Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சர்வதேசப் பெண்கள் தினம் (பகுதி-2)

பத்திரிகையினதும்-குடும்பத்தினதும் நண்பர் ஒருவருக்கு ஜென்னி மார்க்ஸ் எழுதிய ஓர் கடிதம்  (பகுதி-2)

 

எம் வாழ்க்கையின் ஒருநாளை இருந்தது இருந்தபடி சித்தரித்துக் காட்டுகின்றேன்:

இதைப் பார்த்தால் இத்தகைய இன்னல்களை நாடு கடத்தப்பட்ட சிலரே அனுபவித்திருப்பர் என்பதைக் காணலாம். செவிலித்தாய் அமர்த்துவது என்றால் மிகவும் செலவாகுமாதலால், எனது மார்பிலும் முதுகிலும் தொடர்ந்து பயங்கரமான வேதiனை இருந்தபோதிலும், குழந்தைகளுக்கு நானே பால் ஊட்டுவது என முடிவு செய்தேன். ஆனால் இந்தப் பச்சைக்குழந்தை பாலுடன் சேர்ந்து அளவற்ற கவலையினை – அடக்கி மூடப்பட்ட வருத்தங்களையும் சேர்த்துப் பருகியதால், இரவும் பகலும் பர்pதாபகரமாக கஸ்டப்பட்டபடி இருந்தது. இந்த உலகிற்கு வந்தநாள் முதல் அவன் ஒரு இரவிலாவது, இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் நிம்மதியாக தூங்கியதில்லை. அண்மையில் அவனுக்கு கடுமையான வலிப்புக்கள் வரத்தொடங்கின. வாழ்விற்கும் சாவிற்கும் இடையே அவன் எப்போதும் போராடிக்கொண்டு இருந்தான். அவனுக்கிருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியதன் ;விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி தோல் வெடித்து, நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது. இவ்வாறு ஒருநாள் அவனுடன் நான் அமர்ந்திருந்தபோது எங்கள் வீட்டு நிர்வாகத்தை பார்ப்பவள் உள்ளே வந்தாள்.

குளிர்காலத்தில் அவளிடத்தில் நாங்கள் 250- டாலர்கள் செலுத்தியிருந்தோம் எதிர்காலத்தில் வாடகைப் பணத்தை அவளிடம் கொடுக்காது அவள் மீது கடனுக்கு ஜப்தி வாரன்ட் வைத்திருந்த வீட்டுச் சொந்தக்காரர்pடம் கொடுப்பதாக உடன்பாடு யெ;திருந்தோம். அவள் இந்த உடன்பாட்டை மறுத்து தனக்கு சேரவேண்டிய 5-பவுன்களை கொடுக்குமாறு கேட்டாள். இச்சமயம் எங்களிடம் பணம் இருக்கவில்லை. (அதுவரையில் நௌட்டின் கடிதம் வந்து சேரவில்லை) உடனே இரு ஜப்தி அதிகாரிகள் வந்து எனது உடமைகள் எல்லாவற்iயும் – கம்பளித்துணிகள் – படுக்கைகள் , துணிகள் அனைத்தையும் – எனது அப்பாவிக் குழந்தையின் தொட்டிலையும், எனது புதல்வியர்pன் சிறந்த விளையாட்டுச் சாமான்களையும் கூடப் பறிமுதல் செய்து ஜப்தி செய்தனர். என் புதல்வியர்கள் நின்றபடி கரைந்தழுதனர். இரண்டே மணிநேரத்தில் அனைத்தையும் எடுத்துச்செல்வதாக அச்சுறுத்தினார்கள். அப்படி நேரிட்டால் நான் குளிரில் உறைந்துபோகும் என்; குழந்தைகளுடன், நோயுற்ற மார்புடன் வெறுந்தரையில் படுக்கவேண்டியிருக்கும். எங்கள் நண்பர் ஸ்ராம் உதவி தேடி  நகரத்திற்கு விரைந்தார். அவர் ஓர் குதிரைவண்டிக்குள் ஏறினார். ஆனால் குதிரைகள் மிரண்டு ஓட்டம் பிடித்தன. அவர் குத்தித்துத் தப்பினார். ஆனால் காயமுற்று ரத்தம் பீறிட்டது. நடுங்கிக்கொண்டிருக்கும் என் குழந்தைகளுடன் நான் அழுதுகொண்டிருக்கும்போது அவரைக் கொண்டு வந்தார்கள்.

