Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆயுதம் ஏந்திய அமைச்சர்களும், இராணுவ ஆட்சியும்!

முன்னர் ஆயுதம் ஏந்தியவர்களும், தற்போது ஆயுத குழுக்களை வைத்திருப்பவர்களும், ஆயுதமுனையில் மக்களை அடக்கி ஆள்பவர்களும் நிறைந்த பாராளுமன்றம் தான் இலங்கை பாராளுமன்றம்.

வடக்கு மாகாணசபைத்தேர்தல் வாயில் வீணி வடியத் தொடங்கி விட்ட நிலையில் “வட மாகாணசபைத்  தேர்தலில்  அரசாங்கம்  நிச்சயமாக  நடத்தவிருக்கின்றது. அந்த  நேரத்தில்  தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின்  பலத்தைக்  காட்டுங்கள்  பார்ப்போம்  என  அமைச்சர்  டக்ளஸ்   கூறிய அதே நேரம் தேர்தலை நடத்துங்கள் பார்ப்போம் என கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஒருமித்துக் கூறினர்.”


“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சகலரும் ஆயுதம் தத்தவர்கள் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த்தேர்தல் கூட்டமைப்பு என்றும், தமிழ்த் தேசிய இராணுவம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்பு எம்.பி.க்களைப் பார்த்து கூறினார். ”


இவர்கள் பாராளுமன்ற சுகத்தில் மூழ்கியபடி அடுத்து வரும் தேர்தலிற்கான காய் நகர்த்தலிலேயே குறியாய் தங்களிற்குள் குரைத்துக் கொள்வது தான் பாராளுமன்ற சாக்கடையின் வெட்டுமுகம்.

இங்கே மக்கள் அவலம் வாக்குப் பெறுவதற்கான தேர்தல் விஞ்ஞாபனமாய் ஆவது மட்டுமே அன்றி வேறெந்த மாற்றமும் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியது இல்லை என்பதனை மக்கள் ஏற்க்கனவே உணர்ந்துள்ளனர். அவர்களின் கடந்தகால சொந்த அனுபவம் புதிய தேடலை நாடி நிற்க்கின்றது என்பதே யதார்த்தம்.

---முரளி 05/04/2012