Mon05252020

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 10

ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?: பகுதி 10

 

அமெரிக்க முதல் டிராட்ஸ்கிகள் வரை குருசேவ் வாழ்த்த, அவனோ கம்யூனிசத்தை தூற்றினான்

22வது காங்கிரஸ்சில் நடத்திய முதலாளித்துவ மீட்சியை மார்க்சிய-லெனினியக் கொள்கையை ஆக்கபூர்வமாக வளர்த்துச் செழுமைப்படுத்திய புத்திக் கூர்மையுள்ள முன்மாதிரி” என்று கூறி குருசேவை வாழ்த்தியது; ஏன், அமெரிக்கா உள்ளிட்ட டிராட்ஸ்கியவாதிகள் அனைவரும் குருசேவை வாழ்த்தி வரவேற்றனர். டைம்ஸ் என்ற அமெரிக்க இதழ் குருசேவ் பற்றிய குறிப்பில் மேற்கத்திய நாடுகளின் சிறந்த மாஸ்கோ நண்பர்” என்று புகழ்ந்தது.  ஏகாதிபத்தியவாதியான டபிள்யூ.ஏ.ஹாரிமன் சோவியத் பிரதமர் நிகடா குருச்சேவ் அமெரிக்கா அரசியல் வாதியைப் போல் நடந்துகொள்கிறார்” என்று புகழாரம் சூட்டினார். பிரிட்டிஸ் பத்திரிகையான டைம் அண்டு டைடு சுதந்திர உலகத்தைப் பொறுத்தவரை, இதுவரை ரசியர்கள் கொண்டிருந்த பிரதமர்களில் மிகச் சிறந்த பிரதமராக குருச்சேவ் கருதப்படுகிறார். சமாதான சகவாழ்வை அவர் உண்மையில் நம்புகின்றார்” என்றது.

 

வாஷிங்டனில் இருந்து எஜன்ஸ் பிரான்ஸ் பிரஸ்ஸதல் அனுப்பிய செய்தியில் சோவியத்-அமெரிக்க உறவுகளை உயர்த்துவதற்கான இந்த சாத்தியப்பாடனது, குறிப்பிட்ட எல்லைக்குள் குருசேவ்வின் பணிகளை அமெரிக்கா எளிதாக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் சிந்திக்குமளவிற்கு இட்டுச் சென்றுள்ளது” என்று தெரிவித்தது. ஜே.எப்.டல்லஸ் கலிபோர்னிய முதலாளிகள் மத்தியில் பேசும் போது சமாதான பூர்வமான வெற்றிக்காக ஒர் உன்னதமான திட்டத்துக்கு குருசேவ் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்” என்றார். ஏகாதிபத்தியவாதிகளின் மிகச் சிறந்த முதலாளித்துவ மீட்சியாளனாக குருசேவ் இருந்தான். டிராட்ஸ்கிகள் அவனுடன் கைகோர்த்து நின்றனர். இன்றும் குருச்சேவை டிராட்ஸ்கிகள் புகழ்கின்றனர். ஸ்டாலினை தூற்றி கழுவேற்றிய குருசேவின் கொள்கைளை இன்றுவரை உயர்த்தி நிற்கின்றனர். இந்த முதலாளித்துவ மீட்சியை நடத்திய போது, அதை எதிர்த்த மார்க்சியவாதிகளை கொன்று ஒழித்தை ஆதரிக்கின்றனர். இவர்களை ஸ்டாலினிஸ்ட்கள் என அடை மொழியூடாக சிறுமைப்படுத்தி, அவர்களின் படுகொலையை அங்கீகரிக்கின்றனர். சோவியத் மக்களின் சோசலிசம் காவு கொள்ளபப்பட்டதை மறுத்தனர். தொடந்தும் சோசலிச நாடு என்றனர். எல்லா கம்யூனிச எதிரிகளும் முதலாளித்துவ மீட்சி நடக்கவில்லை என்றனர். மாறாக சோசலிசம் பூத்துக் குழுங்குவதாக பிரகடனம் செய்தனர்.

