Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அப்பாவி பொதுமக்களை கொன்று விட்டு போலியான யுத்த நிறுத்த அறிவிப்பு யாருக்காக?

altமேற்காசிய பிராந்தியத்தில் அரசியல் போர்க் குரல்கள் ஒருபக்கம் அரசுகளை அலற வைத்துக் கொண்டிருக்கும்...வேலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ரத்தம் தோய்ந்த யுத்தம் ஓய்வுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் இன்று அறிவித்துள்ளது.

 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் கடந்த ஒருவார காலமாக நடத்தி வந்த இடைவிடாத வான்வழித் தாக்குதலில் பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்படனர்.ஆனால்  இப்பொழுது யுத்தகள பலி எண்ணிக்கை 100ஐத் தாண்டிப் போயிருக்கிறது... ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது 25முதல் 30பேர் வரை பலியெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேலையிலே இந்த யுத்த நிறுத்த அறிவிப்பை போலியாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.இப்பொழுதும் கூட அணிசேரா நாடுகள் அமைப்பு உயிரோடுதான் இருக்கின்றது.

இந்த 2012-ல் உலகம் 'அமெரிக்கா' எனும் ஒற்றைத் தலைமையின் கீழான உலகமாக உருமாறிப் போய்கிடக்கிறது. இந்த நிலைதான் இப்பொழுது பாலஸ்தீன விவகாரத்திலும்!

ஓடும் ரத்த ஆறும்.. பெருங்குரலெடுத்து வீறிடும் அழுகுரலும் இப்போதைக்கு எந்த ஒரு தேசத்தாலும் நிறுத்திவிட முடியாது என்பதுதான் இன்றைய சூழல்.... சர்வதேச அரசியல் போக்கில் இப்படியான நிலைமைகள் நிரந்தரமாகவே இருந்துவிடப் போவதில்லைதானே! அதுவரை அதிர்வலைகளையும் அவல ஓலங்களையும் நம் காதுகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கும் ... இப்போது அது பாலஸ்தீனத்தின் காசாவாக இருக்கின்றது. இஸ்ரேலின் போலியான யுத்த நிறுத்தம் பாலஸ்த்தீனர்களை சாந்தப்படுத்தப் போவதில்லை.

-www.lankaviews.com/ta