Wed01202021

Last updateSun, 19 Apr 2020 8am

நாளை மறுநாள்…..

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 24/01/2010

நாளை மறுநாள் இலங்கை மக்கள் ஓர் ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வாக்களிப்பொன்றை நடாத்தவுள்ளார்கள். இருபதுபேர் வரையில் போட்டியிடுகின்றனர். இவர்களில் சரத் – மகிந்தா இருவருமே முன்னணியில் உள்ளார்கள்.

இலங்கையில் ஜனநா(ண)யமான ஜனாதிபதித் தேர்தல் ஒன்றிற்கு மக்கள் வாக்களித்ததாக வரலாறு இல்லை. லஞ்சம்  ஊழல் மோசடி தில்லுமுல்லுகளுக்கூடாகவே, ஜே. ஆர். முதல் மகிந்தாவரை வந்துள்ளார்கள். இம்முறைத் தேர்தல்கூட இதற்கு விதிவிலக்கல்ல. நீதியான, சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான சூழல் அற்றுப்போயுள்ளது. தான் பதவியில் நீடிப்பதில் பயனில்லை என்கின்றார் தேர்தல் ஆணையாளர். அத்துடன் கடந்த காலங்களைப் போலல்லாது, இத்தேர்தல் தேசிய சர்வதேச ரீதியில் பெரும் பொருளாக்கப்பட்டு, இரு முகாம்களாகியுள்ளது. இருமுகாமிலும் நிற்பவர்கள் கூட மக்கள் விரோத ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கிலான ஓர் நாணயத்தின் இருபக்கங்களே.

இருவரும்;  “நிறைவேற்று  அதிகாரம்”  கொண்டதைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களால் இயன்ற சகலதையும் செய்கின்றார்கள். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதிமுறை, “ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றமுடியாததே தவிர” மற்றப்படி சகல காரியங்களையும் செய்யுமென்று ஓர் தமிழ்த்தலைவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார். இப்பேர்ப்பட்ட தேர்தல்;  மக்களுக்கு ஓர் போதைப்பொருள் ஆக்கப்பட்டுள்ளது. இதில் மக்களும் மயக்கப்பட்டுள்ளார்கள் என்றால், அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.

இலங்கையில் தேர்தல்கள் வரும்போது, மாறி மாறியும், அல்லது அன்றைய சூழலுக்கேற்பவும், மக்கள் வாக்களிக்கின்றார்கள். இதன் ஊடே மக்கள் விரோத அரசுகளே, தொடர்ந்து  வருகின்றன. மக்களின் இந்நடைமுறை தவறானதல்ல. இதற்கு மாற்று என்ற ஒன்று இல்லாதவிடத்து, மக்கள்நிலை இதுவாகவே இருக்கும்.

இலங்கையில் மக்கள் நலன்சார் அமைப்புகள் – இயக்கங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இவற்றுக்குள் அரசியல் – தத்துவார்த்த தவறுகள் -  இயலாமைகள் – போதாமைகள் உள்ளன. இவைகள் இப்படித்தான் இருந்தன – இருக்கின்றன – இருக்கவேண்டும் – செல்லவேண்டும, என்ற பார்வைகளை விமர்சனங்களை மக்கள் நலன் சார்ந்த சமூக விஞ்ஞானக் கண்ணோட்டததுடன் ஆய்வு செய்யவேண்டும். இவ் ஆய்வுகள் விமர்சனங்கள்  மக்களை சென்றடையவேணடும்.  அவர்களை சிந்தனை மயப்படுத்த வேண்டு;ம். இதுவே மாற்றுக்கான – மாற்று அரசியலுக்கான முதற்படி. இதை தளம்பல்கள் தடுமாற்றங்கள் இன்றிச் செய்தால், மக்களை மாற்றுக்கான பாதையில் அணிதிரள வைக்கமுடியும்.

