Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

அமெரிக்கா, மூன்று தசாப்தகால பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளதாம்!

"மூன்று தசாப்தகால பயங்கரவாதத்தினால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள இலங்கைக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்."

எந்த அமெரிக்காவை நம்புமாறு தமிழ் மக்களிடம் யாரெல்லாம் கூறுகின்றனரோ, அவர்கள் தங்கள் கடந்தகால தலைமையையும் தங்கள் நடத்தையையும் "பயங்கரவாத" செய்ற்பாடாக அமெரிக்காவுடாகச் சொல்லி விடுகின்றனர்.

அமெரிக்காவோ தமிழ் மக்கள் பிரச்சனையை பயங்கரவாதமாக பார்க்கின்றதே ஓழிய அரச பயங்கரவாதமாக பார்க்கவில்லை. இலங்கை அரசை தங்கள் நண்பனாகவும், மகிந்த அரசின் வடக்கு கிழக்கு ராணுவ ஆக்கிரமிப்பினை பயங்கரவாத செயல் அல்ல என்று கூறி உள்ளது. அரச பயங்கரவாத்துக்கு உதவுவதும், தங்களுடை உலக ஒழுங்குக்குள் வருவதையே அவர்கள் "இலங்கையின் நண்பர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்து"வதாக கருதுகின்றனர்.