அடுத்தநாளே நாங்கள் வீட்டடைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. அந்தநாள் குளிரும் மழையும் மூட்டமுமாக இருந்தது. என்கணவர் நாங்கள் தங்க இடம் தேடியலைந்தார். எங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொன்னதால் யாருமே எங்களை குடி வைத்துக்கொள்ள விரும்பவில்லை. கடைசியாக ஓர் நண்பர் உதவி செய்தார். வீட்டுக்கு வாடகை கொடுக்காததால் எங்கள் உடமைகள் பறிமுதலாகியது என்ற புரளி கேட்டு, மருந்துக்கடை, ரொட்டிக்கடை, கசாப்புக் கடைக்காரர்கள், பால்க்காரன் எல்லோரும் பாக்கிக் கணக்குகளை எடுத்துக்கொண்டு உடனே எங்களை முற்றுகையிட்டு விட்டார்கள். எங்கள் படுக்கைகளை எல்லாம் விற்று இவர்களின் கணக்குகளைத் தீர்த்தோம். நாங்கள் விற்ற படுக்கைகள் எல்லாம் வெளியே கொண்டுவரப்பட்டு ஒரு வண்டியில் ஏற்றப்பட்டன. இப்போது என்னதான் நடந்தது? சூரியன் மறைந்து சற்று நேரமாகி விட்டது. இந்தநேரத்தில் உடமைகளை அப்புறப்படுத்துவது இங்கிலாந்தின் சட்டத்திற்குப் புறம்பானதாகும். நாங்கள் நாட்டை விட்டே ஓடிப்போகிறோம் என்றும், தம்முடைய சாமான்கள் ஏதாவது எங்கள் பொருள்களுடன் சிக்கியிருக்கலாம் என்றும், சொல்லிக்கொண்டு, வீட்டுக்காரர் இரண்டு போலீஸ்காரர்களுடன் எங்களிடம் ஓடிவந்தார். ஜந்து நிமிடங்களுக்குள் எங்கள் வீட்டைச்சுற்றி, இருநூறு முந்நூறு பேர் – செல்ஸியாவிலுள்ள மனிதக்கும்பல் முழுவதுமே – திரண்டு எங்கள் வாயிற் கதவருகில் சுற்றத் தொடங்கிவிட்டார்கள். படுக்கைகள் மீண்;டும் கொண்டுவரப்பட்டன.  மறுநாள் சூரியன் உதிக்கும்வரையில், வாங்கியவர் இவற்றை எடுத்துச்செல்ல முடியாது. எங்கள் உடமைகளை எல்லாம் விற்பனை செய்துவிட்ட பிறகு ஒரு காசுகூட பாக்கி வைக்காமல், எல்லாக்கடன்களையும் செலுத்திவிட்டு இருந்தோம். நாங்கள் தற்போது வசித்துவரும் முதலாம் எண் லீசெஸ்டர் தெருவில், லீசெஸ்டர் சதுக்கத்தில்  உள்ள ஜெர்பன் ஓட்டலில் இரு சிறு அறைகளுக்குள் எனது செல்வங்களுடன் போனேன். அங்கு வாரத்திற்கு ஜந்து பவுன் வாடகைக்கு எங்களுக்கு குடியிருக்க சுமாரான இடம் கிடைத்தது.

எங்கள் வாழ்க்கையின் ஒரே ஒரு நாள் நிகழ்ச்சியினை வர்ணிக்க இவ்வளவு நீளமாக இத்தனை சொற்கள் போட்டு எழுதுவது குறித்து, அருமை நண்பரே தயவுசெய்து மன்னிப்பீராக. இது நாணமற்றதுதான் என நான் அறிவேன். ஆனால் இன்று மாலை என் இதயம் வெடித்துக் ;கொண்டிருக்கின்றது. என் இதயத்திலுள்ள துயர பாரத்தை எனது மிகப் பழைய உண்மையான சிறந்த நண்பரிடம் ஓரு தடவையாவது கொட்டிவிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தச் சில்லறைக் கவலைகள் என்னைப் பணிய வைத்துவிட்டன என நினைத்து விடாதீர்கள.;  நமது போராட்டங்கள் தனிமைப்பட்ட ஒன்றல்ல என்பதை நான் நன்றாக அறிவேன். குறிப்பாக என்னைப் பொறுத்தவரை, நான் மகிழ்ச்சியுள்ள, சலுகைகள் பெற்ற அதிஸ்டக்காரி என்றே என்னை கருதுகிறேன். காரணம் எனது வாழ்க்கையின் ஆதரவான என் அருமைக்கணவர் இன்றும் என் அருகில் இருக்கின்றார். அவருக்கு தேவையான உதவியின்  அளவு சிறிதாக இருந்தபொழுதிலும், இந்தச் சில்லறை விடயங்களுக்காக அவர் இவ்வளவுதூரம் வருந்தவேண்டியிருக்கின்றதே. எத்தனையோ பலருக்கு விருப்பத்துடன் உதவி புரிந்த அவர் இவ்வாறு உதவியற்ற நிலையில் இருக்கின்றாரே என்பதுதான் எனது உள்ளத்தை சித்திரவதை செய்கின்றது. இதயத்தில் இரத்தம் பீறிடச் செய்கிறது.

