Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

மைத்திரிபாலவின் நல்லாட்சியில் இலங்கை பிரஜை நாடு கடத்தல்!

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தன்னை கைது செய்து நாடு கடத்துவதை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி குமார் குணரத்னம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு முன்னர் விசாரணைக்கு வந்தபோது குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் இன்று (18) குறித்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது போதிய ஆதாரங்கள் இல்லாததால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குமார் குணரத்னம் சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு வந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தான் மைத்திரிபாலவின் நல்லாட்சி. சொந்த நாட்டவர்களையே வௌிநாட்டுக்கு நாடு கடத்தும் நல்லாட்சி இதற்குப் பேர் தான் அவர்களின் மொழியில் ஜனநாயகம், நீதி. மகிந்த அரசு போன்றே இந்த அரசும் நீதித்துறையினை சுயாதீனமாக இல்லாமல் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துள்ளது. ஜனநாயகம் என்பது அரசின் நண்பர்களிற்கு மாத்திரமே என ஆளும் வர்க்கம் தன்னை அம்மணமாக்கி காட்டி உள்ளது.