Wed01202021

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்கிற்கு இன்னொரு வசந்தம்!

புதுக்கட்சி ஆரம்பிக்கப் போகின்றார் கே.பி?

டக்கிளஸின் அரசியலுக்கு ஆயுள் கண்டமோ?

புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பது குறித்து "விடுதலைப்  புலிகளின் முன்னாள் குமாரன்  (கே.பி)"  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட இருக்கும் அவரது கட்சி நடுநிலையான போக்கைக் கொண்டதாக இருக்கும் என்று இது தொடர்பான செய்தி வெளியிட்டுள்ள அரசியல் ஆருடர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான ஒத்திக்கைகளை வடபகுதி சென்று நடாத்தி சென்றுள்ளார். இதன் பின் தன் ஒத்திக்கை (வடபகுதியில், மேலும் தன் சர்வாதிகாரத்தை சதிராட்ட மக்களை சாகடிக்க) ஆய்வறிக்கையை  கோத்தபாயவிற்கு சமர்ப்பித்து, ஒப்புதலும் வாங்கியுள்ளார்.

 

30 வருடமாக ஓடித்திரிந்ததன் முடிவில் இன்று அமைதியான வாழ்க்கை கிடைத்துள்ளது…

……யாழ்நகரில் குமரன் பத்மநாதன்

"கடந்த 30 வருடங்களாக எமது மக்கள் உலகம் முழுவதும் அநாதைகளாக ஓடித்திரிந்தனர். முடிவில் எமக்கிருந்த அமைதியான வாழ்க்கை கிடைத்திருக்கின்றது. யுத்தம் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்திருக்கிறோம். எமது மக்கள் அனுபவித்த துயரங்கள் சோகங்கள் சொல்ல முடியாதவை"  என 'விடுதலைப் புலிகளின் முன்னாள்  குமாரன் பத்மநாதன்' தெரிவித்துள்ளார்.

வளமாக வாழ்ந்த எமது இனம் இன்று எல்லாவற்றையும் இழந்து அநாதைகளாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்தவுடன் எனது நண்பர்களுடன் நான் பேசினேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை வாழ வைக்க வேண்டும் என்று அந்தக் கடமையை நான் ஆரம்பித்து விட்டேன். அதிகமாக வன்னியிலேயே எனது பணிக்காலத்தை நான் செலவிடுவதற்கு விரும்புகின்றேன். யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள அவர்களை வாழ வைப்பதே எனது இலட்சியம். அந்த மக்கள் அனுபவித்த இன்னல்கள் கற்பனைக்கும் எட்டாதவை.

குடாநாட்டு மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எமது அமைப்பின் கிளையொன்றை வடமராட்சியில் ஆரம்பித்துள்ளோம். ஒன்றுமட்டும் உண்மை எமது அடுத்த சந்ததியாவது சந்தோஷமாக வாழ வேண்டும். எமக்கு கல்வியும் பொருளாதாரமுமே உயிர் மூச்சு அது போனால் கலை கலாசாரம் போன்றவற்றை நாம் இழந்து விடுவோம்.

குடாநாட்டின் சகலதிற்கும் குத்தகையாளன் நானேயென  கொழும்புத்துறை முதல் பருத்தித்துறை வரை ஓடித்திரிகின்றார் டக்ளஸ். இதற்குள் எம் அடுத்த சந்ததியையாவது வாழவையுங்கள் என்று குடாநாட்டுமக்கள் இவரின் "அமைப்புக்கு" அழைப்பாம்.

30.வருடமாக உலகம் முழுவதும் ஓடித்திரிந்து 30.கப்பல்களில் ஆயுதம் வாங்கி, 40,000 மக்களை சாகடித்து, பிரபாகரனை முள்ளியவாயக்காலின் 300.மீற்றருக்குள் வரவழைத்து, உன்னைக் நீர்மூழ்கிக்கப்பல், அல்லது வானூர்தி கொண்டு காப்பாற்றுவேற்றுவென காப்புறுதி கொடுத்து, கடைசியில் கரலாக்கட்டை கொண்டு மண்டையை பிளக்கவைத்து காலனிடம் சேர்ப்பித்தவர் தான் இக் கே.பி.  தமிழ் மக்கள் தம்வாழ்வில் மறக்கமுடியா கறைபடிந்த மாபாதகங்களை செய்துவிட, அம் மக்கள் இவரை தங்கள் சேவைக்கு அழைக்கின்றார்கள்?

