Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மரங்களின் நடுவே மக்களின் சோகம்

சிறப்பு பெட்டகம்-பகுதி ஒன்று

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்து வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து மோசமாகவே இருந்து வருவது இன்றளவும் யதார்த்தமாக உள்ளது.

அரசின் புள்ளி விபரங்களும் பொருளாதார அறிக்கைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.

நாட்டில் மலையகப் பகுதியே ஏழைகள் அதிமாக வாழும் பகுதி எனவும் இலங்கை அரசே கூறுகிறது.

இலங்கை சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், மலையகம் மற்றும் இதர பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் வாழும் மக்களின் சமூகப் பொருளாதார நிலை மிகவும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது.

இலங்கையில் இன்று 1,25,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் ரப்பர் பயிரடப்படுவதாக ரப்பர் வாரியம் கூறுகிறது. நாட்டின் ஏற்றுமதியில் ரப்பரின் பங்கு சுமார் ஐந்து சதவீதம்.

கேகாலை, இரத்தினபுரி, காலி, களுத்துறை, மொனராகலை உட்பட பல மாவட்டங்களில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இதை மட்டக்களப்பு, கிளிநொச்சி, வவுனியா உட்பட மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த அரசு எண்ணியுள்ளது.

இந்நிலையில் ரப்பர் தோட்டங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை குறித்து ஆராயும் நமது சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடரை இங்கே கேட்கலாம்.