Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தொடர்ந்தும் நாம் மௌனம் காப்போமா?

கல்வியை அழிக்கிறதுஅரசாங்கம்.

இந்த நாட்டின் பெற்றோர்கள் என்ற வகையில் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கும், மாணவர்கள் இளைஞர்கள் என்ற வகையில் உங்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்படவுள்ள கதி பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நாம் நினைக்கின்றோம்.

இன்னுமொரு தேர்தல் வந்துவிட்டது. கதைகள் சொல்வதற்கும் வாக்குறுகளுக்கும் குறையும் இல்லை. அடுத்ததாக பொதுநலவாய மாநாடு, “தேசத்திற்கு மகுடம”, “பாதை எழுச்சி”, “ஐந்து சக்திகளின் கேந்திரம்” போன்ற கண்காட்சிகளில் எந்த குறையும் இல்லை. கண்காட்சிகளின் நடுவே மறைக்கப்பட்டுள்ள உண்மைகளே நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவையாகும். பொய்களை கடந்து கசக்கும் உண்மைகளை விளங்கிக் கொள்ளவிட்டால் எமது வாழ்வின் அனைத்து எதிர்பார்ப்புகளும் அழிவதனை தடுக்க முடியாது என நாம் கருதுகின்றோம்.

இலாபம் அவர்களுக்கு அழிவு எங்களுக்கு

இந்த அதிசய நாட்டில் இல்லாமையும் வறுமையும் அநீதியும் தவிர வேறு ஒன்றும் நமக்கு இல்லை. பசியால் மட்டுமல்ல இன்று தாகத்தில் மரணிக்க வேண்டியும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இலாபத்திற்காக குடிப்பதற்கு இருந்த நீரையும் நாசம் செய்த நாடு இது. நாட்டில் அரைவாசி நிலத்தில் உள்ள நீரை குடிக்க முடியாது. ஏனென்றால் நீரை குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. பின் மரணம். இது இன்று நாட்டில் அனைத்து பிரதேசங்களுக்கும் பரவுகின்ற அபயாமாகியுள்ளது. இது ஒரு பிரச்சினை மாத்திரமே. பால்மா குடிக்க முடியாது. அதிலும் நஞ்சு.மருந்துஎடுத்தால் அது காலம் கடந்தது அல்லது தரம் குறைந்தது.

அது மட்டுமா இந்த பிரச்சினைகளுக்காக போராடவும் முடியாது. எனென்றால் போராடினால் தேசத்துரோகி அல்லது பயங்கரவாதி என கூறி கொலை செய்யப்படுகின்றனர். எனவே இது மனிதர்கள் வாழும் சமூகம் அல்ல என்பது வெளிப்படையாகியுள்ளது. இது அனுதினமும் கொல்லப்படும் சமூகம். ஆளும் வர்க்கத்துக்கு அவர்களின் கொள்ளை இலாபமே முக்கியம்.

இவை அனைத்துக்கும் காரணம் வேறு எதுவும் அல்ல ஆளும் வர்க்கத்தின் இலாப வெறி. போக்குவரத்து, சுகாதாரம் என்பவற்றை தனியாருக்கு விற்றதனால் எற்பட்ட விளைவுகள் உங்களுக்கு தெரிவும். காய்ச்சல் தடிமனுக்கே இன்ற ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது. அரசாங்க வைத்தியசாலைகள் பேருக்கு மட்டும் உண்டு. மருந்து துண்டை தவிர வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. சாதாரண மனிதனுக்கு இருதய நோய் ஏற்பட்டால் நிலைமை என்ன? பேருந்துகளில் ஏறி சத்திரசிகிச்சைக்கு பணம் சேர்க்க பிச்சை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் சாக வேண்டும். இது தான் நிலைமை. இவைகள் தனியார் மயப்படுத்தலினால் கிடைத்தவைகள். இப்படியே போனால் மூச்சு எடுப்பதற்கும் பணம் கொடுப்பதற்கான காலம் நீண்ட தூரத்தில் இல்லை.

கல்வியின் தலைவிதி

விற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினால் கல்விக்கு ஏற்படப்போகும் கதியும் அதுவேதான். கல்வி பெறுவதற்கான சந்தர்ப்பம் கோடி கணக்கில் பணம் செலுத்தக்கூடிய சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும். ஆனால் அரசாங்கமோ நாங்கள் இதனை செய்வது நாட்டின் பிள்ளைகளுக்காகவும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு என்று சொல்லும்.

