஒருநாட்டின் உழைப்பைக் கொடுக்கின்ற மனிதவலுவுக்கு ஆரோக்கியமான உழைப்பாளிகளை (உற்பத்திசக்தி) உருவாக்கப்பட வேண்டும். ஒரு நாடு உருவாக்கும் ஆரோக்கியமான உழைப்பாளிகளை உருவாக்கிக் கொள்ளாமைக்கு அழுக்காக இருக்கின்ற பொருளாதார உற்பத்தி முறை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

சுகாதாரத்தையும், வலுவுடைய சக்திகளை சுயமாக உருவாக்கிக் கொள்ள முடியாமைக்களான காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எமது வலுவை வலுப்படுத்தக் கூடிய அதிகார கட்டமைப்பு இல்லை. அதிகாரம் நிதிநிறுவனங்கள் போடும் சட்டதிட்டத்திற்கு அமைய செய்படுகின்ற காரணத்தினால் இறைமையற்ற தேசங்களின் குடிகளாக இருக்கின்றோம்.

சுயநிர்ணயம் கொண்ட தேசத்தின் இறைமை உள்ள குடிகள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் நிலையில் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். தன்னுடைய பொருளாதார அமைப்பை கட்டமைக்க முடியவில்லை. சுயநிர்ணயத்தை உடைய தேசங்களாகவும், குடிகளாகவும் இல்லை. அனைத்து தேசங்களின் சுயநிர்ணயத்தை பறித்து வைத்திருப்பது ஏகாதிபத்தியங்கள் என்பதை எம்மவர் புரிந்து கொள்ளவில்லை.

நான் எனது குடிகளுக்கு இலவசமான மருந்துவ சேவையை கொடுக்க விருப்புகின்றேன்!!! ஏன் எம்மால் முடியவில்லை??

தகுந்த சிறப்புத் தேர்ச்சியுள்ள ஊழியர்களை உருவாக்க விரும்புகின்றேன்!! ஆனால் என் எம்மால் முடியவில்லை?

எமது வரிப்பணத்தில் ஊழியர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். ஆனால் உருவாக்கப்படும் ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடுகின்றார்கள். விலைவாசி உயர்வு, பணவீக்கம், அரசியல் கெடுபிடி என்பனவும் ஊழியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றி விடுகின்றது.

தனியார் மயமாக்கலை அறிமுகப்படுத்துகின்றதுடன் மேற்கு தேசங்களில் தேவை சார் ஊழியர்களை உருவாக்கிக் கொள்ளும் திட்டங்களை புகுத்துகின்றது.

இலவச மருந்தினை வழங்க தடைபோடுகின்றது. மானியங்களையும், மலிந்த மருந்துக்களை உற்பத்தி செய்ய சர்தேச ஒப்பந்தங்கள் ஊடாக தடை போடுகின்றது. உற்த்தியாளர்களிடையே சுதந்திர போட்டியை மீறுவதாக காரணம் கற்பிக்கின்றது.

அதாவது மக்கள் என்பதற்கு அப்பால் முதன்மையானதாக உற்பத்திp நிறுவனங்களின் போட்டி சந்தைக்கான உரிமையை முன்னிறுத்துகின்றது.

இன்றைய உலக ஒழுங்கில் திறந்த பொருளாதாரக் கொள்கையை வலியுறுத்துவதன் ஊடாக மக்களின் வாழ்வை அழிக்கின்றது.

மேலைதேசங்களில் மக்களுக்கு இலவச மருத்துவத்தை கொடுக்கின்றது. விவசாயிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மானியம் கொடுக்கின்றது. அதேவேளை வளர்ந்த நாடுகளில் தொண்டர் நிறுவனங்ள் ஊடாக சிரமதானம் என்பது ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது. சிரமதானத்தினை சமூகத்தின் மீதான பிரசைகளின் அக்கறையைக் காண்பிப்பதாகவும், சமூகத்தின் மத்தியில் கருத்தியல் அழுத்தத்தை கொடுக்கின்றது.