இன்றும் கம்யூனிச எதிரிகளின் அடிப்படையான அவதூறுக்கான விளக்கம், இதில் இருந்தே கட்டமைக்கப்படுகின்றது. அன்று முதலாளித்துவ மீட்சி எதுவும் நடக்கவில்லை என்றனர். அதேநேரம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் சோவியத்தில் நடந்த மாற்றத்தை வரவேற்று அதற்கு உதவினர். லண்டன் டைம்ஸ் மேற்கத்திய நாடுகள் விரும்பும் வகையில் நடந்து கொள்ளும் மிகச்சிறந்த பிரதமர்… எனவே சிறிது காலத்துக்காவது, குருச்சேவ் அவர்களின் நிலையை மேலும் பலவீனமாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும்” என்று ஏகாதிபத்திய மூலதனத்துக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் அறிவுரை கூறிய‌து. இதையே தான் கம்யூனிஸ்ட் என்று கூறித் திரிந்த டிராட்ஸ்கிகள் முதல் எல்லா வண்ண நாய்களும் கூறின. கம்யூனிஸ்ட்களை ஸ்டாலினிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி அவதூறு செய்தன.

இந்நிலையில் உலகளாவிய பலத்த ஆதரவுடன் குருசேவ் மேலும் முதலாளித்துவ மீட்சியை விரைவாக்கினான். அவன் வர்க்கப் போராட்டத்தை கைவிடக் கோரி பல நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு முன்னரேயே, முதலாளிகளை சாதாரண சீர்திருத்தங்களை விட மிகவும் மேம்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி நிர்ப்பந்திக்க முடியும்” என்றான். வர்க்கப் போராட்டமின்றி மூலதனத்தை ஒழிக்க அடிப்படை உற்பத்திச் சாதனங்களை முதலாளிகளிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்வதற்கு முதலாளிகளே சம்மதிக்க கூடிய, முதலாளிகளும் அதை விருப்பக்கூடிய நிலைமை உள்ளது” என்றான். எனவே, மூலதனத்தை பாட்டாளி வர்க்கம் விலைக்கு வாங்கி வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றான். எந்த டிராட்ஸ்கியமும் இதை எதிர்கக்கவில்லை; மாறாக ஆதரித்தனர். ஏனெனின் இது ஸ்டாலிசத்தின் (மார்க்சியத்தின்) கொள்கைக்கு எதிரானது என்பதால் மட்டுமின்றி, வன்முறை சார்ந்த மக்கள் திரள் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் டிராட்ஸ்கியத்துடன் இது இணைந்தும் போனது.

