Sun01172021

Last updateSun, 19 Apr 2020 8am

தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு, மக்கள் கதறியழுதனர்.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 03.01.2010

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக சரத் பொன்சேகா குழுவினர் யாழ் சென்றனர். அப்போது கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற மாபெரும் மனிதப் படுகொலை யுத்தத்தின் போது, கைதுசெய்யப்பட்ட, காணமல் போன  தம் உறவுகளையும் மீட்டுத்தருமாறு, பிரச்சாரத்திற்குச் சென்ற காணாமற்போனோர் தொடர்பான கண்காணிப்புக் குழுவின் தலைவர் மனோ கணேசனிடம் மக்கள் கதறியழுதபடி வேண்டுகோள் விடுத்தனர்.

நாம் ஆட்சிக்கு வந்தால் இதுவல்ல, அவசரகாலச் சட்டத்தை, பாதுகாப்பு வலயத்தைக் கூட இல்லாதாக்குவோம்.  அதென்ன வடக்கின் வசந்தம்?  நாம் யாழை ஓர் “காவிரிப் பூம்பட்டினம்” ஆக்குவோம். என பேசியுள்ளார்கள்.  மக்களின் மன வலி இவர்களுக்கு தெரியுமா?  அவர்கள் அழுத கண்ணீர் கூரிய வாளிற்கு ஒப்பாகும். உங்களின் இக்கூரியவாள் புது வரலாறு படைக்கும். இவர்களின் வாக்குறுதிகள் வெறும் தேர்தல் பிரச்சாரமே.

எவருக்கும் தலைவணங்காத, சரணாகதி அடையாத தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இத்தருணத்தில் சரியான முடிவை எடுத்து தமிழ்மக்களைப் பாதுகாக்கவேண்டும். — முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்

உங்கள் (தலைவணங்காத) கணிப்பு ஒருபுறமிருக்க, நீஙகள் எல்லோரும் தமிழ்மக்களை தலைவணங்க வைத்துள்ளீர்கள். கூத்தமைப்பினர் உரிய நேரத்தில் சரியான முடிவெடுப்பதாக குறளி வித்தை காட்டுகின்றார்கள். அவர்களின் முடிவு ஊரறிந்ததே.

ஊடகவியலாளர்களைக் கொன்றவர்களை அடையாளப்படுத்த முடியும்  - சரத்பொன்சேகா

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமென்பர். ஜனவரி 25வரை இப்படித்தான் இவரின் கூத்தும்.

இது போக, ஊடகவியலாளர்கள் சம்பந்தமாக எல்லை தாண்டிய ஊடகவியலாளர்கள் அமைப்பின் அறிக்கையின்படி, உலகநாடுகளில்  2009-ல் 76 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். (இதில் இலங்கையில் இருவர்.) 33பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். 573பேர் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1456பேர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். – 2008-ல் துன்புறுத்தப்பட்டவர்கள் 929. தாக்கப்பட்டவாகள் 364பேர். இவர்கள் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். உலகம் முழுவதும் 167 ஊடகவியலாளர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். மத்தியகிழக்கு நாடுகளில் சராசர்pயாக நாளாந்தம் ஏதோ காரணத்திற்காக ஒரு ஊடகவியலாளர் தானும் துன்புறுத்தப்படுகின்றனர். ஈராக்கில் மாத்திரம் 60 ஊடகவியலாளர்கள் உடலளவில் தாக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திரதாகம் கொண்ட மானிடமே இதை இல்லாதாக்க வல்லமை கொள்ளாயோ!

நடக்காத ஒன்றுக்கு எப்படி விளக்கம் கொடுப்பது? – பிரதமர்

ஜனாதிபதித் தேர்தலில் அரசிற்கும், மகிந்தாவிற்கும் பெரும் தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் விடயம் சண்டேலீடா பத்திரிகையில் சரத்பொன்சேகா கூறிய கருத்தாக வெளிâடப்பட்ட செய்தியே! கடந்தவாரம் மேமாதம் இலங்கை ராணுவம் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அச்சமயம் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவு கண்மூடித்தனமான சுட்டுக்கொன்றது. இதையே சரத் பொன்சேகா கூறிய கருத்தாக சண்டே லீடர் பத்திரீகை வெளியிட்டது.

இதற்கு விளக்கம்கோரி நீதி விசாரணைக்கு புறம்பான-மரணதண்டனை விவகாரத்தை கையாளும் ஜ.நாவின் விசேட அறிக்கையாளரான பிலிப் அல்ஸரன் இலங்கை அரசிடம் விளக்கம் கோர்pயுள்ளார். இதற்கே இலங்கையின் பிரதமர் “நடக்காத ஒன்றுக்கு” எப்படி விளக்கம் கொடுப்பது என்கின்றார்.