வளர்ந்த நாடுகளில் புற்றுநோய் ஆராய்ச்சி, சிறுவர் துஸ்பிரயோம் அல்லது இருதய, வான்னூர்தி அவசரதேவை போன்ற தொண்டு நிறுவனங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இத்தொண்டு நிறுவனங்கள் ஊடாக நிதி சேகரிக்கப்படும். நிதியினைக் கொண்டு உள்ளுர் நிறுவனப்பற்றாக்குறையைத் தீர்த்துக் கொள்கின்றனர். சிலநிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களின் ஊடாகப் பெறும் நிதியைக் கொண்டே இயங்குகின்றது. முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியை கொண்டதாக இந்த தொண்டு நிறுவனங்களைப் பார்க்க முடியாது. இந்த கொண்டு நிறுவனத்தின் ஊடாக மக்களின் மக்களின் மீது மறைமுக சுமையையும், அரசின் பற்றாக்குறையை ப+ர்த்தி செய்யும் தொண்டர்களாகவும், பற்றாக்குறையின் காரணத்தினை அறிய விடாது முக்கிய பங்காற்றுகின்றது

மேற்கு தேசங்களின் தொண்டு நிறுவனங்கள் வளர்ந்து வரும் தேசங்களிலும் இவ்வாறான தன்னியல்பான அமைப்புக்களை உருவாக்கி அரசின் கடமையில் இருந்து அரசினை தப்பிக்கும் வழிகளை காட்டுகின்றது. புரட்சிகர சக்திகளுக்கு இடைய+றாக இவ்வாறான தன்னார்வு நிறுவனங்கள் செயற்பாடுகள் இடையூறாக இருக்கின்றது.

சமூகமாற்றத்திற்கான அமைப்பானது சமூகத்தின் தேவையினை முன்னோக்கியதான வேலைமுறைகளை கொண்டதாக இருக்க வேண்டும். மக்களின் தேவைகள், அரசியல் உரிமைகளின் தேவைகளில் இருந்தும் அமைப்பின் செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.

மக்களுக்கானது மக்களுக்கானது என்றும் ஜனநாயகம் என்றும் இடைவிடாது பிரச்சாரம் செய்தும் உள்நாட்டு அரசியல்வாதிகளும் சரி, ஏகாதிபத்தியங்கள் அவர்களின் நிதிநிறுவனங்களும் சுரண்டும் பொருளாதார அமைப்பில் எவ்வாறு மென்மேலும் சுரண்டிக் கொழுப்பது என்பது பற்றியே சிந்திக்கின்றார்கள்.

நாம் தெருவில் படுத்துறங்கும் மனிதர் தொடக்கம் சுயமாக தனது சுகாதாரத்தை பேணும் மனிதர்களின் நலனின் அக்கறை கொண்டு செயற்பட வேண்டியிருக்கின்றது. நாம் தெருவில் படுத்துறங்கும் மனிதர்களின் தேவையையும் பூர்த்தி செய்யும் அரசியல் பொருளாதார கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள போராட வேண்டியுள்ளது. இன்று தெருவில் படுத்தெழும்பும் மனிதர்களின் பாட்டன் முப்பாட்டன் சுயசார்பு பொருளாதாரத்தில் தன்னிறைவு (பயன்பாட்டு உற்பத்திமுறை) பெற்று வாழ்ந்தான். இன்று இவர்கள் நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உழைப்பை விற்று மட்டுமே வாழ முடியும் என்ற நிர்ப்பந்தத்தினுள் இன்று தமது சீவியத்தினை நடத்துகின்றார்கள்.

எமது தேசங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார முறை தன்னிறைவுப் பொருளாதாரத்தினை சிதைத்து விட்டது. நாம் அனைத்து மாந்தர்களின் தேவை பூர்த்தி செய்யும் பொருளாதார அமைப்பிற்காகவும், அவர்களின் அன்றாடத் தேவைக்கான போராட்டத்தின் அவசியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.