Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தாலிபான்களால் சுடப்பட்ட 14 வயது உரிமைப் போராளி

 

altபெண்களில் கல்வி உரிமைக்காகப் போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுபியா என்ற மாணவி பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சவாட் மலைப் பிரதேசத்தின் மிங்கோரா நகரில் வைத்து தாலிபான்களால் சுடப்பட்டு சவாட் மிஙகோரா நகரில் உள்ள பசாவர் இராணுவ மருத்துவமனையில் சேர்க்ப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

அவரது தலையிலும் கழுத்திலும் இருந்த குண்டுகள் இன்று வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டன என்றாலும், அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்யென மருத்துவ மனை வட்டாரங்கள் கூறின.பெண்களின் கல்வி உரிமைக்காக தனது 11 வயது முதலே போராடி வரும் சலாலாவுக்கு இப்போது 14 வயதே ஆகிறது.

தாலிபான்களின் இந்த மிலேச்சத்தனமான செயல் புத்திஜீவிகளின வன்மையான கண்டனத்துக்குட்பட்டிருப்பதோடு, பாகிஸ்தானில் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. 'பெண்கள் மட்டுமல்ல யாரக இருந்தாலும் சரீ அத்துக்கு மாற்றமாக செயற்பட்டால் அவர்கள் எங்களிடமிருந்து தப்ப முடியாது " என்று தாலிபான்கள் கூறும் நிலையில், குற்றவாளிகளைப் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ. 10,00000 லட்சம் தருவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கல்வி என்பது அனைத்து மனிதப் பிறவிகளினதும் அடிப்படை உரிமை .அதனைப் பறித்துக் கொள்ள யாருக்கும் இடமளிக்க முடியாது.

-www.lankaviews.com/ta