இதையே 20வது கட்சிக் காங்கிரஸ்சில் ஸ்டாலினை மறுத்து குருசேவ் முன்வைத்த அறிக்கையில் பாராளுமன்றப் பாதையின் மூலம் சோசலிசத்திற்கான மாற்றம் அதாவது ‘சமாதான மாற்றம்’ என்பதை தொடாந்து முன்வைத்தான். உண்மையில் குருசேவின் கொள்கைகள் 1935ம் ஆண்டு சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் வெளிப்பட்டு நின்றது. 1935 முதல் கம்யூனிசத்துக்கு எதிராக செயல்பட்ட ஏர்ல் பிரேளடர் 1944 இல் வெளியிட்ட நூலான கம்யுனிஸ்டுகளும் தேசிய ஒற்றமையும்” என்ற நூலில் இவை செறிந்து காணப்படுகின்றது. வர்க்கப் போராட்டத்தைக் கைவிடக் கோரினர். யுத்தம் உலகின் பெரும்பகுதியை அழித்துவிடும் ஒரு உண்மையான பேரழிவாக இருக்கும். …உலகின் பெரும்பகுதியை 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு காட்டுமிராண்டித்தன வாழ்க்கைக்குப் தள்ளிவிடக் கூடும். …அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட மேம்படுத்தும் உடன்பாட்டினை வலியுறுத்தவதே கம்யூனிசப் பாதை” என்றார். அவர் மேலும் 1941 இல்  ஜனநாயக ரீதியாக இணங்கச் செய்வது மற்றும் நம்பிக்கை இவற்றையே முழுவதுமாகச் சார்ந்து இருக்க வேண்டும்” என்றான். இரண்டாம் உலக யுத்த முடிவில் 1948 இல் “சமாதான முறையில் சோசலிசத்துக்கு மாறிச் செல்வதற்கு சாத்தியமான நிலைமைகளை” உலகம் அடைந்துள்ளது என்றான். 1944 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திரமான பாத்திரத்தை மறுத்து கம்யூனிஸ்டுகளின் நடைமுறை ரீதியான அரசியல் நோக்கங்ககள் அவர்களை விட மிகப் பெரிய எண்ணிக்கையிலான கம்யூனிஸ்டுகள் அல்லாதவர்களுடன் முக்கிய அம்சங்களிலும் உடன்பாடானவையாக உள்ளவை நீண்ட காலத்துக்கு இருக்கும்” என்றான். 1960 இல் அமெரிக்கா கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்டாலின் எப்படி அழித்தார் என எழுதும் ஏர்ல் பிரேளடர் “1945 -ல் நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்படக் காரணமாக இருந்த அதே முரண்பட்ட கருத்தைத் தான் குருச்சேவ் இப்போது கடைப்பிடிக்கின்றார்” என்றான். வார்த்தைக்கு வார்த்தை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே வாதிட்ட அதே பாதையாகத்தான் இருக்கிறது, எனவே எனது குற்றம் தற்காலிகமாகவாவது புதிய வைதீக முறையாக மாறியிருக்கிறது” என்றான். கம்யூனிசத்தின் அடிப்படை கோட்பாடுகளை மறுத்து நின்ற போது, சர்வதேச கம்யூனிச இயக்கம் வெளியேற்றிய ஏர்ல் பிரேளடர்ரின் அன்றைய திட்டங்கள் தான் குருசேவின் இன்றைய கொள்கையாகியது. அவன் தன்னைத் தானே கம்யூனிஸ்ட் என்ற போற்றியதுடன், தனக்கும் தனது அதே கொள்கை முன்னெடுக்கும் குருச்சேவுக்கும் புனர்ஜென்மம் வழங்க கோருகின்றான். ஸ்டாலினும் பாட்டாளி வர்க்கமும் தன்னை வெளியேற்றியது குற்றம் என்கின்றான். தன்னைப் போன்றவர்களை வெளியேற்றியது தவறு என்கின்றான். கொள்கை ரீதியான கடும் போக்கு கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தாக கூறும் இவனின் கொள்கைகள், முதலாளித்துவ மீட்சிக்கு அடிப்படையாக வழிகாட்டியது. முதலாளித்துவ மீட்சிக்கு ஸ்டாலின் மறுக்கப்பட வேண்டும் என்பது இயங்கியல். அதை ஸ்டாலினிசம் எனத் தொடங்கி சர்வாதிகாரம் என பலவகையில் மறுப்பவர்களின் தேவைக்கு எற்ப அவை கொள்கை விளக்கமாகியது.