சிறுபொறி பெரும் காட்டுத்தீயை மூட்டும்

ஆய்வாளர் சிவலிங்கம் என்ன சொல்கின்றார்?.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சாவில்; இருந்து, சில அரசியல் கட்சிகள் முதல் ஆய்வாளர்கள், இணையதளங்கள் வரை குழம்பியே உள்ளார்கள்.  மகிந்தாவை,  பொன்சேகாவை வெற்றிபெற வைக்க  அவரவர் கட்சிகள் – கூட்டணிகள் தேர்தல் பிரச்சாரங்கள் ஓருபுறமும், பட்டிமன்றங்கள் மறுபுறமும், நடத்துகின்றனர்.

இதில் ஆய்வாளர் சிவலிங்கம் ஓர் பெரிய “ஆய்வுக்கட்டுரையை” எழுதி பொன்சேகாவை பிரதான எதிரியாக்கி, அவன் ராணுவக்காரன், மகிந்தா அரசியல்வாதி, எனவே மகிந்தாவை ஆதரியுங்கள் என்று விதந்துரைக்கின்றார். அது மாத்திரமல்ல, அரசு – அரச இயந்திரம் சம்பந்தமாக கணிப்பீட்டில் குழம்பிப்போயுள்ளார். அவரின் கட்டுரையின் சில பகுதிகள்

;…..இவ்வாறான பரந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு முதலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களின் பின்புலம்பற்றி ஆராய்வோம்.    

“இவர் இராணுத்தில் 40 வருடங்கள் சேவை புரிந்தவர். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இவரது பணியாகும். நாட்டின் பாதுகாப்பு என்பது தேசத்தின் ஜனநாயக கட்டுமானங்கள் மற்றும் அரசியலமைப்பு வழங்கும் விதிகளுக்கு அமைவாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதாகும். அந்த வகையில், இவர் இராணுவத்தின் பிரதான தளபதியாக செயற்பட்டாரா என்பதே எமது கேள்வியாகும். நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான முழுமையான தகவல்களை அரசின் தலைமைக்கு வழங்குவதும் அந்த அரசியல் தலைமையின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைய பாதுகாப்புத் திட்டங்களை வரைந்து செயற்படுத்துவதும் இராணுவத் தலைமையின் கடமையாகின்றது. புலிகளுக்கு எதிரான போர்த்திட்டங்கள் வரையப்பட்டபோது நாட்டின் ஜனநாயக வாழ்வுக்கு முதலிடம் வழங்கப்பட்டதா? நாட்டு மக்களின் ஒரு பிரிவினராகிய தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட கவனம் என்ன? புலிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்தும் திட்டங்கள் காணப்பட்டதா? இவ்வாறான கேள்விகளுக்கான குறைந்த பட்ச பதில்கள் எதையாவது எம்மால் காண முடிகின்றதா?”

« இப்போரின்போது சிங்களத் தேசியவாதம் ஆற்றிய பங்கு என்ன? மகிந்த ராஜபகச் அவர்கள் அரசியல்வாதி என்ற வகையில் சிங்களத் தேசியவாதத்தை தனது அரசியல் தேவைக்கு பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் நாட்டின் இராணுவம் சிங்கள தேசியவாதத்தின் சக்தியாக செயற்பட்டதா அல்லவா என்பதே எம்முன் உள்ள கேள்வியாகும். அரசு (ளவயவந) என்பதும் அரசாங்கம (பழஎநசnஅநவெ) என்பதும் வௌ;வேறானவை. அரசு என்பது நிலையானது. அரசாங்கம் என்பது தற்காலிகமானது. இராணுவம் என்பது அரசின் பகுதியே தவிர, அரசாங்கத்தின் பகுதி அல்ல. இலங்கை அரசியல் வரலாற்றில் அமைந்த அரசாங்கங்கள் யாவும் இராணுவத்தினை தமது கருவியாகப் பயன்படுத்தின. ஆனால் மகிந்த தலைமையிலான அரசாங்கம் அரசுக் கட்டுமானத்தை முழுமையாகவே இராணுவமயமாக்கியது. அரசாங்கத்தின் முழு அனுசரணையும் அரசின் ஒரு பகுதியாகிய இராணுவத்துக்குக் கிடைத்தன. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆயுதப்படையின் தளபதியாகவும் அமைந்ததால் இராணுவம் சட்டத்திற்குப் பயப்படாது செயற்பட்டது ……».

