Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பார்வதி அம்மாளும் பயங்கரவாதியோ?

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 02-05-2010

பார்வதி அம்மாளும் பயங்கரவாதியோ?

சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

மனுவில்  “மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை,  இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மாராவ்,  கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஜெயசிங் ஆஜராகி வாதாடுகையில்,  “இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள்.  பார்வதியம்மாளை  திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும்,  அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது” என்று கூறினார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர். பின்னர் நடந்த வாதத்தில் மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி நாளை (இன்று) பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு வக்கீலின் பதில்

பார்வதியம்மாளை திருப்பி அனுப்பப்பட்ட விவாகரம் தொடர்பாக முத்த வழக்கறிஞர் கருப்பன் சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு பதிலளித்துள்ள மத்திய இந்திய அரசின் குடியேற்றத்துறை.  ‘’ இந்த மனுவைத் தாக்கல் செய்தவர் பார்வதியம்மாளின் உறவினரோ, நெருங்கிய சகாவோ கிடையாது. தவிறவும் மனுதாரருக்கும் பார்வதியம்மாளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது பார்வதியம்மாள் இந்தியப் பிரஜையும் கிடையாது. எந்த ஒரு வெளிநாட்டினரையும் திருப்பி அனுப்பவோ விசா மறுக்கவோ இந்திய குடியுரிமைத் துறைக்கு அதிகாரம் உண்டு.  தவிறவும் கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழகஅரசு கேட்டுக் கொண்டதன் பேரிலே பார்வதியம்மாளுக்கு எதிரான எச்சரிக்கை சுற்றறிக்கையை அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியது. அதன்படி பார்த்தால் கோலாலம்பூரில் உள்ள தூதகரம் பார்வதியம்மாளுக்கு விசா வழங்கியிருக்கக் கூடாது. வெளிநாட்டவராக இருப்பதால் அவருக்கு இந்தியாவில் அடிப்படை உரிமை எதுவும் இல்லை. எனவே,  அவரை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் குடியேற்ற அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை குறைகூற முடியாது என்று கூறப்பட்டுள்ளது. குடியேற்ற அதிகாரிகளின் விளக்கத்தை அடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள்  ‘’ கடந்த 7 ஆண்டுகளில் சூழ்நிலைகள் மாறியிருக்கின்றன. இதுகுறித்து தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும் என்றும், விசாரணை இன்று தொடர்ந்து நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர்.

ஏதோ பார்வதி அம்மாளும் சென்னைக்கு குண்டு வைக்க, விமானத்தில் குண்டுடன் வந்த பாங்கில் குடியேற்ற அதிகாரிகள் அந்த வயோதிபத் தாயை திருப்பி அனுப்பியுள்ளார்கள். வழக்கறிஞர் கருப்பனுக்கு வந்த மனிதாபிமானம் கலைஞருக்கு இன்னும் வரவில்லையே. தொப்புள்கொடி உறவு என்பார், இலங்கைத் தமிழ் மக்களுக்கு இன்னல் என்றால் வேடிக்கை பார்க்கமாட்டேன் என்பார்,  தன் வாய்ச் சவடால்களை  போராட்டம் என்பார். என் முதுமைக்காலத்திலும்  (2-மணி நேர “மினி உண்ணாவிரதம்” இருந்தவராச்சே) போராடுகினறேன் பார் என்பார்,  இந்த வேடிக்கை மனிதன். 2003-ல் தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் (புலிகளுக்கு தடை) பேரிலேயே அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்கின்றனர் குடியேற்ற அதிகாரிகள். கடந்த ஏழு ஆண்டுகளில் சூழ்நிலைகள் மாறியிருக்கின்றன. இது குறித்து  தமிழக அரசின் நிலையென்ன?  எனக் கேட்கின்றனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள். இதற்கு பதில் கொடுப்பது பெரும் வேலையோ?  நளினிக்கு கொடுத்தது போன்றதொன்றைக் கொடுப்பார், பின் அழுதாலும் அழுவார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை ஆராய விசேட குழு,  சகல தமிழ்த் தரப்புடனும் பேச்சு பூட்டானில் மன்மோகன் சிங்கிடம் மஹிந்த எடுத்துரைப்பு

இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைப்பதற்குத் தாம் தீர்மா னித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் உட் பட சகல தமிழ்த் தரப்பினருடனும் பேசியே பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.

“சார்க்” மாநாட்டுக்காக பூட்டான் சென்றி ருந்த ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து விரிவாகப் பேசினார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஜனாதி பதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள் ளவை வருமாறு:

