Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தவின் மததையும் சம்பந்தரின் நிலமானிய எச்சமும்!!

இன்றைய நிலையில் அனைத்துப்பிரிவு அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயற்படுகின்றார்கள். இதில் ஒருவர் ஒருவருக்கு தழைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். மகிந்தவின் மததை - இவைகள் இன்றைய அரசியல் காய்நகர்த்திற்கு பின்னால் இருக்கின்றது. வடக்கில் தேர்தல் வருவதை ஒட்டி அரசியல் நாடகங்கள், அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திடீரென சம்பந்தர் – ஜனாதிபதி சந்திப்பு நடைபெற்றது. அப்போ நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளும் "13' திருத்தம் உள்ளிட்ட எந்தவொரு முயற்சியிலும் அரசு முன்வைத்த காலைப் பின்வைக்கப் போவதில்லை. என இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின்போதே சம்பந்தனுக்கு ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவுக்கு வராமல் தமிழ்க்கூட்டமைப்பு வெளியில் இருந்துகொண்டு அரசைக் குறைகூறுவது அர்த்தமற்றது என அரசு கூறுகின்றது.

எந்தத் தீர்வையும் மக்கள் முன் வைக்கவேண்டும். என்னதான் தெரிவுக்குழு முன்னுள்ள தீர்வு என்பதை மக்கள் முன்வைக்கப்பட வேண்டும். இது மகிந்தவின் அதிகார மததையைத் தான் வெளிப்படுத்துகின்றது. கடந்த நான்கு வருடங்களாக கிளிப்பிள்ளை போல ஒரே விடயத்தினைத் தான் ஒப்பித்துக் கொண்டுள்ளார்கள். மக்களுக்கான உரிமையை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் உறுதி செய்வதிலும் பார்க்க அவர்களின் இருப்பையும், தேர்தலை நோக்கிய காய்நகர்த்தலையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு நாட்டில் உள்ள தேசிய இனத்தவர்களை சரிசமானமான குடிகளாக ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம் என்பது தேர்தலை நோக்கிய அரசியலாகும்.

விழுந்தேன் ஆனால் ....

விழுந்தேன் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல சம்பந்தன் தன் வீரசாகச அறிக்கையினை விடத்தவறவில்லை. ‘‘நாங்கள் நினைத்ததை முடித்தே தீருவோம். இதனைத் தெட்டத் தெளிவாக இந்தியாவுக்கும் தெரிவித்து விட்டோம். வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறும். இதில் கூட்டமைப்பே வெற்றிபெறும். என  மகிந்த சம்பந்தரிடம் கூறியுள்ளார்.

மேலும் ஐனாதிபதி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை தீர்க்க அக்கறையாக இருப்பதாக கூறும் சம்பந்தன்.. காலத்தினை கடத்திவரும் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தும் எவ்வித உள்நாட்டு போராட்டங்களை நடத்த தயாரில்லாத வெற்று வேட்டு அரசியவாதிகள் தான்.

ஒரு புறம் 13 எதிர்த்துக் கொண்டும், தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு அக்கறையாகவே இருக்கின்றது என்கின்றது.

இவ்வாறு மகிந்தவிற்கு நற்சான்றிதல் கொடுக்கும் சம்பந்தரின் பின்னால் இருக்கும் சிந்தனை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சம்பந்தரின் அரசியல் போக்குப் பற்றிய விமர்சனங்கள் அவரின் கூட்டமைப்பில் இருந்தே வந்துள்ளது. சம்பந்தரின் இணக்க அரசியலுக்கு பின்னால் உள்ள சிந்தனை வடிவம் திரிசங்கு நிலையை அரசியல் கட்சிக்குள் ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தனின் சிந்தனையை பயன்படுத்திக் கொள்ளும் நபராகவே மகிந்த இருக்கின்றார். அரை நிலபிரபுத்துவ எச்சங்களை கொண்ட சமூகப் பின்னணியில் வாழ்கின்ற சம்பந்தருக்கு எதனையும் சொல்லிப் புரியவைக்க முடியாது. சம்பந்தரின் அரசியல்இ தனிமனித பண்பு பற்றிய பலருக்கு அதிர்ப்தி இருக்கின்றது. சம்பந்தனின் தனிப்பட்ட இயல்பாக இதனை கருத முடியாது. பூர்சுவா அரசியல்வாதிகள் என்பவர்கள் சமூகத்தின் அக்கறை என்பது சுயநலத்திற்கு உட்பட்டதாக இருக்கின்றது. இன்றைய சுயநலவாதிகளின் பிடியில் அரசியல் தலைமை இருக்கின்ற காரணத்தினால் இணக்க அரசியலை மேற்கொள்கின்றார்கள்.

