Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்தியாவின் நீதி அநீதியானது!

altமும்பையை தாக்கிய தீவிரவாதி கருதப்படும் அஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது.

மும்பையை தாக்கிய 10 தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் என்று இந்திய நீதி மன்றம் முன்னரே அறிவித்துவிட்டது. அஜ்மல் கசாப் நேற்று காலையில் தூக்கிலிடப்பட்டார். அவரது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

 

அஜ்மல் கசாப் தாக்குதல் நடத்திதாக கூறப்படும் திகதியிலிருந்து பார்க்கையில் 04 வருடம் பூர்த்தியாக இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் அவருக்கு தூக்குத்தண்னை அழிக்கப்பட்டுள்ளது. ஆனால்,சாந்தன்,முருகன், பேரறிவாளன் ஆகியோறின் நிலை என்ன மும்பை தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதன் பின்னதாக தமிழக சிறைகளில் உள்ள தூக்குத் தண்டனை கைதிகளின் பக்கம் அநேகரது கவனமும் திரும்பியுள்ளது.

தமிழக சிறைகளில் மொத்தம் 11 பேர் தூக்கு தண்டனை கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் உச்சநீதிமன்றத்தில் 6 பேர் தண்டனை குறித்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மற்றவர்களின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது.

இதில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர். 1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரம்பதூரில் குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன் மற்றும் நளினி ஆகிய நால்வருக்கும் இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவரான ராஜிவ் காந்தியின் மனைவி சோனியாகாந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு அவரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

எனினும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்கு தண்டனை கைதிகளாகவே உள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்த இந்த மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களும், சில அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இம்மூவரது தண்டனையை குறைக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்தவருடம் ஆகஸ்ட் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அஜ்மல் கசாப் விடயத்தில் இந்தியாவின் நீதி செத்துக் கிடக்கிறது.