குருசேவ் வர்க்க கட்சியின் குறிக்கோளை சிதைக்க கட்சியின் அடிப்படை உள்ளடக்கத்தையே சிதைத்தான். உற்பத்தி அடிப்படையில் கட்சியை கட்டுதல் என்ற பெயரில் ‘தொழிற்துறைக் கட்சி’, ‘விவசாயக் கட்சி’ என்று கட்சியை அதன் அடிப்படை வர்க்க குணாம்சத்தையே மறுத்தான். சோசலிசத்தில் அரசியலை விட பொருளாதாரத்தின் முக்கியத்துவம் கருதியே இப்படிச் செய்தாக பல கதைகளை கூறினான். குருசேவ் கட்சி அமைப்புகளின் பிரதான வேலை, உற்பத்தியே என நாங்கள் அடித்துக் கூறுவோம்” என்றான். குருசேவ் கம்யூனிசம் என்பதை உடல் மற்றும் மூளை உழைப்பால் உற்பத்தியான ஏராளமான பண்டங்கள் நிறைந்த ஒரு பாத்திரம் அனைவருக்கும் எளிதில் கிட்டுமாறு இது இருக்கும்” என்றான். இப்படி கம்யூனிசத்துக்கு புது அகராதி எழுதிய இவன், கட்சி அமைப்பின் பிரதான வேலை வர்க்கப் போராட்டம் என்பதை மறுத்தான். கட்சியின் பிரதான வேலை உற்பத்தி என்ற கருத்து, டிராட்ஸ்கியத்தின் அடிப்படையாகும். இதை புகாரின் மற்றும் டிராட்ஸ்கி முன்வைத்த போது லெனின் பொருளாதாரத்தின் உருட்டித் திரட்டப்பட்ட வெளிப்பாடே அரசியல்,… ஆனால் அரசியல், பொருளாதாரத்தின் மீதும் செல்வாக்கு செலுத்துகின்றது இதற்கு மாறாக வாதிடுவது மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுப்பதாகும்” என்று அம்பலம் செய்தார். தொடர்ந்தும் லெனின் “.. இந்த விசயத்தைப் பற்றி ஒரு சரியான அரசியல் அணுகுமுறை இன்றி ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாது. மேலும், தன்னுடைய உற்பத்திப் பிரச்சனைகளைக் கூடத் தீர்க்க முடியாது” என்றார். குருசேவும் – டிராட்ஸ்கியும் சந்தித்த இந்த புள்ளியில் இருந்தே முதலாளித்துவ மீட்சி தொடங்கியது. டிராட்ஸ்கிகள் முதலாளித்துவ மீட்சி என்பதே அங்கு நடக்கவில்லை என்று இன்றுவரை சாதிக்கின்றனர். ஏன், கம்யூனிசத்தை திருத்த விரும்பும் அனைவரும் இதையே கிளிப்பிள்ளை போல் சொல்கின்றனர். முதலாளித்துவ மீட்சியல்ல, அங்கு சோசலிசத்தின் பாதையே தொடர்ந்தது என்கின்றனர். 22வது காங்கிரஸ்சில் குருசேவ் இருபது வருடங்களில் கம்யூனிச சமுதாயத்தைக் கட்டிவிடுவோம்” என்றான். அதாவது 20 வருடத்தில் முதலாளித்துவ மீட்சியை பூரணமாக்கிவிடுவோம் என்பதே இதன் சாரம். இது எதார்த்தமாகியது. 1980 களில் கொப்பச்சேவ் அதை பூரணமாக்கி உறுதி செய்தான். சோசலிசம் என்பதே பூரணமான முதலாளித்துவ ஆட்சியாக மாறிக் கொள்வதை குறித்து நின்றது. கொர்பச்சேவ் ஸ்டாலின் -பிரெஸ்னேவ் கால கட்டத்தில் திரிக்கபட்ட உருமாற்றம் செய்யப்பட்ட போலி சோசலிசத்தை சோசலிசத்தில் இருந்து களைந்துதெறிய வேண்டும்” என்றான். இப்படி கூறி அப்பட்டமாக முதலாளித்துவ மீட்சியை நடத்திய போது, இதை டிராட்ஸ்கியம் பெருமையாக எடுத்துக் காட்டி போற்றியது.