«மகிந்த ராஜபக்ச அவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதவராக இருக்கலாம். ஆனால் அவரை இனவிரோதியாக அடையாளப்படுத்த முடியுமா? அவர் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். ஆனால் அவரால் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியவில்லை. அவரால் ஏன் அவ்வாறு செல்ல முடியவில்லை? படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் எஸ் டபிள்ய ஆர் டி பண்டாரநாயக்கா அவர்கள் எந்தச் சக்திகளின் மூலம் நாட்டின் தலைவராக ஆக்கப்பட்டாரோ, அதே சக்திகளே மகிந்த ராஜபக்ச அவர்களையும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த மகாசங்கத்தின் சம்மதத்தைப் பெறாமலேயே தந்தை செல்வநாயகம் அவர்களுடன் பண்டாரநாயக்கா ஒப்பந்தத்திற்குச் சென்றார். இதன் விளைவாகவே அதே சக்திகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ………»

அரசியல்வாதிகள்தான் தேர்தலில் போட்டியிடலாம், அரசை – அரசாங்கத்தை அமைத்து, ஜனாதிபதி பிரதமராக வரலாம் என்றால், இவர்களுக்கு என்று ஓர் அரசியல் தனிப்படிப்பும், பல்கலைக்கழகங்களும் உள்ளனவோ? இன்றைய உலகில்; பலநாடுகளின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் கட்சித் – தலைவர்களுக்கெல்லாம் இந்த வரைவிலக்கணங்கள் அளவுகோல்கள் கொண்டு பார்த்தால் பொருந்துமோ? ஏன் மகிந்தாவிற்கு பொருந்துமோ? சமகால உலகில் மக்கள்விரோதிகள் – ஜனநாயகவிரோதிகள் – சர்வாதிகாரிகள் – இராணுவத் தளபதிகள் பலர் பாராளுமன்ற அரசியலை அலங்கக்கின்றார்கள்.

ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் ஆய்வு 6-ம் 7-ம் வகுப்புகளில், குடியியல் பாடத்தின் பர்Pட்சைக்கு கொடுக்கப்பட்ட கேள்விகளை ஞாபகப்படுத்துகின்றன.

மகாதேசாதிபதி பிரதமரின் கடமைகள் அதிகாரங்கள் எவை? எதிர்க்கட்சித் தலைவரின் வேலை என்ன? ராணுவத்தளபதியின் கடமைகள் என்ன? இப்பாங்கிலேயே பொன்சேகாவிடமும் கேள்விகள் கேட்கின்றார்.

மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்றால், இராணுவ ஆட்சியைக் கொண்டுவருவார் என்ற நிலையில் இலங்கை அரசியல் உள்ளது. ஆசிய நாடுகள் சிலதைப்போல், இராணுவஆட்சி வந்தால், “அரசியல்வாதி மகிந்தா” இராணுவத் தலைவராக ஆட்சி செய்ய மாட்டாரோ?

மகிந்தாவை இனவிரோதியாக அடையாளப்படுத்த முடியுமா? எனக் கேட்கின்றார் சிவலிங்கம். இதை டக்கிளசு – கருணா – பிள்ளையான் போன்ற மகிந்த ரசிகர்களின் “றேஞ்சில்” நின்று கேட்கின்றார் இந்த ஆய்வாளர்.

ஐக்கியநாடுகள் சபையில் தமிழ்மக்களுக்கு இனப்பிரச்சினை என்ற ஓன்றே இல்லையென்றவரை, தமிழ்மக்கள் வந்தேறு குடிகளென பொன்சேகா சொல்ல, அதை ஆமோதித்து வழிமொழிந்தவரை, தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை சட்டம் கொண்டு துண்டாடியவரை, சென்ற ஆண்டின் கறைபடிந்த மனிதப் படுகொலைகளைச் செய்த -இனவிரோதி மகிந்தா, இனப்பிரச்சினையை தீர்க்க முடியாதவராக இருந்தாராம். தீர்க்க முன்வந்திருந்தால், காலம்சென்ற பண்டாரநாயக்காவிற்கு ஏற்பட்ட கதியே இவருக்கும் என்கின்றார். இந்த மகிந்த ரசிகன் ஆய்வாளர் சிவலிங்கம்.

