Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் குமார் குணரத்தினத்தினை நாடுகடத்த முயலும் புதிய அரசுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் (படங்கள்)

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மறுக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதாகவும், சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை தருவதாகவும் கூறி மைத்திரி தலைமையில் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்தது புதிய அரசு. கடந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக அச்சுறுத்தல்களின் காரணமாக புலம்பெயர்ந்த அரசியல்வாதிகள், ஊடகவியளாலர்கள் நாட்டிற்க்கு திருப்பி வந்து செயற்ப்படலாம் என பகிரங்க அழைப்பும் விடுக்கப்பட்டது.

தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் கடந்த காலத்தில் அரசியல் காரணத்திற்க்காக அச்சுறுத்தலுக்கு உள்ளானதன் காரணமாக புலம்பெயர்து வாழ்ந்து வந்தார். புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் இலங்கை அரசியலில் தொடர்ச்சியாக ஈடுப்ட்டுக் கொண்டிருந்த ஒருவர். கோத்தபாயாவின் வெள்ளை வான் கடத்தலுக்க உள்ளாகி கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில் அவுஸ்த்திரேலிய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டது அனைவரும் தெரிந்த ஒரு விடயமே.

இந்த நிலையிலும் தோழர் தொடர்ச்சியாக நாடு திரும்பி அரசியலில் ஈடுபடும் நோக்கில் முயற்சியில் இருந்தார். ஜனாதிபதி தேர்தல் அவர் மீண்டும் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கியது. அதனை அவர் பயன்படுத்தி நாட்டுக்குள் வந்து ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிய வேலைத்திட்டத்தை பிரச்சாரமாக முன்னெடுத்து மக்களிடம் கொண்டு சென்றார்.

தற்போது புதிய அரசு போலிக் குற்றங்களை சுமத்தி அவர் குடிவரவு விதிகளை மீறியதனால் நாட்டை விட்டு வெளியேறும் படி அறிவித்துள்ளது. இதே அரசின் முக்கிய நபர்கள், அரசியல் காரணங்களினால் புலம்பெயர்ந்தவர்களை நாடு திரும்பும் படி தேர்தல் பிரச்சாரங்களின் போது அழைப்பு விடுத்திருந்தனர். தோழர் குமார் அரசியலில் ஈடுபட்டதனால் உயிர் அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர்ந்த இலங்கை பிரஜை. தோழர் குமாருக்கு பிரஜா உரிமை வழங்கி அவரை இலங்கை பிரஜை ஆக்குவதன் மூலமும் அவரது அரசியல் செயற்பாட்டிற்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலமும் தேர்தல் காலத்தல் கூறிய வாக்குறுதியை  நிறைவேற்றும் படியும் கூடவே அடக்குமுறை காரணமாக புலம்பெயர்ந்த மூவின அரசியல் செயற்பாட்டாளர்களையும் நாடு திருமபி அரசியலில் ஈடுபட இடமளிக்கும் படியும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும் படியும் கோரி கடந்த 5ம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக விரைவில் வடக்கு கிழக்கிலும் இந்த போராட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.

கொழும்பு போராட்டங்கள்

 களுத்துறை போராட்டம்

காலி போராட்டம்!

பதுளை போராட்டம்

 

கண்டி போராட்டம்