குருசேவ் “ஆ! ஸ்டாலின் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பே செத்திருந்தால்” எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றான். மார்க்சியத்துக்கு எதிரான டிராட்ஸ்கியவாதிகள் முதல் எல்லா மக்கள் விரோதிகளும் பாட்டாளி வர்க்க அடிப்படைகளை எவ்வளவு இலகுவாக துடைத்திருக்க முடியும் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அத்துடன் இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிகளின் வெற்றிக்கு எவ்வளவு சாதகமாக இருந்திருக்கும் என்ற அவாவையும் பிரதிபலித்து நிற்பதின் கூற்று இது. 20 வது காங்கிரஸ்சில் ‘தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை’ நிறைவேற்றிய பின்பே மக்கள் மேலான ‘கனத்த சுமை’ அகற்றப்பட்டு ‘ரசிய சமுதாயத்தின் வளர்ச்சி’ திடீரென துரிதப்படுத்தப்பட்டது என்று உலக கம்யூனிச இயக்கத்துக்கு அறிவித்தான். ரசிய சமுதாய வளர்ச்சி என்பது முதலாளித்துவ மீட்சியாக இருந்தது. தனிநபர் வழிப்பாட்டை எதிர்ப்பது என்பது ஸ்டாலின் தூற்றப்படுவதாக இருந்தது. எல்லா குற்றமும் ஸ்டாலின் மேல் சுமத்தப்பட்டது. இதன் மூலம் மார்க்சிய அடிப்படைகள் மறுக்கப்படுவதாக இருந்தது. வளர்ச்சி திடீரென துரிதப்பட்டது என்பது ஏகாதிபத்தியத்துடன் கூடிக் கூலாவுவதாக இருந்தது. லெனின் தலைவர்கள் பற்றி குறிப்பிடும் போது வரலாற்றில் எந்த ஒரு வர்க்கமும் தனது அரசியல் தலைவர்களை – ஒரு இயக்கத்தைக் கட்டி அதற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லக் கூடிய புகழ்பெற்றுச் சிறந்த தனது பிரதிநிதிகளை – உருவாக்காமல் அரசியல் அதிகாரத்தை வென்றதில்லை” என்றார். அவர் மேலும் கூறும் போது அனுபவமிக்க பெரும் செல்வாக்கு பெற்ற கட்சித் தலைவர்களை பயிற்றுவிப்பது என்பது நீண்ட காலம் பிடிக்கக் கூடிய கடினமான பணியாகும். ஆனால் இதில்லாமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற அதன் ஒன்றுபட்ட விருப்பம் என்பது ஒரு வெற்றுச் சொல்லாகும்” என்றார். இதை குருசேவ் மறுத்தான். ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க தலைமைப் பண்பையே மறுத்தான். அதனிடத்தில் முதலாளித்துவ பண்பை செருகி நின்று தூற்றினான். பாட்டாளி வர்க்க தலைமையை தூற்றுவதற்கு வர்க்க போராட்டத்தின் அடிப்படையான அதிகாரத்தை கொச்சைப்படுத்தி நின்றான். மாறாக முதலாளித்துவ அதிகாரத்துவத்தை, அதன் கபடத்தை, மோசடியை முன்வைத்தான். ஏகாதிபத்தியத்துடனும், எதிர் புரட்சி சக்திகளுடனும் கூடிக் கூலாவினான். பாட்டாளி வர்க்கத்தை கைவிட்டு முதலாளித்துவ மீட்சியை நடைமுறைப்படுத்திய படி ஏகாதிபத்தியத்தியத்தின் கைக்கூலியாக சீரழிந்த டிட்டோவையே தனது ஆசானாக கொண்டான். குருசேவ் டிட்டோ பற்றி குறிப்பிடும் போது ஒரே கருத்தைச் சேர்ந்தவர்கள், ஓரே கோட்பாட்டினால் வழிகாட்டப்படுபவர்கள்” என்றான். முதலாளித்துவ மீட்சியை நடத்துவதில் ஸ்டாலினை தூற்றுவதில் ஒன்றுபட்டனர்.

