Fri05292020

Last updateSun, 19 Apr 2020 8am

எமது அன்புக்குரிய சமூக ஆர்வலர்களே! நண்பர்களே! எழுத்தாளர்களே! வெளியீட்டாளர்களே! சமூக அமைப்புக்களே! தோழர்களே!

எமது அன்புக்குரிய சமூக ஆர்வலர்களே! நண்பர்களே! எழுத்தாளர்களே! வெளியீட்டாளர்களே! சமூக அமைப்புக்களே! தோழர்களே!

படிப்பகம்” புத்தகக்கடையும் நூலகமும் யூலை மாதம் 4ம் திகதி 2015 அன்று யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள 411ம் இலக்கக் கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டதனை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

சமூகத்தின் பால் கரிசனையும் அக்கறையும் கொண்ட சிலரின் கூட்டு முயற்சியாக தமிழ் மக்களின் கடந்தகால அரசியல் மற்றும் சமூகநலன் சார்ந்த வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் 2009ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது தான் படிப்பகம் நிறுவனம். படிப்பகத்தின் நன்நோக்கத்தைப் புரிந்துகொண்ட சமூக ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவும் ஊக்கமளித்து தம்மிடமும், தமக்கு அறிந்தவர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் உள்ள ஆவணங்களை எமக்கு தந்து உதவியளித்தனர். இன்று படிப்பகத்தின் இணையத்தளத்தில் (www.padippakam.com) பதினைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் மற்றும் இலக்கிய வெளியீடுகள் முதல் காணொளிகள் வரை நீங்கள் வாசிக்கவும் பார்க்கவும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். எமக்கு ஆவணங்களைத் தந்து உதவிய அனைவருக்கும் இந்தத் தருணத்தில் மீண்டும் படிப்பகம் நிறுவனத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

உங்கள் எல்லோரதும் ஆதரவும் ஊக்கமளிப்புமே இணையத்தள செயற்பாட்டிலிருந்த படிப்பகம் இன்று யாழில் சமூகம் சார்ந்த முற்போக்கு நூல்களுக்கான புத்தகக்கடையாகவும், நூலகமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த பல பத்தாண்டுகளாக பெரும்பான்மையான தமிழ் மக்களிடையே வாசிப்பு மற்றும் கலையில் ஆதிக்கம் செலுத்தி வருவது இந்திய சஞ்சிகைகளும் புத்தகங்களும் தமிழகத்தில் தயாரிக்கப்படும் சினிமாக்களுமே ஆகும். ஒரு குறித்த சிறு அளவினர் மாத்திரமே சமூகம் சார்ந்த முற்போக்கு கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டு அவற்றை பரவல்படுத்தும் நோக்கில் கடந்தகாலத்தில் செயலாற்றினர். 70வது 80களில் முற்போக்கு இலக்கியவாதிகளால் சமூகம் சார்ந்த கலை இலக்கியங்கள் கணிசமான அளவு படைக்கப்பட்டன. போராட்ட அமைப்புக்களினால் இளைஞர்கள் மத்தியில் உள்நாட்டு வெளிநாட்டு சமூகம் குறித்தான கலை இலக்கிய வாசிப்புக்கள் ஊக்குவிக்கப்பட்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னாளில் போராட்டம் உக்கிரமடைந்து மக்களின் வாழ்க்கை மரண அவலத்திற்குள் சிக்குண்டு சின்னாபின்னாமாகியது. இக்காலங்களில் வாசிப்புகள் பெரும்பான்மையான மக்களிடம் அற்றுப்போனது எனலாம். பத்திரிகைகளும் ஊடகங்களும் வழங்கிய பக்கச்சார்பான செய்திகளே மக்களின் ஒரே வெளி உலக தொடர்பாக இருந்தது. வெளி உலகில் இருந்து எந்த படைப்புகளும் தமிழ் மக்களை சென்றடைய முடியவில்லை அல்லது மறுக்கப்பட்டது.

ஆயுதப் போராட்டம் முடிவுற்று ஆறு வருடங்களிற்கு மேலாகிவிட்டது. பெரும்பான்மை மக்களை மீண்டும் தென்னிந்திய குப்பை வெளியீடுகளும் சினிமாவும் ஆக்கிரமித்துள்ளன. இங்குள்ள புத்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்ற 99 வீதமான புத்தகங்கள் மக்களை சிந்தனை அற்ற சடங்களாக உருவாக்க கூடிய படைப்புகளே.

மேலும் நவதாராள நுகர்வுக் கலாச்சாரத்தை திட்டமிட்டு மக்கள் மீது திணிக்கின்ற பத்திரிக்கை விளம்பரங்கள் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை மக்களை நோக்கி பாய் விரிக்கப்பட்டு மக்களின் சமூக நலன் நோக்கிய சிந்தனைகள் செயற்பாடுகள் மழுங்கடிக்கப்படுகின்றன.

சமூகம் பற்றி சிந்திக்கின்ற நாம் ஒவ்வொருவரும் கூட்டாக இணைந்து மக்கள் மத்தியில் முற்போக்கு கலை இலக்கியங்களை எடுத்துச் செல்ல வேண்டியது இன்றைய உடனடியான அவசியமான பணியாக அமைந்திருக்கின்றது. இதன் முதலடியாக முற்போக்கு நூல்களை வாசிக்கும் பழக்கத்தையும் மற்றும் நூல்களை அறிமுகம் செய்து வைக்கும் எமது பயணத்தில் உங்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு செயலாற்ற அழைக்கின்றோம்.