புலம்பெயர்வில் மகிந்த ஆதரவாளர்கள், ரசிகர்கள், பக்தர்கள் பலவிதம்!  இதில் சிவலிங்கம் ஓருவிதம்!! 
கடந்த 20-ஆண்டுகளில் இடம்பெறாத தேர்தல் வன்முறைகள் இத்தேர்தலில் நடந்தேறியுள்ளது. – தேர்தல் ஆணையம்

வன்முறையாளர்கள்தானே தேர்தலை நடாத்துகின்றார்கள். 

தமிழ்மக்கள் ஜனாதிபதித்தேர்தலை கறுப்புக்கொடி ஏற்றி துக்கநாளாக்கவேண்டும். – புலிகளின் ஊடகத்துறை

தலைவருக்கே ஓர் ஒழுங்கான துக்கதினம் இல்லை. தேர்தலுக்கோ துக்கதினம்!

நாங்களும் கூட்டமைப்பின் பெரய தலைவர்களும் 4-5 மணித்தியாலங்கள் பேசினோம் சரத்பொன்சேகா என்றால் கூட்டமைப்பினர் மத்தியில் இராணுவ நடவடிக்கைகளை கொடூரமாகச் செய்தவர் என்ற வித்தியாசமான கருத்து இருந்தது. இவரை எப்படி சந்தைப்படுத்துவது என அச்சத்துடன் கேட்டார்கள் அதற்கு நான் சொன்ன விடயம் தற்போது இராணுவச் சீருடைகளை களைந்திருக்கின்றார். அவர் தனிநபர், எந்தக் கட்சிக்கும் சொந்தமானவரும் அல்ல, எந்தக்கட்சியையும் வைத்திருப்பவரும்  அல்ல. இதனால் அவரை நம்பலாம். ஆதரிக்கலாம் என்றேன். – முஸ்èம் காங்கிரஸ் தலைவர்

கக்கீமும் அம்புலிமாமா காட்டி “அரசியல் அமுது ஊட்டிவிட இவர்களும் செம்பவள வாய் திறந்து நம்புங்கள் சரத்தும் நல்லவன் என்கின்றார்கள்.

சர்வதேசத்திற்கு பயந்து பிரபாகரனை உயிரோடு பிடித்து அவருடன் பேசியிருந்தால், கருணா பிள்ளையான்போல் முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கும். – பொன்சேகா

அவர் இப்பவும் உயிரோடுதான் உள்ளார். நீங்கள் சாகடித்தது, அவரைப் போன்ற உருவமுள்ள ஓர் சிங்களச் சிப்பாயை. “புலன்பெயர்” சில ஊடகங்களிடம் கேட்டால் அவர்கள் பிடித்துத் தருவார்கள். “உங்கள் ஆட்சியில்” முதலமைச்சர் பதவியும் கொடுக்கலாம். ஆனால் டக்கிளசு கருணாவை மந்திரிகள் ஆக்கினால் அவர் வரமாட்டார்.

தமிழ்மக்கள் கூட்டமைப்பு மீது சிறியஅளவாவது நம்பிக்கை வைத்துள்ளனர்.  – சம்பந்தன்

தேர்தல் முடிய இதுவும் இல்லாமல் போய்விடும்.

ஈ.பி.டி.பி. முன்வைத்துள்ள 10-அம்சக்கோரிக்கை நாட்டைத் துண்டாடும் எந்த யோசனையையும் முன்வைக்கவில்லை. – ஈ.பி.டி.பி.யின் தேர்தல் பிரகடனம்

நாட்டைத் துண்டாடவில்லைத்தான். வடக்கின் வசந்தமும், கிழக்கின் விடிவெள்ளியும் வட-கிழக்கை துண்டாடிவிட்டது.

2005-ல் நாம் தேர்தலில் தோல்வியுறுவதற்கு புலிகளே காரணம்  — ரணில் விக்கிரமசிங்க

இத்தேர்தலில் கூட்டமைப்பு அதை நிவர்த்தி செய்துள்ளதல்லவா!

இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கமுடியாது – கலாநிதி பாலித கொகான

இத்துணிவில்தான் மே 18-வரை சகலதையும் செய்தீர்களோ?