Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்து பயங்கரவாதம் செய்த கொலை ரோகித்தின் மரணம்!

பிராமண குலக்கொழுந்துகள் தவிர்ந்த மற்ற மனிதர்கள் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்று மனு என்ற இந்துமதப் பயங்கரவாதி அந்த நாளில் மனுதர்ம சாஸ்திரம் என்னும் பயங்கரவாத அறிக்கையில் எழுதினான். இந்த பார்ப்பனப் பயங்கரவாதம் தான் இன்று வரையும் இந்தியாவின் கொள்கையாக இருக்கிறது. அதனால் தான் இன்றைய பார்ப்பன பண்டார பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த ஏழை மாணவர்களை பலி கொடுக்கிறார்கள். ரோகித் வெமுலாவை பலி எடுத்து விட்ட பிறகும் கூட எந்தவிதமான கூச்சமும் இன்றி அவனை தேசத்துரோகி, தீவிரவாதி என்று இந்த பார்ப்பன நாய்கள் இடும் ஊளைகள் மனித குலத்தையே வெட்கி தலை குனிய வைக்கிறது.

இந்திய மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிக்கும் கள்ளர் கூட்டம் ரோகித் வெமுலாவை தேசத்துரோகி என்று சொல்கிறது. மலைகளை, காடுகளை, நதிகளை விற்க வேண்டாம்; இயற்கையை அழித்து நாட்டை பாலைவனமாக்க வேண்டாம் என்று போராடும்  பழங்குடி மக்களை கொலைகாரப்படைகளை ஏவிவிட்டு கொல்லும் கூட்டம் யார் தேசவிரோதிகள், யார் தேசபக்தர்கள் என்று பொழிப்புரை சொல்லுகிறது. நாட்டைக் கொள்ளையடிக்க வந்த பிரித்தானிய காலனித்துவவாதிகளின் காலைப் பிடித்து கண்கண்ட தெய்வங்கள் என்று போற்றிய அடிமைநாய்கள் சுதந்திரத்தையும், மனிதத்துவத்தையும் தூக்கிப் பிடிக்கும் மனிதரைப் பார்த்து தேசத்துரோகிகள் என்று ஊளையிடுகிறார்கள்.

"இந்து மதம் கொடூரங்களின் கூடம்" என்று அம்பேத்கார் சொன்னார். இந்து மதத்தின் கொடூரங்களை வாழ்நாள் முழுதும் அனுபவிக்கும் ஒடுக்கப்படும் மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் அது தீவிரவாதம் என்பது மனிதரின் பிறப்பை வைத்து உயர்வு, தாழ்வு கற்பிக்கும் காட்டுமிராண்டி இந்துமத முட்டாள்களின் முடிவு. இந்துமதத்தின் பைத்தியக்காரத்தனங்களை எதிர்ப்பவர்களை அந்த வெறியர்கள் கொலை செய்வார்கள். அல்லது இந்தச் சித்திரவதைகளைத் தாங்கி கொள்ள முடியாமல் "ஒரு மனிதனின் மதிப்பு வெறும் உடனடியான ஒரு அடையாளத்திற்குள் சுருக்கப்பட்டு விட்டது. ஒரு ஓட்டாக, ஒரு நம்பராக...  கல்வி பயிலும் இடம், தெருக்கள், அரசியல் எங்கும் யாரும் மனிதனை அவனது மனதுக்காக மதிப்பதில்லை. வாழ்விலும் சாவிலும் கூட..." என்று எழுதி விட்டு தன்னுயிர் நீத்த ரோகித் போல தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள்.

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மாணவனாக படித்து வந்தார் செந்தில் குமார். பன்றிகளை வளர்த்து மேய்க்கும் 'பன்னியாண்டி' என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம். அந்த சாதியிலேயே அதிகம் படித்தவர். பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் பதக்கங்கள் சான்றிதழ்கள் என்று குவித்தவர். கனவு காணுங்கள் என்று சொன்ன கலாம் இவருக்கு மிகவும் பிடித்தமானவர். எப்படியாவது படித்து முன்னேறி தன் குடும்பத்தின் நிலையை மாற்றிட வேண்டுமென்ற முனைப்போடு படித்து வந்தார்.

'பன்னி மேய்கிறவனுக்கு இங்க என்ன வேலை? "உனக்கெல்லாம் படிப்பு வராது போய் பன்னி மேய்" என்று சொன்ன ஆசிரியர்கள், பல வகைகளிலும் தடை போட்டு அவரை பல்கலைக்கழகத்திலிருந்து துரத்த முயன்றது ஆதிக்க சாதிகள் நிறைந்த துறை நிர்வாகம். 2008 பிப்ரவரி 24 அன்று தன் விடுதி அறையில் செந்தில் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று இதே பல்கலைக்கழகத்தின் சாதிவெறிக்கு பலியான செந்தில்குமாரின் மரணத்தை ஜோசுவா ஐசாக் அசாத் முகப்புத்தகத்தில் பதிவு செய்கிறார்.

இந்த மரணங்களிற்கு எதிராக ஒப்புக்கு ஒரு கண்ணீர் சிந்தி விட்டு கடந்து செல்கிறார்கள். மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செய்கிறார்கள். முகப்புத்தகத்தில் கவிதை எழுதுகிறார்கள். கண்ணீர் சிந்துபவர்கள், மெழுகுதிரி ஏற்றுபவர்கள் ஏன் போராடுபவர்களிற்கு என்றும் பக்கத்துணையாக இருப்பதில்லை. சாதிவெறியை, இனவெறியை, மதவெறியை எதிர்த்து போராடுபவர்கள் ஏன் எப்போதும் மிகச் சிலராகவே இருக்கிறார்கள். அதிகார, ஆதிக்க சக்திகளிற்கு எதிராக போராடுபவர்கள் மனம் உடைந்து மரணத்தை தழுவதற்கு ஒதுங்கி இருந்தி வேடிக்கை பார்க்கும் நமது கோழைத்தனமும் ஒரு காரணம் அல்லவா.

இலங்கையில் கல்வி என்னும் அடிப்படை உரிமையை காசிற்கு விற்க முயலும் இலங்கையின் நவதாராளவாத கொள்ளை அரசிற்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். "காணாமல் போனவர்களையும் வெளிப்படுத்து", "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" என்று சமவுரிமை இயக்கம் போராடுகிறது. இப்போராட்டங்களிற்கு பங்களிப்பு செய்வது இல்லை என்பது மட்டும் இல்லாமல் இப்போராட்டங்களை ஒரு செய்தியாக பகிர்ந்து கொள்வதற்கு கூட பலர் முன்வருவதில்லை என்பது தான் கசப்பான யதார்த்தமாக இருக்கிறது.

சாதியை வைத்து, மொழியை வைத்து, மதத்தை வைத்து மக்களை பிரிக்கும் ஆதிக்க சக்திகளை ஒன்று சேர்ந்து முறியடிப்போம். ரோகித் வெமுலாவை, செந்தில்குமாரை பலி எடுத்த இந்து பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவோம் என்று அவர்களை நெஞ்சில் நிறுத்தி உறுதி கொள்வோம்.