Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"சமூக விடுதலைக்கு உரமூட்டி" விடியல் சிவா மரணித்து விட்டார்.

விடியல் சிவா (சிவஞானம்) என அழைக்கப்பட்ட, விடியல் வெளியீடுகள் மூலம் அறியப்பட்ட சிவாவின் மரணம் ஈடு இணையற்றது. வியாபாரத்தை மையமாக வைத்து நூலைகளை வெளியிடும் இன்றைய நூலக  அமைப்பில், சமூக நோக்கத்தை மையமாக வைத்து நூல் வெளியீடுகளை கொண்டு வந்த ஒரு தோழனின் மரணம், நிரப்பப்பட முடியாத இழப்பாகும்.

மிக அரிய பல நூல்களை தமிழில் கொண்டு வந்த மனிதன், சமூக நோக்கற்ற எந்த நூலையும் பதிப்பிக்க மறுத்தவர்.

புற்று நோய்க்குள்ளாகி தன் மரணத்தின் நாட்கள் எண்ணப்பட்ட நிலையிலும் கூட, நூல்களை அச்சேற்றிக் கொண்டு இருந்தவர். மாவோவின் முழு நூல் தொகுப்பையும் தன் மரணத்துக்கு முன் தமிழில் கொண்டு வந்துவிட உழைத்த மனிதன், இந்த வெளியிட்டு நாட்களும் மரணமும் போட்டி போடும் அளவுக்கு அவர் சமூக நோக்குடன் தீவிரமாக உழைத்தார். மரணத்துக்கு முன் மாவோவை தமிழில் பார்த்து விடும் தன் இறுதி லட்சியத்துடன் உழைத்தும், அந்த வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன் மரணம் முந்திக்கொண்டது.

புற்றுநோய் ஏற்படுத்திய வலி ஒருபுறம், இந்த நிலையில் தன் மரணத்துக்கு முன் மூன்றாம் தரமான அவதூறுக்கும் கூட அவர் பதில் எழுதி போராடிட வேண்டி இருந்தது.

இனி தமிழில் சமூக நோக்குள்ள நூல்களை கொண்டு வர விடியல் சிவா இல்லை. இந்த இடைவெளி நிரப்பப்டும் போது தான், விடியல் சிவாவின் சமூக பங்கு மேலும் ஒரு படி உயரும்.

-புதிய ஜனநாயக மக்கள் முன்னணி (30/07/2012)