Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

பாடசாலை, திணைக்களங்களில் இனி ஆளுநரின் அனுமதியுடனேயே நிகழ்வுகள்!!

இனிமேல் மலசலம் கழிப்பதும் இவர் "கொன்றோளில்"தானோ?

பாடசாலைகள், அரச அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல் பிரமுகர்களை அழைக்க வேண்டுமாயின் அழைக்கப்படுவோர் தொடர்பிலான விபரங்களுடன் வடமாகாண ஆளுநரிடம் அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு பாடசாலைகள் அரச திணைக்களங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலின் பிரகாரம், பாடசாலைகள் அரச அலுசலகங்களில் அரசியல் கூட்டங்கள் கலந்தாய்வுகள் என்பவற்றை நடத்த கூடாது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், குறித்த பாடசாலை அதிபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல பாடசாலைகள், அரச அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல் பிரமுகர்களை அழைக்க வேண்டுமாயின் அழைக்கப்படுவோர் தொடர்பிலான விபரங்களுடன் வடமாகாண ஆளுநரிடம் அனுமதி பெறவேண்டும்.

இந்த சுற்றறிக்கை அனைத்து பாடசாலைகளுக்கும் இடைக்கப்பெற்றதை ஆளுநருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போற போக்கைப் பாhத்தால், வடமாகாண ஆளுனர் கந்தபுராணத்தின் சூரன் போல் ஆகியுள்ளார். சூரன் (மகிந்த) சிவன் அருளால் பெற்றவரம் கொண்டு சூரியனுக்கு போட்ட ஓடர், உனது வெப்பம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். என் ஆணைக்கு உட்பட்ட பகுதி வெப்பமின்றிய குளிருடன் கூடிய வெளிச்மாகவே இருக்க வேண்டும் என்றானாம். மக்கள் சிவனை நோக்கி வணங்கவோ, தவமிருக்கவோ கூடாதென்றானாம். எக்கடவுளாரும் என் அனுதியின்றி என் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் நுளையவே கூடாதென்றானாம்…..

இந்நோக்கில் எதிர்காலத்தில் தமிழ் மக்களும் இவர் அனுமதி பெற்றுத்தான் மல-சலம் கழிக்க வேண்டி வரும். கண்டிப்பாக வட-கிழக்கின் அரச எடுபிடிகள், வசந்தங்கள், விடிவெள்ளிகள் எல்லாம் தமிழ் மக்களின் மல-சல கூட பரிசோதகர்களாக மாற்றப்படுவார்கள். இதைவிட வேறு என்ன வேலையை இவர்களுக்கு கொடுக்கப்போகின்றார் இவர்களின் "ஆளுனர்"?........

-அகிலன்