இலங்கையின் தமிழ் சமூகத்துக்கான அரசியல் தீர்வுத் திட்டங்கள் குறித்துப் பிர தமர் மன்மோகன் சிங்கிற்குத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ  பிரச்சினைக்கு ரிய சகல விவகாரங்கள் தொடர்பாகவும் ஆராய்வதற்காக முக்கிய பிரமுகர்கள் அடங் கிய குழுவொன்றை அமைக்கப் போகிறார் எனவும் குறிப்பிட்டார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குட னான 30 நிமிட பேச்சுகளின்போது இலங் கையின் அனைத்து சமூகத்தவர்களுக்கும் அதிகளவு பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மேல்சபை யொன்றை ஏற்படுத்தும் தனது திட்டம் குறித் தும் மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்தி யுள்ளார்.
இது அரசியல் தீர்வை நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற் பாட்டில் சமமான பங்களிப்பை வழங்குவ தற்காக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தப்படாதவர்கள் உட்படத் தமிழ் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் தான் பேச்சுகளை மேற்கொள்ளப்போகிறார் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இரு தலைவர்களும் இரு நாடுகளின தும் உயர்மட்டத் தலைவர்கள் பரஸ்பர விஜயங்களை மேற்கொள்வது குறித்தும் ஆராய்ந்துள்ளனர். இதன்போது அடுத்த சில மாதங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா விற்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தை தான் எதிர்பார்த்துள்ளார் எனத் தெரிவித்துள்ள மன் மோகன்சிங் இந்த விஜயம் இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும்  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மக்களுடன் அரசியல் இணக்கப்பாடு காண்பதற்கு கைவசம் உள்ள திட்டங்களை இந்தியப் பிரதமருக்கு சொல்லியுள்ளதாக ராஜபக்சே பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய இவரின் கைவச இருப்புக்கள் சகல தமிழ்த் தரப்பினருடனும் பேச்சு, பிரச்சினைக்குரிய சகல விவகாரங்கள் தொடர்பாக ஆராய முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழு,  நாடாளுமன்ற மேல்சபை.  பாருங்கள் தமிழ்மக்கள் பிரச்சினைத் தீர்விற்கு எப்படியான எந்தளவு பென்னம் பெரிய திட்டங்கள், குழுக்கள், சபைகள் என்று. இவைக்குத் தேவை, இப்படி காலம் கடத்துவது, இந்தியாவிற்குத் தேவை காலக் கடத்தலில், தமிழ்மக்கள் பிரச்சினைகள் தீராமல், தொடர் பிரச்சினையாக இருப்பதுவுமே. அப்போதுதான்,  இவர்களின் அரசியல் மொத்த-சில்லறை வியாபாரங்கள் தொடரும்.

மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு  எதிராக சார்க் நாடுகள் போராட  வேண்டும் பூட்டானில் நேற்று ஜனாதிபதி  பேச்சு

மேற்கு நாடுகளிலிருந்து வரும் அழுத் தங்களுக்கு எதிராக தெற்காசிய நாடுகள் கடுமையான முறையில் போராட வேண் டும் என்று ஜனாதிபதி மஹிந்த தெரிவித்தார்.  மேற்குலக நாடுகளின் தீர்வுத் திட்டங் கள் பலவந்தமாகத் திணிக்கப்படுவதை சார்க் நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என் றும் அவர் கூறினார்.
பூட்டானின் தலைநகர் திம்புவில் நேற்று நடைபெற்ற 16 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவற்றைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியவை வருமாறு:
தெற்காசிய வலய நாடுகள் வெளிச் சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது, ஸ்திரமான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.   தெற்காசிய வலய நாடுகள் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள போதிலும், சில வேளையில் பிராந்தியத்தின் பலம் குறைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது. பிராந்திய வலய நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவு பல்வேறு வெற்றிகளுக்கு வழிகோலும். பிராந்தியத்திற்கு வெளியேயான சக்திகளுடன் உறவுகளைப் பேணுவதில் காட்டும் முனைப்பு,  பிராந்திய நாடுகளுக்கு இடையில் காட்டப்படுவதில்லை. தெற்காசிய வலய நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவை ஏற்படின் தற்போதைய கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடத் தயங்கக் கூடாது. உலக விவகாரங்களில் தெற்காசிய வலய நாடுகளின் கூட்டுறவு மிகவும் அவசியமானது. சர்வதேச அரங்களில் தெற்காசிய வலய நாடுகளின் குரல் ஒருமித்த தொனியில் ஒலிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கியே எமது நடவடிக்கைகள் நகர வேண்டும்.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் விவகாரங்களில் பிராந்திய நாடுகளுக்கு இடையில் அதிக பிணைப்பு அவசியம். உலகின் ஏனைய வலய நாடுகளுக்கு இடையில் காணப்படும் சில வலுவான அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் செயற்பட வேண்டும்  என்றார்

உலகமயமாதலில், தாராளமயமாதலில், தனியார்மயத்தில், சர்வதேச உடன்பாடுகளில், உலகின் போக்குகள் பலவிதம். அதில் பிராந்தியம் ஒவ்வொன்றும் ஒருவிதம். இதில் உங்கள் இலக்கு, அமெரிக்க மேற்கில் அகப்படாதிருத்தல். அவைகள் போக்கிற்கு உடன்படாதிருத்தல். அவர்கள் இலக்கு ஆசியாவில் இழந்ததை மீளப்பெறுதல். அவற்றைத் தொடர்தல் எப்படி என்பதே. சார்க் நாடுகள் மேற்குலகின் அழுத்தங்களுக்கு எதிராகப் போராடுவது என்பது சரியானதே. ஆனால் அவர்களை முற்றாக நிராகரிக்க-இல்லாதாக்க வேண்டுமானால்  “தேசங்கள் சுதந்திரத்தை விரும்புகின்றன. நாடுகள் விடுதலையை விரும்புகின்றன.  மக்கள் புரட்சியை விரும்புகின்றார்கள்” என்ற மாவோ அவர்களின் கோட்பாட்டிற்கமையவே செல்லவேண்டும்.