இது உண்மையா? எங்கள் மேல் இருக்கின்ற பாசத்தினாலா மருத்துவ பட்டத்தை 65 இலட்சத்துக்கு விற்கின்றார்கள்? எமக்காகவா பாடசாலைகளில் பணம் அரவிடுகின்றார்கள், பல்கலைக்கழகங்களில் வசதிகள் இருந்தும் மாணவர்களை சேர்க்காமல் இருக்கின்றார்களே அது எமக்காகவா? பாடசாலைகளுக்கு பணம் செலுத்த மாணவர்கள் திருடும் நிலை ஏற்பட்டுள்ளது. 3 A எடுத்தும் பல்கலைக்கழகம் இல்லை. மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் எப்படி அமையும்?

இன்று பாடசாலையை பராமரிப்பது யார்? நீங்கள் இல்லையா? அரசாங்கம் என்ன வீர வசனம் பேசினாலும் கல்விக்கு ஒதுக்கும் பணத்தை குறைக்கிறது. அந்த பாரத்தையும் இன்று பெற்றோர்களின் தோல்களுக்கு ஏற்றப்பட்டு விட்டாயிற்று. பொருட்களின் விலை வானை முட்டுகிறது. சம்பள அதிகரிப்பு இல்லை. வருமானம் அதிகரிக்கவில்லை. வரிக்கு மேல் வரி விதிக்கப்படுகிறது. இதெல்லாம் போதாது என்று இன்று கல்விக்கும் செலுத்த வேண்டியுள்ளது. இந்த சுமையை சுமக்க உங்களுக்கு முடியுமா? இன்றும் 17% பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதில்லை. காரணம் இந்த செலவுகளை தாங்க முடியாது போயுள்ளது. நாளை இந்த நிலை உங்கள் பிள்ளைகளுக்கு வர முடியாதா?

இதுதான் அரசாங்கத்தின் கொள்கை. இதில் எந்தவித மாற்றமும் இல்லை. கல்வியை விற்க புதிது புதிதான முன்மொழிகளை கொண்டு வருவர்கள். அவ்வளவுதான். சர்வதேச பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் பலவற்றை ஒரேடியாக திறக்க முயற்சிக்கின்றார்கள். பாடப் புத்தகங்களை விற்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. பாடசாலையை பராமரிக்க பெற்றோர்களுக்கு பொறுப்பாக்கப்படுகிறது. இவைதான் கல்விக்கான புதிய முன்மொழிகள்.

பல்கலைக்கழகங்களின் நிலை இதனை விட அபாயகரமானது. அரச பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதில்லை. எனினும் பட்டம் வழங்கும் கடைகளை நாடு பூராகவும் திறக்கின்றனர். பல்கலைக்கழகங்களில் விரிவுரை மண்டபம், கணினி ஆய்வுகூடம், மைதான வசிதிகள் இல்லை. விரிவுரையாளர்கள் இல்லை. கேட்டால் காசு இல்லையாம். ஆனால் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு என்றால் காசு உண்டு.

இப்போது 6 “முதலீட்டு வலயங்களை” ஆரம்பிக்க ஏற்பாடாகியுள்ளது. இந்த பிரதேசங்களில் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் முதலாளிமார்களுக்கு இலவசமாக காணி வழங்கப்படுமாம். வரிச் சலுகை வழங்கப்படுமாம். கடன் வழங்கப்படுமாம். இந்த நாட்டில் சாதாரண மக்களின் நிலத்தை கொள்ளையடிப்பது, வரிக்கு மேல் வரிச் சுமத்துவது, சலுகைகளை வெட்டுவது, சம்பளத்தை அதிகரிக்காமல் இருப்பது இதே ஆட்சியாளன் என்பதை மறந்துவிட வேண்டாம். இன்று இவைகளின் நோக்கம் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கானதாஅல்லது முதலாளிமார்களுக்கு கடை போடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காவா என்பதை விளங்கிக் கொள்ள ஒன்றும் கடினம் அல்ல.

உயர் தரத்தில் சித்தி பெற்ற போதும் பல்கலைக்கழகம் போக முடியாதவர்களுக்காகவே இந்த தனியார் பல்கலைக்கழகங்கள் என்று கூறுகின்ற போதும் உயர் தரத்தில் சித்தி பெற்றுவிட்டாலும் இவற்றுக் போக முடியாது. ஏனென்றால் அவர்கள் கேட்கும் கோடிக் கணக்கான கட்டனத்தை நமக்கு செலுத்த முடியாது. மற்றது இந்த மாணவர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தல் செய்ய வேண்டியது அரச பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதே தவிர பட்டங்களை கோடிக் கணக்கான காசுக்கு விற்பதல்ல. எனினும் இன்று குறைந்தபட்சம் இருக்கின்ற வெற்றிடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை. 5000 மேற்பட்ட வெற்றிடங்கள் இருக்கின்றன. எனினும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அதற்கு பதிலாக இன்று அரச பல்கலைக்கழகங்களும் பட்டங்களை விற்க ஆரம்பித்துள்ளன.