கே.பி இலங்கை அரசின் கைதி,  இவர் தான் தடுப்புக்காவல் கைதியாகவும், அரசின் உயர் அதிகாரியாகவும் வலம் வருகின்றார்.  தடுப்புக்காவல் கைதி ஒருவர் அரசின் உயர் அதிகாரியாக உலாத்துவது உலகில் இலங்கையிலேயே இடம் பெறுகின்றது. காரணம் ஆட்சியாளர்களும் "தடுப்புக்காவல் கைதிகள்தானே!"

இக்கைதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்தப் பாதுகாப்புடன் யாழ்.நகருக்குச் சென்று "முக்கிய சமூகப் பிரதிநிதிகளையும் யாழ்.பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும்" அழைத்து கட்சி அமைப்பது தெடர்பாக ஆராந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவரின் அரசியல் பிரவேசத்தினை ராஜபக்ச சகோதரர்கள் ஊக்குவித்து வருகின்றனர். இந்த ஊக்குவிப்புத் தான் டக்கிளஸிற்கும் யாழ் இராணுவத் தளபதிக்கும் இடையிலான முறுகலாகியுள்ளதோ?.  ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி கிழக்குப் பொறுப்பாளர் ரட்ணசிங்கம் சதீஸ் சுட்டுக்கொல்லப்பட்டாரோ?. இது டக்கிளஸின்  அரசியல் ஓதுக்கலிற்கான அல்லது அஸ்தமனத்திற்கான ஆரம்பமோ?

தளபதி : டக்ளசிற்கு எச்சரிக்கை .

"ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் யாழ் இராணுவத் தளபதிக்குமிடையேயான முரண்பாடுகளுக்கு மத்தியில் டக்ளஸ் தேவானந்தா மீது தனது அதிகாரத்தை பயன்படுத்தும் நிலைக்கு (மகிந்த கோத்தபாய உத்தரவால்) யாழ் இராணுவத் தளபதி மஹிந்து ஹத்துருசிங்க தள்ளப்பட்டுள்ளார்."

யாழ்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் மற்றும் கொலை கொள்ளைகளுக்கான குற்றவாளிகளை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறு பலதரப்பாலும் நெருக்குவாரங்கள் அதிகரிக்கின்ற நிலையில் டக்ளஸ் தேவானந்தாவை தனது அலுவலகத்திற்கு அழைத்த யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஈபிடிபி அமைப்பினரின் சட்டவிரோத நடவடிக்கைகள் யாவும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என எச்சரித்ததாக யாழ் இராணுவத் தலைமையக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

யாழ்பாணத்தின் சகல பிரதேசங்களுக்கும்,  ஈழ மக்கள் ஜனநயக் கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள் என ஒவ்வொருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வப் பிரதேசங்களில் அவர்கள் "கட்டப்பஞ்சாயத்து தலைவர்களாக"  செயற்பட்டு வருவகின்றனர்.

அதேநேரம் புலிகளியக்கத்திலிருந்து இராணுத் தினரிடம் சரணடைந்து பின்னர் புனவாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சுமார் 300 பேரை டக்ளஸ் தனது இயக்கத்தில் இணைத்துக்கொண்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் பல சதிகள் இடம்பெறலாம் என யாழ் புலனாய்வு வட்டாரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இப்போ மகிந்த சிந்தனை என்பது மிக நேர்த்தியான மதி நுட்பத்துடன் வடகிழக்கில் செயற்படுகின்றது. கிழக்கில் கருணா- பிள்ளையான் போல்,  வடக்கில் டக்கிளஸ்-கே.பி. ஆகியுள்ளது. இவர்கள் இரண்டுபட்டு அடிபட்டால் தம் அரசியல் கொள்வனவில் லாபம் மிக அதிகமென மகிந்த, கோத்தபாயவிற்கு தெரியும். இது இந்த "கொள்வனவுப் பொருட்களுக்கு" விளங்காது. மொத்தத்தில் இவர்கள் எப்போதும் மகிந்தாவின் அஃறிணை கொள்வனவு அரசியலாளர்கள் தான்! உயர்திணையாவத்திற்கான "சான்ஸே"  இல்லை.