Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆயுததாரிகள் மந்தனா இஸ்மாயிலை கடத்தவே சென்றனர்!

ஊடகவியலாளர் மந்தனா இஸ்மையிலை கடத்திச் செல்ல சென்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் இலங்கை இராணுவத்தின் சிங்க படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் என கொழும்புச் செய்திகள் சொல்கின்றன. அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகன் ஒருவரே அவர்களை அங்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்புதலை வழங்கியதாகவும் அதில் கூறப்படுகின்றது.

ஒரு வர்த்தக கொடுக்கல் வாங்கல் விடயத்தில் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகனுக்கு கிடைத்த தரகு பணம் தொடர்பான தகவல்கள் ஊடகவியலாளர் மந்தனாவுக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பிலான அந்த ஆவணங்களை ஊடகவியலாளரிடம் இருந்து கைப்பற்றும் நோக்கிலேயே இவ் ஆயுதக்குழு அவர் வீட்டிற்கு சென்றது. இதற்காக பேசப்பட்ட தொகையில் மூன்று லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை அரசாங்கத்தின் முக்கிய தலைவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே செலுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.

ஊடகவியலாளரையோ அவரது வீட்டில் இருப்பவர்களையோ கொலை செய்யாது அவரை அச்சுறுத்தி அந்த ஆவணங்களை பெறுமாறு அங்கு அனுப்பி வைக்கப்பட்ட படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தாகவும் சொல்லப்படுகின்றது. மந்தனாவின் வீட்டிற்கு சென்ற இராணுவத்தினர் டிபெண்டர் ரக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் அவதானித்துள்ளனர்.

மம்தனாவை கடத்தும் நோக்கில் சென்ற ஆயுததாரிகள் அவரை சுமார் இரண்டு மணி நேரம் அவரின் இல்லத்தில் இருந்து விசாரணை நடத்தியதாகவும் மந்தனா இஸ்மாயில் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

மந்தனா இஸ்மாயில் அபயவிக்ரமசிங்கவின் கணவர் ரொமேஸ் அபயவிக்ரமசிங்கவும் ஒரு ஊடகவியலாளர். அதிகாலை 5 மணியளவில் கடமை முடித்து வீட்டுக்கு சென்ற கணவர் தனது வீட்டில் ஏதோ அவலம் நடக்கின்றது என்பதை அறிந்து உடனயாக 119 இலக்கத்துடன் தொடா்பு கொண்டு பொலிஸாருக்கு அறிவித்தார்.

அதனையடுத்து பொலிஸார் பம்பலப்பிட்டி மிலாகிரிய அவனியுவுக்கு சென்ற போது வீட்டில் இருந்த ஆயுததாரிகள் பொலிஸாரை கண்டதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், அதனையடுத்து பொலிஸாரும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் மந்தனா இஸ்மாயில் அபயவிக்ரமசிங்க கூறியுள்ளளார்.

மந்தனா இஸ்மாயில் அபயவிக்ரமவின் வீட்டில் கொள்ளையர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட அச்சுறுத்தலை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

யாமறிந்த படைகளிலே மகிந்த குடுமம்பப் படைபோல், உலகில் இனிதாவது எங்கும் காணோம்!

மகிந்தப்படை மக்களைக் கொல்லும்!

கோத்தபாயப்படை அரச-எதிர்ப்பாளர்களை வெள்ளை வானில் கடத்திக் கொல்லும்!

இப்போ இவர்கள் பிரிவில் ஊடகவியலாளர்களைக் கடத்தவும்…கொல்லவும் இன்னெரு சிங்கப்படையாம்…

என்று தணியும் இந்த படைக்கொடுமை!