அரசாங்கத்திற்கு இன்று ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறது. அது இவற்றை நாட்டின் சட்டங்களாக மாற்றுவது. அப்போது அனைத்தும் பூரணமாகிவிடும். அதற்கு 2011ம் ஆண்டு சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்தார்கள். எனினும் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. இப்போது அந்த சட்ட மூலத்தின் முன்மொழிவுகளை வர்த்தமானிப் பத்திரமாக கொண்டு வந்துள்ளனர். அதன் படி தனியார் பல்கலைகழகங்களை ஏற்றுக் கொள்ளவும், பல்கலைக்கழகங்களில் கல்வியை விற்கவும் முடியும். இதனை தோற்கடிக்காவிட்டால் எவரும் பட்டம் பெற மில்லியன் கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டும். முடியாதவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு கால் வைக்கவும் முடியாது.

மற்றது இன்று இலவசக் கல்வி என்று ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவைகள் வெட்டப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளது சொற்பமே. இந்த கல்வியே அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வி புத்தாக்கம், பகுத்தாராயும் திறன், மாணுட நேயம் ஆகியவற்றை பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்தும் வல்லமை கொண்டதால்ல.

பரீட்சை எழுத மனப்பாடம் செய்யும் கிளப்பிள்ளை கல்வி மட்டுமே இறுதியாக எஞ்சியுள்ளது. பரீட்சைக்கு விடைஎழுத தெரிந்த, எனினும் வாழ்கையில் எந்த பிரச்சைனைக்கும் பதில் தெரியாத ……………வகை பரம்பரையே உருவாக்குகிறது.

போராடுவோமா? அல்லது மண்டியிடுவோமா?

இதனால் இன்று எமக்கு பாரிய போராட்டம் ஒன்று உள்ளது. ஒன்று நாம் இலவசக் கல்வியை உறுதி செய்ய வேண்டும். அதாவது அனைவருக்கும் கல்விக்கான சமமான சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான போராட்டம் ஒன்று உண்டு. அதேநேரம், அணித்திரள்வோம். கல்வியினூடாக உண்மையான மனித ஆளுமையை கட்டியெழுப்புகின்ற கல்வியாக மாற்றம் செய்ய வேண்டிய போராட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும். நாம் இன்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

எனினும் நாம் மட்டும் போராடி ஒன்றும் நடைபெற போவதில்லை. பெற்றோர்கள் என்ற ரீதியில் நீங்களும், பொது மக்களும் மௌனம் என்றால்ஆட்சியாளர்கள் இந்த அழிவை தொடர்ந்து செய்வார்கள். சமூகம் என்ற ரீதியில் நாம் எழுந்து நின்றோம் என்றால் அதனை தோற்கடிக்க முடியும். எனவே போராடுவதை தவிர மாற்று எதுவும் இல்லை. போராடுவதா அல்லது மண்டியிடுவதா என்ற தீர்மானத்தை நீங்கள் எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் இந்த நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். இந்த நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் வளமானதா இல்லையா என்பது எத்தனை டிவுசன் வகுப்புகளுக்கு அனுப்புகின்றோம் அல்லது மனப்பாடம் செய்யும் நேரத்தின் அளவு என்பவற்றில் அல்ல. அது நல்ல கல்விக்காக போராடுவோமா இல்லையா என்பதிலேயே தங்கியுள்ளது.

நாளைய நமது வாழ்வு கொடுமையானதா அல்லது சுபீட்சமானதா என்பது போராட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்படும். எனவே நீங்கள் மௌமாக இருந்தது போதும். காலம் வந்துவிட்டது. இலவச கல்வியையும் கல்வியின் சுதத்திரத்தையும் வெற்றி கொள்ளவும் வாழ்கையின் ஏனைய அனைத்து பிரச்சினைகளின் தீர்வுக்காகவும் ஒன்றாக அணித்திரண்டு போராடுவோம்.

இலவசக் கல்வியையும் கல்வியின் சுதநத்தித்தையும் வெற்றிக் கொள்ள அணித்திரள்வோம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை

(18/09/2013)

www.iusfsl.org This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 0777357124

துண்டுப்பிரசுரத்தினை இங்கு அழுத்தி பெறவும்