Mon05252020

Last updateSun, 19 Apr 2020 8am

இன மையவாதிகளின் சமூகக் கொடுமை!!

இலங்கையில் அரசியல் மாற்றத்திற்காக உழைக்க கட்சி தேவையாக உள்ளது. பாட்டாளி வர்க்கக்கட்சி நடைமுறையில் போராடாதவரை வர்க்கப் போராட்டத்தினை சரியான பாதைக்கு அழைத்துச் செல்வது மிகவும் சிரமானதொன்று. இந்த வகையில் அரசியல் மாற்றத்திற்கு உழைக்க திடம்பூண்டிருக்கும் நட்பு வர்க்கத்தவர்களை கண்டு ஆதரிக்க வேண்டியது கட்டாயமாகும். இது எம்முன்னால் இருக்கும் முக்கிய பணியாகவும் இருக்கின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியை, புதிய ஜனநாயக மார்க்சீய லெனினிய கட்சியை புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. ஆனால் ஆதரிக்காது விடுவதற்கு ஒரு காரணமும் இல்லை. ஒரு வர்க்கக் கட்சியை இலங்கையில் உருவாக்குவது நடைமுறை ரீதியாக போராடுவதன் ஊடாகவேயாகும். ஆய்வுகளை செய்து கோட்பாடுகளை உருவாக்கிய பின்னர் போராட முடியாது. ஆய்வுகளின் ஊடாகவும், அன்றாட அரசியல் வாழ்வின் ஊடாக நடைமுறையே சரியான கோட்பாட்டை வந்தடைய முடியும்.

பழைய கோட்பாடுகள்:

பழைய கோட்பாடுகள் எப்பொழுதும், எந்த நாட்டிற்கும், காலத்திற்கும் ஒத்துப் போவதாக இருக்க வேண்டியதில்லை. அவை முன்னர் பயன்பட்ட கோட்பாடுகள் பிரத்தியோகமான பூகோள, பொருளாதார அமைப்பின் சமூக உறவுகளுக்கு ஏற்ப மாறுபடும்.

சுயநிர்ணயம் பற்றி ஒரு கட்சி கொண்டிருக்க வேண்டிய நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்? சரி அவ்வாறெனில் போராடும் பாட்டாளி வர்க்கக் கட்சி இருக்கின்றதா? இருந்தால் என்ன செய்யும்?

தமிழ் மக்கள் சுயநிர்ணயம் உடையவர்கள், தாம் இணைந்திருப்பதா? பிரிந்து செல்வதா? என்பதை தீர்மானிக்கும் உரிமை உடையதும் என்று வரையறுத்துக் கொள்ளும். ஆகவே ஒரு கட்சிக்கும் முன்னணிக்கும் இடையேயான வேறுபாட்டை புரிந்து கொண்டும், பாசாங்கு காட்டிக் கொண்டு விமர்சிக்கும் மேட்டுக்குடி ஆய்வாளர்கள் மக்களை குழப்புகின்றார்கள்.

சுயநிர்ணயம் எங்கு எப்போ கோருகின்றது? சரி சுயநிர்ணயத்தை முதலாளித்துவ வர்க்க அரசுகள் அங்கரித்தா உள்ளன? சுயநிர்ணயத்தை முதலாளித்துவம் வழங்கி விடுமா? இல்லை.

இந்த ஆய்வாளர்கள் என்ன செய்கின்றார்கள் எனில்

1. மக்களைக் குழப்புவது

2. தாமே சரியான கொள்கை வகுப்பாளர்கள் என சுயதம்பட்டம் அடிப்பது.

அரச அதிகாரம் கிடைத்த பின்னர் இருக்க வேண்டிய விடயங்களை முன்னிறுத்தி கொண்டால் மாத்திரம் ஒரு அமைப்பு புரட்சிகரமாக விடாது. உற்பத்திச்சானத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் சாதிக்கப்பட வேண்டியது நிறைவே இருக்கின்றது.

உற்ப்த்திச் சாதனம் கைப்பற்றப்பட்ட பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சி தனது திட்டத்தில் வைத்திருக்கும். தனது திட்டத்திற்கு அமைய இடைக் காலத்தில் சீர்திருத்தத்தைக் கோரி இடம் பெறும் போராட்டங்களை முன்னணி ஊடாக செயற்படுத்தும். தொழிற்சங்கப் போராட்டங்களின் ஊடாக தொழிலாளர்களின் சம்பளம், வேலை நேரம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடும்.

இதே போலதான் முதலாளித்துவ ஜனநாயகத்தை கோரி போராட்டங்கள் இடம் பெறுகின்றது. முதலாளித்துவ ஜனநாயம் என்ன? எவ்வாறு வரையறுத்துக் கொள்வது என்பது இன்னொரு பகுதி கேள்வியாகும்.

சமவுரிமை பற்றிய அறிவை மக்களுக்கு எடுத்துரைக்கின்ற போது இந்த சமூகத்தின் ஏற்கனவே உள்ள சமூக உற்பத்தி உறவினால் ஒரு அடிதன்னும் முன்னேற முடியாது இருக்கின்ற சமூக அமைப்பில் சமவுரிமையைப் பெற்றுக் கொள்வது அவ்வளவு இலகுவல்ல. சமவுரிமை பற்றிப் பேசுகின்ற போது நிகழ்கின்ற சமூக உற்பத்தி உறவில் உள்ள பிற்போக்குச் சிந்தனைகளை கேள்விக்குள்ளாக்கின்றது. (சில அரசியல் சூனியங்கள் எள்ளி நடையாடுகின்றார்கள்)

சமூக அவலத்தை மக்களுக்கு எடுத்துரைப்பது, பழைய சிந்தனை முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது முதற்கட்ட வேலையாக இருக்கின்றது. இதுவேதான் யதார்த்தமான அரசியல் தெரிவாகும்.