இவ்விடயத்தில் பிரதமர் சம்பவத்தின் உண்மைத்ததன்மையை தட்டிக் கழித்து வீராப்புப் பேசுகின்றார்.

மறுபுறத்தில் இன்னோர் மந்திரீதியான பீரிஸ் பொன்சேகாவின் கூற்றால், இராணுவ அதிகாரிகள், குறிப்பாக 58-வது படைப்பிரிவினர், வெளிநாடுகளுக்கு (மேற்குலகம் சிங்கப்பூர்) சென்றால் கைது செய்யப்படுவார்கள் என பயப்பீதி கொள்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லையென ஜ.நா சபையில் பேசியவர்களுக்கு, இதுவும் நடக்காத ஒன்றுதான்.

வடக்கின் வசந்தம் பெரும் கேலிக்கூத்தாககியுள்ளது. மக்கள் பயப்பீதியுடன் நடமாடும் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றை இழந்துள்ளனர். அங்கேயுள்ள ஆயுதக்குழுவின் செயற்பாடுகள் அமைதியான வாழ்வை சீர்கெட வைக்கின்றது. அத்தகைய ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்படவேண்டும். ஜனாதிபதித் தேர்தலிற்கு ஆனந்தசங்கரி அவர்கள்  வைத்த 15அம்சக் கோரீக்கைகளில் இதுவும் ஒன்று.

ஆனந்தசங்கரி அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் வரை கொஞ்சம் பொறுக்கக்கூடாதா? டக்கிளஸிற்கு மகிந்தா தான் கேட்பதெல்லாம் தருவதாகவும், தராவிட்டால் அதற்கு தானே பொறுப்பு என்றும் வடக்கின் வசந்தத்தையும் தமிழ்மக்களையும் பொறுப்பெடுத்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் விடுதலை என்பது, வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்சி-தரகர் என்ற “றேஞ்சிற்கு” டக்கிளஸ் அரசியலை கொண்டுவந்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க எனக்கு அதிகாரம் இல்லை. அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்றத்தில தேவை. இதனைச் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் தனக்கு எந்த ஒத்தாசையும் வழங்கவில்லை.  – தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி

கூட்டங்களில் பொய் சொன்னாலும் பொருந்த சொல்;லக்கூடாதோ? தளபதி தடுமாற வைக்கின்றாரோ?

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்றவர்களின் நிலை ஓருவாறு முடிவிற்கு வந்துள்ளது. ஓருவரின் மரணத்துடன் கடந்தவாரம் எஞ்சியவர்களின் எண்ணிக்கை 47ஆகும். இதில் 31பேருக்கு ரூமேனியாவும், மிகுதி 16 பேருக்கும் ஆஸ்திரேலியாவும் அரசியல் தஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளன  - பிந்திய செய்தி

தஞ்சம் கோர வந்தவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தோனேசியாவின் பராக் துறைமுகத்தில் கிறிமினல் குற்றவாளிகள் போல் தடுத்துவைக்கப்பட்டனர், துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஒருவர் அநியாயமாக சாகடிக்கப்பட்டுள்ளார். தமிழ்மக்கள் புலத்திலும் – புலம்பெயர்விலும்  அநாதைகளே. தமிழ் மக்களை அடிமைகள் – அநாதைகளாக்க தமிழ்த்தேசியவாதிகள் முதல் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர்வரை “பணத்திற்கான ஏஜன்டடுகள்” ஆகியுள்ளனர்.

கூட்டமைப்பு எம்.பிக்கள் அமைச்சர்களாக மாறவேண்டும். – ஜனாதிபதி

நீங்கள் “ரூ லேற்”. இதை பொன்சேகா முன்பே சொல்லிவிட்டார். அவர்களுக்கும் அவர்pடம் மந்திரிகளாகவே விருப்பம்;.

இலங்கை மக்களுக்கு மாறுபட்ட அரசாட்சியே வழங்குவேன்.  –சரத்பொன்சேகா

சந்N;தகமே இல்லை நீங்கள் வந்தால் (சர்வாதிகார) அந்த மாறுபட்ட ஆட்சிதான்!

ஈழத்தமிழர்களுக்கு சகல உரிமைகளும் பெற்றுத்தரும்வரை காங்கிரஸ் ஓயாது  -சிதம்பரம்

தமிழ்மக்களை படுகொலை செய்யும்வரை “ஓயாத” அந்தத் தாகம், தமிழ்மக்கள் உரிமைகளை இல்லாதாக்கும் வரை ஓயாது. இதை சொல்லாமல் சொல்கின்றீர்கள்.

தேர்தலில் வெற்றி பெற்றபின் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக குரல்கொடுப்பேன். –டக்கிளஸ்

தோற்றால்? கவலைப்படாதீர்கள். சந்திரிகா-மகிந்தாபோல் சரத்திடமும் சரணடைந்து குரல் கொடுக்கலாம்தானே!