Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழில் மாணவன் சுட்டுக்கொலை, என TID தகவல் கசிய விட்டுள்ளது.

யாழ்பாணத்தில் பல்கலைகழக மாணவர் ஒருவர் இனம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவலொன்று, இன்று (08.12.2012) இலங்கை நேரம் பிற்பகல் 4 மணியிலிருந்து, தலைநகர் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியால் உள்ளதென தலைநகர ஊடக வட்டாரங்கள் தெரிவிகின்றன. அத்துடன் இத்தகவல் இலங்கை அரசின் பயங்கரவாத ஆய்வு நிறுவனமாக TID (Terrorism Investigation Department) யினாலேயே ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தியை நாம் இங்கு பதியும் வரை மேற்படி தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

செய்தியை கொலைகள் செய்வதற்கு முன் கசியவிடுவதும், அதன் பின் படுகொலைகளை நிறைவேற்றுவதும் ஆரம்பத்தில் புலிகளின் பாணியாகவிருந்தது. அதே முறையை இலங்கை அரசின் புலனாய்வுத்துறையும், பாதுகாப்பு செயலாளரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ரகசிய கொலைப்டைகளும் உபயோகிக்கின்றன. இதன் அடிபடையில் CID இன்று கசிய விட்டுள்ள தகவலின்படி, எவராவது யாழிலோ, அல்லது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரோ பாசிசகரங்களால் பலியெடுக்கப்படலாம்.

 

இந்நிலையில் அனைத்து தமிழ் சமூக மக்கள் நலம்சார் சக்திகளும், இலங்கயிளுள்ள ஜனநாயகசக்திகளும் , மாணவர்களில் பாதுகாப்பிற்கான தம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகின்றது. அத்துடன் யாழில் இயங்கும் அதிக்காரத்திற்கு எதிராக இயங்கும் சக்திகள் தமது பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமாகின்றது.

 

இதேவேளை, வட இலங்கையில் இருந்து பயங்கரவாதப் புலனாய்வுப் பொலிசாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மோசமான மற்றும் ஆபத்தான சூழலை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், அரசியல் பிரச்சினைகளை வலுக்கரம் கொண்டு நசுக்க அதிகாரிகள் முனைகிறார்கள் என்றும், பொய்யான காரணங்களைக் காட்டி ஆட்களைக் கைது செய்கின்றனர் என்றும் ஆசிரியர்கள் இக்கடித்தத்தில் குற்றம்சாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்காது.