தேசிய இனங்களின் முதலாளித்துவ ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தாமல் வர்க்கப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த முடியாது என்பது ஒரு அரிவரிப்பாடமாகும். எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது? எவ்வாறு எத்தருனத்தில் உறுதிப்படுத்துவது என்பது பற்றி முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றது இயல்பானதே.

1. பிராந்திய, மேற்கு அரசு சார்ந்த

2. இனவெறி அரசின் சார்பான

3. உழைக்கும மக்களின் நிபந்தனையில் இருந்து

மேற்கொள்ள வேண்டி பாதைக்கு இடராக இருப்பது அனைத்து மக்களிடம் புரையோடிப் போயுள்ள பிற்போக்குச் சிந்தனையாகும். பழைய உற்பத்தி முறையில் அமைந்த சிந்தனையில் உருவாகியிருக்கின்ற சமூக உறவை தொடச்சியாக பாதுகாத்துக் கொண்டு ஒரு புரட்சிகர அமைப்பினை வெற்றிகரமாக நகர்த்த முடியாது.

கடந்த கால வரலாற்றில் இருந்து படிக்க வேண்டிய விடயங்கள் இருக்கின்றது அதுவும் குறிப்பாக யாரின் நலனின் அடிப்படையில் இருந்து என்பது பற்றியும், மக்களின் ஆதரவுடன் கட்டியமைக்கப்பட வேண்டிய போராட்டம். கடினமாயினும், நீண்ட காலம் எடுக்குமாயினும் மக்களின் தயவில் தங்கி நிற்கும் போராட்டத்தினை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

சரி முதலாளித்துவ ஜனநாயகத்துக்காக போராட முடிந்தவர்கள் அவர்களின் வழிகளில் போராடுங்கள். உழைக்கும் வர்க்கத்தின் விடுதலையை மையமாகக் கொண்டு கட்டியமைக்கப்படும் அமைப்பிடம் முதலாளித்துவ, சமூக ஜனநாயகவாதிகள் செய்ய வேண்டிய வேலையை சுமத்த வேண்டியதில்லை. உழைக்கும் மக்கள் செல்ல வேண்டிய பாதையை சீர்குலைக்க முனைவதையும் எதிர்ப்பிரச்சாரம் செய்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சுயநிர்ணயம் தன் தலைவிதியை தானே தீர்மானிக்கவும், விரும்புப்பட்சத்தில் விலகிப் போகவும் உரிமையுண்டு. ஆனால் இது முதலாளத்துவ சமூகத்தில் சாத்தியமில்லாத ஒன்று. சுவீஸ் நாட்டை தொழிற்புரட்சியின் பின்னர் உருவாக சந்தை எல்லையை நிர்ணயிக்கும் போது தேசிய இனத்தின் முதலாளித்துவ வர்க்கங்கள தங்கள் தங்கள் இனத்தினை சுரண்டுவதற்காக சந்தையை நிர்ணயித்துக் கொண்டார்கள்.

தமிழ் தேசிய இருப்பை உறுதி செய்வது என்பது தமிழ் முதலாளிய எல்லையை- அவர்கள் தமிழ் மக்களை சுரண்டுவதற்கான சுதந்திரத்தை கொடுத்தல் ஆகும். ஆனால் பேரினவாதமோ சுயமாக வந்து தன் சகவர்க்க முதலாளிகளிடம் சந்தையை ஒப்படைக்கத் தயாரில்லை.

தயாரில்லாத நிலையில் இருக்கின்ற வேளையில் முள்ளிவாய்கால் வெற்றியின் பின்னர் இராணுவ ஆட்சியை உட்படுத்தியிருக்கின்றது.

இன்றையப் பொருளாதார அமைப்பு மூலதனம் கொண்டவர்களால் தீர்மானிக்கப்படுகின்றது. உற்பத்திச் சாதனத்தை மூலதனம் படைத்தவர்களிடம் இருந்து பறித்தெடுத்து பெரும்பான்மை மக்களுக்கு உரிமையாக்குவது. இவ்வாறு கைப்பற்றும் போராட்டத்தின் ஊடாக பழைய உற்பத்தி முறை மாற்றமடையும், இதிலிருந்து பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் ஜனநாயகத்தை உருவாக்கிக் கொள்வதாகும்.

இவ்வாறான போராட்ட வடிவம் வெற்றி பெற வேண்டும் என்றால் இன, மத, சாதி, பிரதேச வேறுபாடுகளை அற்ற ஒரு சமுதாயத்தை படைக்கும் வேலை முறை அவசியம். நாம் கட்டமைப்பை மாற்றும வேலை முறைகளை விஸ்தரிக்க வேண்டும்.

1. சிந்தனை தளத்தில் மாற்றம்

2. அரசியல் உரிமை சார்ந்த

போராட்டங்களை வெகுஜன முன்னணியில் ஐக்கியப்படுத்தக் கூடிய நேச வர்க்கக் கூறுகளை ஐக்கியப்படுத்திப் போராட வேண்டும்.{jcomments on}