Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அரசுக்கு சார்பானவரா!?

"நாட்டின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தற்போதைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு பக்கச் சார்பாக செயற்படுகின்றார்" எனறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிப்பது உண்மையா?

இது உண்மை என்றால், ஒரு பொய் மூடிமறைக்கப்படுகின்றது. அதாவது நீதிமன்றங்கள் பக்க சார்பாற்றதாகவும், தனது முந்தைய நீதி கடமை பக்க சார்பற்றதாக இருந்தாக கூறுகின்ற பித்தலாட்டத்தை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா செய்கின்றார். நீதிமன்றங்கள் என்பது மக்களுக்கு எதிரானதும், ஆளும் வார்க்கத்துக்கு சார்பானதுமாகும். ஆளும் வர்க்கங்கள் மக்களுக்கு எதிராக உருவாக்கின்ற சட்டங்களைக் கொண்டு, ஆளும் வர்க்கத்துக்கு எற்ப தீர்ப்புக் கூறும் கூலிப்படையாகத்தான் நீதி மன்றங்களும் சட்டங்களும் செயற்படுகின்றது. அரசு கொண்டு இருக்க கூடிய படைகள், சிறைக் கூடங்கள், நிதிமன்றங்கள் அனைத்தும், ஓரே நேர் கோட்டில் உள்ள ஆளும் வர்க்கத்துக்கு ஆதாரவாகவும், மக்களுக்கு எதிராக செயற்படும் அடக்குமுறை உறுப்புகளேயாகும்.

இந்த உண்மையை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வால் மூடிமறைக்க தெரிந்தளவுக்கு, இன்றைய நாட்டின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்சால் செய்ய முடியவில்லை என்பதே சரத் என் சில்வாவின் அங்கலாய்ப்பு. நீதியரசர் மொஹான் பீரிஸ் அதை வெளிப்படையாக செய்வதுடன், ஆளும் வர்க்கத்தைத் தாண்டி ஆளும் தரப்புடளும் சேர்ந்து கொட்டமட்டிப்பதையே "பக்கச் சார்பாக" செயற்படுவதாக சில்வா குற்றம்சாட்டி  நிற்கின்றார். இதன் மூலம் ஆளும் வர்க்கம் சார்ந்த எதிர்க்கட்சியுடன் சேர்ந்து மக்களுக்கு எதிராக தன்னை அடையாளப்படுத்தும் இவர், ஆளும் வர்க்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் அனைத்து தரபப்புக்கு இடையில் நீதிமன்றங்கள் தங்கள் வர்க்க சார்பை மூடி மறைக்க கோருகின்றார்.