Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"மின்சார நாற்காலி" என்ற கதை: பேரினவாதிகளிற்கு பெரும்யோகம்.

அடுத்தமாதம் நடக்கவிருக்கின்ற தேர்தலில் வாக்குகளை பெருவாரியாக பெற்று வெற்றி வாகை சூடுவதற்க்காக மகிந்த இனவாத அரசு, ஜெனீவாவில்  "மின்சார நாற்காலி" என்ற  பொய்க்கதை ஒன்றினை தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

பேரினவாதிகளிற்கு பெரும்யோகம்.

ஜெனிவாவிலே தமிழர்கள் மகிந்தவை தூக்கிலிடப் போகின்றார்கள், நாட்டைப் பிரித்து சிங்களவர்களை அழிக்கப் போகின்றார்கள் என்றெல்லாம் மிகையான போலிப் பிரச்சாரம் செய்து, சிங்கள மக்களிடம் தன் பௌத்த மேலாண்மையை நிலைநாட்டி பொருளாதார சமூக நெருக்கடிகளினால் தனக்கெதிராக சிங்கள மக்கள் திரண்டெழுவதை தடுத்து நிறுத்தி, தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை அவர்களை ஆதரிக்கச் செய்து தன் அதிகாரத்தை நன்கு நிலைநாட்டிக் கொண்டுள்ளது மகிந்த பேரினவாத அரசு.

 

உள்நாட்டில் ஆதரவு இருக்கும் வரை மகிந்தவை கீழிறங்க வைக்க முடியாது. பலமிழந்து நிற்கும் எதிர்க்கட்சிகள் பெரிதாக வாய் திறக்காது. காரணம் அவர்கள் மனித உரிமை விடயத்தில் மகிந்தவிற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை. இதனை போதுமான அளவு நேர்மையாக அம்பலப்படுத்துவதற்கு பலமான இடதுசாரி இயக்கம் இன்மை என்பது பெரும் குறையாகும்.