சர்வதேச வர்க்கப் போராட்டத்தை கைவிட்டனர். அதை காட்டிக் கொடுத்தனர். குருசேவ் சொன்னான் ‘காலனிய முறையின் அமைதியான சவ அடக்கத்தை’ செய்யக் கோரினான். பாட்டாளி வர்க்கத்தின் எதிர் முதலாளித்துவம் என்ற கோட்பாட்டை கைவிடக் கோரினான். 1955 இல் குருச்சேவ் அல்ஜிரிய விடுதலைப் போராட்டம் பற்றிய தனது உரையில் ரசியா பிறநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை. என்பதை எல்லாவற்றக்கும் முதலாவதாக நான் கருத்தில் வைத்திருந்தேன், வைத்திருக்கிறேன்” என்றான். மக்களின் போராட்டத்தையும் அதன் நியாயமான பண்பையும் நிராகரித்து, எகாதிபத்திய காலனியாக இருப்பதை அங்கீகரித்தான். 1958 இல் மீண்டும் குருசேவ் பிரான்ஸ் பலவீனமடைவதை நாங்கள் விரும்பவில்லை. பிரான்ஸ் இன்னும் மகத்தானதாக மாறவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றான். பிரஞ்சு ஏகாதிபத்தியம் அல்ஜிரிய மக்களின் பிணங்கள் மேல் பலமடைவதை ஆதரிப்பதாக கூறினான். அல்ஜிரிய மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிய பிரஞ்சு ஏகாதிபத்தியத்தை ஆதரித்தான். பிரஞ்சு கம்யூனிஸ்ட்டுகள் பிரஞ்சு எகாதிபத்திய காலனிய கொள்கையை ஆதரித்து நிற்க கோரினான். அல்ஜிரிய மக்களை பிரஞ்சு கம்யூனிஸ்ட்டுகள் கொல்லவேண்டும் என்றான். ஏனெனில் பிரஞ்சு பலவீனமடைவதை கம்யூனிசம் விரும்பவில்லை என்றான். 1960 இல் காங்கோவுக்கு அமெரிக்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தை ஐ.நா கொடியுடன் அனுப்ப ரசியா ஐ.நாவில் வாக்களித்தது. ஆக்கிரமிப்பு படைகளை கொண்டு செல்ல ரசிய போக்குவரத்து உதவிகளைச் செய்தது. அங்கு அமெரிக்கா எற்படுத்திய பொம்மை அரசை உற்சாகமாக ஆதாரித்துடன், மக்களை அடங்கிப் போகக் கோரினர். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு அப்பட்டமாகவே துணை நின்றனர். அதில் பங்கு கோரி நின்றனர். ஸ்டாலின் மறுக்கப்பட்டு ஏகாதிபத்திய துணையுடன் காலனிகள் மீளவும் உருவாக்க துணைசெய்தார்கள்.

இந்த துணை போகும் பாத்திரத்தை மேலும் ஆழமாக்க ஏகாதிபத்தியம் கோரியது. அமெரிக்க பிரதிநிதியான டீன் ரஸ்க அமெரிக்க வீரர்களின் தேசிய மாநாட்டில் ஆற்றிய உரையில்’ உலகப் புரட்சி எனும் தங்களுடைய இலக்கை கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைவிடும் வரை சமாதானம் உறுதி செய்யப்படுவது என்பதும், நிலையான சமாதானம் என்பதும் இருக்க முடியாதது” அவர் மேலும் உலகக் கம்யூனிச வெற்றி எனும் மாயையை ஒரு பக்கத்தில் தள்ளிவிட்டு முன் செல்லுங்கள்” என்று ரசிய தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். ஸ்டாலினை மறுத்த குருசேவ் சொன்னான் நாங்கள் அமெரிக்காவுடன் நண்பர்களாக இருப்பதற்கு, சமாதனத்திற்காகவும், சர்வதேச பாதுகாபிற்காகவும் மட்டுமின்றி பொருளாதார, கலாச்சார அரங்குகளில் கூட அதனுடன் ஒத்துலைப்பதற்கு விரும்புகின்றோம்” ஆனால் ஸ்டாலின் ஒரு நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றிய புரட்சியானது, தன்னை சுய நிறைவடைந்த ஒன்றாக கருதவே கூடாது. மாறாக எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியை விரைவுபடுத்த உதவுவதற்கான சாதனமாகக் கருதவேண்டும்” என்றார். அவர் மேலும் கூறும் போது தனது வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்கான (அதாவது உலகப் புரட்சிக்கான) ஒரு வலுமிக்க தளமாக… அது அமைந்திருக்கின்றது” என்றார். ஸ்டாலின் என் மறுக்கப்பட்டார்?, ஏன் தூற்றப்பட்டார்?, இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார் என்பதற்கு, பாட்டாளி வர்க்கம் அல்லாத அவர்கள் அரசியல் நிலையில் இருந்தே புரிந்து கொள்ளமுடியும்.

