Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

கூடங்குளம் போராட்டம் நல்லது ஆனால் திட்டம் கைவிடப்படக் கூடாது

altரஸியாவின் துனைப் பிதமரும் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின் தலைவருமான டிமித்ரி ரொகோஸ் இன்று இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்;டிருந்தார்.இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை இந்தி வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்னா வரவேற்றார்.

 

விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட பத்திரிகை நிருபர்கள் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்ப்பில் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஸிய துனைப் பிரதமர் செர்னோபில் அணு உலையினால் ஏற்பட்ட பாரிய அழிவுகளை கவனித்த நாம் இந்த அணு உலை திட்டத்தை புதிய தொழில் நுட்பத்தோடு வடிவமைத்துள்ளோம். இதுதான் உலகிலேயே மிக மிகப் பாதுகாப்பான அணு உலை. என்றார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்கை எதிர்த்து மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குப் பின்னணியில் ஏதாவது வெளிநாடுகளின் சதி இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்து ரஸியப் பிரதமர் வெளிநாட்டுச் சதி இருந்தாலுமோ இல்லாவிட்டாலுமோ திட்டம் கைவிடப்படமாட்டாது. என்று கூறியதோடு எதிர்ப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் நியாயமானவைதான் என்றாலும் திட்டத்தைக் கைவிட முடியாது. இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் ஏற்படும் ஆபத்துக்களுக்கான இழப்பீடுகளை இரட்டிப்பாக்க வேண்டுமென்று கேட்கிறார்கள். இதனால் இரண்டாவது மூன்றாவது அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு கூடுதலான பணம் தேவைப்படும். இந்தியா அதனை ஏற்றுக் கொள்ள நேரிடும் என்றார்.

இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அது அவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்றால் இலங்கை அரசாங்கத்தோடு ஏன் ஒப்பந்தம் செய்துக் கொள்ள வேண்டும்? வெடித்து நாசமாகிவிட்ட பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் அழிந்து விட்ட பிறகு இழப்பீடு யாருக்கு வேண்டும்?