சம்பந்தனின் வர்க்கப் பின்புலத்திற்கு இசைவாக புலிகளின் பின்னான காலம் ஒத்துழைப்பு நலக்கின்றது. முன்னர் புலிகள் பேரம் பேசும் சக்தியாக இருந்த போது பொதுவான அழுத்தங்களை எதிர்க்கொள்ள இலகுவாக இருந்தது. ஆனால் இன்று அரைநிலப்பிரபுத்துவத்திற்கே உரித்தான அண்டிப்போகும் சிந்தனையை சம்பந்தனின் மூளையில் இருந்து அகற்றிக் கொள்ள முடியாத நிலையை புரிந்து கொண்ட சக்திகள் தமது நலனிற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கின்றன.

யார் முதலமைச்சர்

யார் முதலமைச்சர் என்பது இலங்கை இந்திய நலனுக்கு ஒத்தூதும் நபர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மகிந்த – சம்பந்தர் சந்திப்பின் பின்னணியில் விக்கினேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கிடையே முதலமைச்சர் பதவியை யாருக்கு கொடுப்பது என்ற இழுபறி வேற நடந்திருக்கின்றது. விக்கினேஸ்ரனை நியமிக்க இந்தியா சிபாரிசு செய்துள்ளதாக செய்திகள் கசிகின்றது. முன்னாள் நீதிபதியை நியமிப்பது என்பது அழுகிப் போன இணக்க அரசியலுக்கு துணைபோகும் அரசியல் தான். கடந்த காலத்தைப் போலவே படித்த மேட்டுக்குடியின் அரசியல் தலைமை கட்டமைக்கப்படுகின்றது. அரசியல் ரீதியாக எவ்வித செயற்பாடும் அற்ற ஒருவரை தமிழர் என்றும், படித்தவர் என்ற போர்வையில் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது. இவை கூட யாழ்ப்பாணிய மேலாதிக்கமென்கின்ற நிலவுடமைச் சிந்தனையின் எச்சமே.

சம்பந்தனின் வர்க்க உறவைப் போலவே விக்னேஸ்வரனின் வர்க்க உறவு என்பது தமிழ் மக்களின் நலனிற்கு எவ்விதத்திலும் பெரும் உதவி புரிந்து விடப்போவதில்லை. பத்திரிகையில் தமிழ் மக்களின் உரிமையப் பற்றிப் பேசிக் கொண்டாலும் விக்கினேஸ்வரனுக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள உறவு என்பது தமிழ் மக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்க முடியாது.

சம்பந்தனோ அல்லது அவர் சார்ந்த அமைப்போ பத்திரிகையில் மாத்திரம் இலங்கையரசிற்கு கோரிக்கை விடுகின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கில் தற்போதுள்ள காணி சுவீகரிப்புப் பிரச்சினை, மீள்குடியேற்றம், இராணுவப் பிரசன்னக்குறைப்பு, படையினரை முகாம்களுக்குள் முடக்குதல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, நீதியும் சுதந்திரமானதுமான வடக்குத் தேர்தல் என்பன போன்ற விடயங்கள் குறித்து நான்கு சுவருக்குள் பேசுவதை விடுத்து வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனாதிபதிக்கு சுவாசிக்க அவகாசம் கொடுக்கும் இணக்க அரசியலை தொடர்ந்து கொண்டு வெளிநாடுகளின் உதவியை கோரிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இங்கு எவரிடமும் தீர்வுத் திட்டம் இல்லை. நான்கு சுவருக்குள் பேசும் அரசியல் காலத்தை பின்னடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இணக்க அரசியல் என்பது முதலாளித்துவக் கட்டத்திற்கு முற்பட்ட சமூக உறவின் எச்சமாக தொடர்ச்சியாக நிலைபெறுகின்றது.