ஸ்டாலினை மறுத்து எதை எப்படி செய்தார்கள்?, என்பதிலிருந்தும், எகாதிபத்தியம் தொடர்ந்து எதைக் கோரியது என்பதிலிருந்தும் இதை ஆழமாக யாரும் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்க மாநில வங்கிகளின் சங்கத்தில் உரையற்றிய ஜே.எப்.டல்லஸ் சோவியத், வன்முறையைக் கைவிடுவது என்பது… தற்போது நிலவும் நிலைமைகளை அப்படியே தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது என்று பொருள்படாது. மாறாக அமைதி வழி மாற்றத்தைப் பொருள்படுத்தும்” என்றார். தற்காப்போடு நின்று கொள்வது போதுமானதல்ல. சுதந்திரம் என்பது ஊடுருவத் தக்க வகையில் சாதகமான சக்தியாக இருக்க வேண்டும்” என்றார். அமெரிக்கா ஜனதிபதி டி.டி.அய்சனேவர் ஸ்டாலின் போன்ற கொடூரமான சர்வாதிகாரத்தினால் கட்டுண்டு கிடக்கும் மக்கள், தங்களுடைய சொந்த சுதந்திரமான ஓட்டுக்களின் மூலம் தங்களுடைய விதிகளைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை இறுதியாகப் பெறும் பொருட்டு சமாதான சகவாழ்வு கையாளப்பட வேண்டும்” என்றார். அமெரிக்கா ஜனதிபதி ஜே.எப்.கென்னடி சோவியத் பேரரசிலும் மற்ற எல்லாக் கண்டங்களிலும் மாற்றங்கள் நிகழ்வதற்கும்… மிக அதிகபட்டசமான மக்களுக்கு மிக அதிகமான சுதந்திரம் எற்படுவதற்கும், உலக சமாதனதுக்கு இட்டுச்செல்வதற்கும்… நம் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்ய வேண்டியது நம் கடமை..” என்றார். அவர் மேலும் சுதந்திரமான தேர்வுக்கு வாய்பை உருவாக்க சுதந்திரத்தை பொறுமையாக ஊக்குவிப்பது மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிராக நிர்ப்பந்தம் கொடுப்பது” என்ற கொள்கையை சோவியத் மீது கையாள்வதாக அறிவித்தார். சோவித்தில் நடந்தது என்ன என்பது அப்பட்மாகவே தெரிகின்றது. ஸ்டாலின் ஏன் தூற்றபட்டார், ஏன் மறுக்கப்பட்டார், என் அதை அனைவரும் வரவேற்று கொண்டாடினர் என்பது தெள்ளத் தெளிவாக அம்பலப்பட்டு கிடக்கின்றது.

முதலாளித்துவ மீட்சியும் அதன் மூலம் முதலாளித்துவ நலன்களுமே, இதன் அடிப்படையான ஒரேயொரு குறிக்கோளாக இருந்தது. இதுபற்றி லெனின் கூறினார் உலகம் முழுக்க கம்யூனிசம் தோன்றும் வரை சோசலிசம் உக்கிரமான வர்க்க மோதல்கள் நிறைந்த ஒரு முழுச் சகாப்தமாக அமைகிறது” என்றார் அவர் மேலும் இந்த சகாப்தம் முடிவடையும் வரை, சுரண்டல்காரர் தவிர்க்க முடியாதபடி மீட்சிக்கான நம்பிக்கை ஆவலுடன் வளர்த்துக் கொண்டிருப்பதோடு, இந்த நம்பிக்கை மீட்சிக்கான முயற்சிகளாகவும் மாற்றப்படுகிறது” என்றார். ஆம் இதை மறுப்பதே இன்று வரை ஸ்டாலினை தூற்றுவோரின் மையமான அரசியல் உள்ளடக்கமாகும். ஸ்டாலின் இதை உயிரினும் மேலானதாக பாதுகாத்தார். இதை யாரும் இனியும் மறுத்து நிறுவமுடியாது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9