முப்பது வருடங்களுக்கு முன் தோழர் மணியத்தால் இலாப நோக்கற்று சமூக நலன் கருதி நடத்தப்பட்ட புத்தகக்கடை தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு புத்தக நிலையம் யாழில் இன்று வரையும் இயங்க முடியவில்லை என்பதனையும் இந்த தருணத்தில் ஞாபகம் ஊட்ட விரும்புகின்றோம்.

எமது இந்த புத்தக நிறுவனம் இலாப நோக்கற்றது. சமூகத்தின் முற்போக்கு இலக்கிய வாசிப்பினை ஊக்கப்படுத்தும் நோக்கோடு மேலும் பல பணிகளை முன்னெடுக்கும் நோக்கமுடையது. எதிர்காலத்தில் கூட்டு நூல் வாசிப்புக்கள், புத்தக வெளியீடுகள் இலக்கிய கலந்துரையாடல்கள் புத்தகங்களை கிராமங்களிற்கு எடுத்துச் சென்று அறிமுகம் செய்வது என பல தளங்களில் பணி ஆற்ற உறுதிபூண்டுள்ளோம்.

எழுத்தாளர்களே! வெளியீட்டாளர்களே! உங்களுடைய நூல்கள் மற்றும் வெளியீடுகளை படிப்பகத்தில் விற்பனைக்கு வைக்கும் ஒழுங்குகளுக்கு எம்மை அணுகும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

படிப்பகத்தில் உங்கள் படைப்புக்கள், ஆக்கங்கள், வெளியீடுகளை விற்பனைக்கு வைப்பதன் ஊடாக வாசகர்கள் உங்கள் நூல்களை இலகுவாக பெறுவதற்கான ஒழுங்குகளை எம்மால் ஏற்படுத்தித்தர முடியும்.

மேலும் இரவல் கொடுக்கும் நூலகத்துக்கு, தங்களது படைப்புகள், வெளியீடுகள் மற்றும் பிற நூல்களை தந்து உதவுமாறு கேட்கின்றோம்.

இந்த படிப்பகம் நிறுவனத்தை உருவாக்க இதுவரை பல இலட்சம் ரூபாக்களை நாம் செலவு செய்துள்ளோம். மேலும் நிதி எமக்கு தேவைப்படுகின்றது. இதுவரை செய்த மற்றும் செய்யவுள்ள செலவுகள் உங்கள் பார்வைக்கு

1.கட்டிடத்திற்கான முன்பணம் (100000 ரூபா)

2.கட்டிடத்திற்கான மாதாந்த வாடகை (10000 ரூபா – தொடரவுள்ள மாதாந்த செலவு)

3.கட்டிடத்தை புத்தகசாலையாக மாற்றுவதற்கான திருத்தல் வேலைகள் (250000 ரூபா)

4.விற்பனைக்கான புத்தகங்கள் 200000 ரூபா) (மேலாதிகமாக 10 லட்சம் தேவை)

5.நூல்நிலையத்திற்கு பலர் புத்தகங்களை புலம்பெயர்ந்த நாடுகளில் அன்பளிப்பு செய்துள்ளனர். அவற்றினை இலங்கைக்கு கொண்டு சென்ற செலவு (கிடைக்கிறதைப் பொறுத்து)

6.முழுநேர ஊழியர் இருவருக்கான மாதாந்த ஊழியம். (35000 ரூபா – தொடரவுள்ள மாதாந்த செலவு)

7.புத்தகநிலையத்தில் இருக்கக் கூடிய அடிப்படை வசதிகள் (மின்சாரம் தண்ணீர் தொலைபேசி இணைப்பு இணைய வசதி... பிற) (20000 ரூபா -தொடரவுள்ள மாதாந்த செலவு)

இதுபோன்ற பல விடையங்களை பூர்த்தி செய்வதற்கும் மேலும் மேலே குறிப்பிட்டுள்ள எமது எதிர்கால வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் எமக்கு மேலும் நிதி தேவைப்படுகின்றது. எனவே சமூக அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள்; மற்றும் நண்பர்களே எமது இந்த பொருளாதாரச் சுமையில் நீங்களும் பங்குபற்றி எமது சுமையை குறைக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம்

படிப்பகம் நிறுவனத்தினர் சார்பாக

சீலன் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. / 00447778810261

இரயாகரன் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. / 0033954313776

தொடர்புகளுக்கு

சந்திரகுமார் (இலங்கை) தொலைபேசி இலக்கம்: 0094713 006 971 Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

கௌரி (இங்கிலாந்து) தொலைபேசி இலக்கம்: 00447404094978 Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

சுமதி (கனடா) தொலைபேசி இலக்கம்: 001416475003496 Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

ஜெகன் (பிரான்ஸ்) தொலைபேசி இலக்கம்: 0033751210442 Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

முரளிதாஸ் (டென்மார்க்) தொலைபேசி இலக்கம் : 004526842612 Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

புதுமைலோலன் (சுவிஸ்) தொலைபேசி இலக்கம்: 0041786094945, Email- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.