Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரபாகரன் கொலையில் உறங்கிய உண்மைகள்!

சுப்பிரமணியர்-- "சுவாமியாக" வந்து சொன்ன கதைகள்

"இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்.” என சுப்ரமணியம் சுவாமி.

"இலங்கை ராணுவத்தின் 2013-ம் ஆண்டுக்கான 3-வது ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் இலங்கையின் ராணுவ உயரதிகாரிகள் கிட்டத்தட்ட அனைவருமே கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் இறுதி யுத்தம் நடந்தபோது இலங்கை ராணுவத்தில் இருந்தவர்கள். இலங்கை ராணுவ தளபதி உட்பட யாரும் அதை மறுக்கவில்லை.

இலங்கை ராணுவ பாதுகாப்பு கருத்தரங்கில் தொடர்ந்து பேசிய சுப்ரமணியம் சுவாமி “விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா இலங்கைக்கு உதவி செய்தன. இந்தியாவின் சிறப்பு ஒத்துழைப்பு பெறப்பட்டது. ஜனாதிபதி ராஜபக்ஷேவின் சீனியர் ஆலோசகர் ஜனாதிபதியின் செயலர், பாதுகாப்பு செயலர் உட்பட 6 பேரடங்கிய இலங்கை உயர்மட்டக் குழுவினர் யுத்தம் முடியும்வரை டில்லியுடன் நேரடித் தொடர்பில் இருந்தார்கள். டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார செயலர், பாதுகாப்பு செயலர் ஆகியோருடன் இலங்கை குழுவினர் எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன.

இது ஒருபுறமிருக்க தமிழர் தலைவர் கருணாநிதி நேற்று அடித்த "பல்டியை" பாருங்கள்:

"2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்ற போது இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் தி.மு.க. அதை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டதாகவும் எனக்கு தகவல் கொடுத்து உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்வதும் இந்திய அரசுதான்"

என்னமோ தெரியவில்லை… மகிந்தாவிற்கு இப்போ அரசியல் கண்டத்துடன் கூடிய ஏழரைநாட்டு மங்கு சனியோ?... நண்பர்கள் என வருபவர்கள் எல்லாம் அரசியல் ஆப்பு வைத்துவிட்டுப் போகின்றார்கள். மகிந்தாவின் ஜோதிடர்கள் இதை சரியாக கணிக்க வில்லையோ?

அம்மனான நவயுகத்-- தாயும், சூர-அசுரனை இல்லதாக்கிய சுப்பிரமணியரான--சுவாமியும் இலங்கையில் கால் பதித்த நல்வேளை மக்களுக்கு பெருநன்மைகள் இல்லாவிட்டாலும், மகிந்த அரசிற்கு அரசியல் கண்டம்தான்.

-அகிலன்

9/9/2013