அன்புள்ள திரு.வெய்டெமையர் அவர்களே! நாங்கள் மற்றவர்களிடத்தில் கோர்pக்கை கேட்கின்றோம் என நினைத்து விடாதீர்கள். தமது கருத்துக்களையும் உற்சாகத்தையும் ஆதரவையும் என்கணவன் யாருக்கு கொடுத்தாரோ அவர்களிடம் அவர் எதிர்பார்ப்பது வேலைகளில் மேலும் சுறுசுறுப்பு. தமது “றிவியூ”க்கு மேலும் ஆதரவு இவை மட்டுமேயாகும். இதைப் பெருமையுடனும், துணிவுடனும் உறுதியிட்டுக் கூறுகின்றேன், இந்தச்சிறு கோரிக்கை அவருக்கு கடப்பாடாகும். அவ்வாறு செய்வது யாருக்கும் எவ்விதத்திலும் நியாயம் வழங்க மறுப்பது ஆகாது என நினைக்கின்றேன். இதுதான் எனக்கு வருத்தத்தை தருகின்றது. ஆனால் என் கணவன் வேறு கருத்துடையவராக இருக்கின்றார். மிகவும் பயங்கரமான கட்டங்களிலும் கூட அவர் எதிர்காலத்தைப் பற்றி என்றுமே நம்பிக்கை இழந்தது கிடையாது. தாம் மகிழ்ச்சியுடன் இருப்பதையும், தமது அன்புத்தாயிடம் எங்கள் பிரியம்மிக்க குழந்தைகள் நெருங்கி கட்டியணைத்து நிற்பதையும் கண்டாலே அவர் மனநிறைவு பெற்றுவிடுவார்.

அன்புமிக்க வெய்டெமையர் அவர்களே! எங்கள் நிலைமைபற்றி உங்களுக்கு இத்தனை விபரமாக கடிதம் எழுதியுள்ளேன். என்பது அவருக்கு தெரியாது. இதனால்தான் இந்த வாசகங்களை குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். அவரது பேரில் எங்கள் பணத்தில் எவ்வளவு வசூலிக்க முடியுமோ, அதை வசூலித்து துரிதமாக அனுப்பிவைக்கும்படி உங்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் என்பதை மட்டுமே அவர் அறிவார்.

அன்புள்ள நண்பரே! விடைபெறுகிறேன். உங்கள் மனைவிக்கு எனது பாசமிக்க வாழ்த்துக்களைச் சொல்லுங்கள.; தனது செல்வத்துக்காக கண்ணீர் வடித்துள்ள ஓர் அன்னையின் சார்பில் தங்கள் சின்னஞசிறு தேவதைக்கு முத்தங்கள். எங்கள் மூத்த குழந்தைகள் மூவரும் அற்புதமாகவே உள்ளனர். .எங்கள் கொழுகொழு சிறுவன் மிகவும் சுமூகத்துடன் வேடிக்கையான சிந்தனைகளுடன் இருக்கின்றான். அந்தச் சிறு  துஸ்டப்பையன் நாள் முழுவதும் அதிசயமான உணர்வுடன் இடிக்குரலில் பாடுகிறான். பிரெய்லிக்ராத்தின் ஆயசளநடைடயளைந என்ற கீதத்தின் பின்வரும் சொற்களை தனது அஞ்சும் குரலில் அவன் பாடும்போது வீடே கிடுகிடுக்கிறது.

“யூன் திங்களே வருக, உன்னதச் சாகம் தருக! புகழும் வீரச் செயல்களுக்காகப் பொங்குது எம் இதயம் ஆர்வத்தால்”.

இதற்கு முந்திய இதே இரு மாதங்களைப் போலவே இந்தமாதமும், நாம் எல்லோரும் மீண்டும் கரம் கோர்த்து நின்று போராடும் பிரமாண்டமான போராட்டத்தைத் துவக்கும் என்பது வரலாற்றின் விதி போலும். விடை தருக!