மனிதர்களை காலில் விழுவது தொடக்கம் இளையவர்கள் எது கூறினாலும் அனுபவமற்ற சின்னப் பிள்ளைகள் என்ற மனப்பான்மை அரசியல் உலகிலும் வெளிப்படுகின்றது. வயது முதிர்ந்தவர்கள் மேலைநாடுகள் போல விகுவதில்லை. கெளரவப்பிரச்சனை அவர்களுக்கு சனங்களுக்குத் தான் இவர்களால் வாயில மண். அரசியல் அரங்கில் பல அரசியல்வாதிகள் வந்து போயிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை, தனித்துவம், அகம்பாவம், கர்வம் போன்ற பல பண்புகளை கொண்டவர்களா இருந்திருக்கின்றார்கள். குறிப்பாக ஆசிய அரசியல்வாதிகள் என்பவர்கள் ஐரோப்பிய அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபட்டு வந்துள்ளார்கள். ஏன் அரசியல்வாதிகள் பதவிகளில் இருப்பவர்கள் அதிகார வர்க்கத் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றார்கள்

அதிகார பகிர்வு அவசியம் என்பதை சராசரி சிங்கள மக்களிடம் கொண்டு செல்வதன் மூலமே. தமிழர்களால் ஆபத்து தமது இருப்பிற்கு ஆபத்து என்ற அச்சத்தை போக்க முடியும்.

அரசு என்பதே ஒருவரை ஒடுக்குவதற்குத்தான். தமிழ் மக்கள் நம்பக் கூடிய ஒரு சக்தியின் பக்கம் நின்று போராடுவதே முக்கியமானதும் அவசியமானதுமாகும்.

இடதுசாரியம் பேசிய சந்திரிக்காவே புத்தமத பீடத்தின் அழுத்தமும் இனவாதிகளின் அழுத்தத்தையும் தாங்க முடியாது எவ்வித தீர்வையும் முன்வைக்க முடியாவில்லை. ஆகவே யாருடன் கைகோர்த்து நிற்பது என்பதில் இன்றிலிருந்தே சிந்திக்க வேண்டும்.

மகிந்தாவின் மனது கோணக்கூடாது, அவரின் தூக்கத்திற்கு இடைஞ்சல் வரக்கூடாது என்பதாகவே இவர்களின் அரசியல் என்பது இருக்கின்றது.

ஆனால் மக்களைப் எப்படியும் துன்பப்பட்டாலும் பரவாயில்லை, அவர்களின் அன்றாடச் சீவியம் எப்படிச் சென்றாலும் பரவாயில்லை என்பது போன்ற எதேர்ச்சாதிகாரப் போக்கில் அரசியல்வாதிகள் நடந்து கொள்கின்றார்கள்.

இன்றைய கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் சம்பந்தன் – ராஜபக்ச சந்திப்பு என்பது கபடத் தனம் கொண்டது. இந்த தேர்தலை சமாளிக்கும் வியூகம் அமைந்து கொள்வதால் மக்களுக்கு நன்மை கிடைக்கப்பபோவதில்லை.

தீர்வினை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். சிங்கள மக்களுக்கு மற்றைய தேசிய இனங்கள் எதிரி இல்லை என்பதை எடுத்துரைக்க வேண்டும். கடந்த காலத்தில் சந்திரிக்காவின் பின்னால் சென்றது போல மறுபடியும் ராஜபக்சவின் சொல்லுக்குப் பின்னால் திரிந்து கொண்டிருப்பதால் முழு இலங்கை மக்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை.