Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 19

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 19

 

லெனினுக்கு எதிராக  டிராட்ஸ்கியின் வெட்டித்தமான சதி அரசியல்

டிராட்ஸ்கி ஜனநாயகம் பற்றிய வாயொழுக பீற்றிய போது லெனின் சம்பிரதாய ஜனநாயகம் புரட்சிகர அக்கறைக்குப் கீழ்ப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள புஹாரின் முற்றிலும் தவறி விட்டார். டிராட்ஸ்கியின் நிலையும் இதுவே இந்த விசயத்தின் சாரத்தைப் பற்றிய விவாதத்தை எப்பாடுபட்டும் தவிர்க்கவோ, விலக்கிவைக்கவோ தான் லெனின் விரும்புகிறார் … இதன் பலன் என்ன? டிசம்பர் 25 இல் இந்தப் “பரந்த விவாதத்தை” டிராட்ஸ்கி தொடங்கி சற்றே ஒரு மாதம் கடந்துள்ளது. இந்த விவாதத்தில் அறவே சலிப்படையாத, இதன் பயனின்மையை உணராத பொறுப்பான கட்சி ஊழியர் நூற்றில் ஒருவரைக் கூட காண்பது அரிது. வெறும் சொற்களையும் மோசமான ஆராய்ச்சியுரைகளையும் விவாதிப்பதன் பேரில் டிராட்ஸ்கி கட்சி நேரத்தை வீணாக்கும்படி செய்திருக்கிறார்…

 

தேசிய பொருளாதாரக் கவுன்சில்களில் மூன்றில் இரண்டு பங்கும் தொழிற்ச்சங்க வாதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று டிராட்ஸ்கி தமது ஆராய்ச்சியுரைகளில் பிரேரணை செய்வதானது, அதிகார வர்க்கத் தன்மை கொண்ட வீண் திட்டமிடலாகும் என்று நான் கூறினேன்.

 

இதற்காக புஹாரின் என்னைக் கடிந்த கொண்டார். “எதையேனும் விவாதிக்க மக்கள் கூடும் போது அவர்கள் செவிட்டு ஊமைகள் போல் நடந்து கொள்ளக் கூடாது” …டிராட்ஸ்கி கோபமடைந்து கூறியிருப்பதாவது “இந்த குறிப்பட்ட தேதியில் தோழர் லெனின் இதை ஒரு அதிகார வர்க்க தீமை என்ற வர்ணித்ததை நீங்கள் ஒவ்வொருவரும் தயவு செய்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். …(தனது அதிகார வர்க்கத் திட்டம் குறித்து டிராட்ஸ்கி – அடைப்புக்குறிக்குள் உள்ளது கட்டுரையாளரால் சுருக்கம் கருதி வைப்பது) இன்னும் சில மாதங்களில் நமக்கு வழிகாட்டியாகவும் நோக்கமாகவும் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறோம் என்று முன்கூட்டியே கூற உரிமை எடுத்துக் கொள்கின்றேன்…” (லெனின் புள்ளிவிபரங்கள் மூலம் திரோஸ்கிய வாதத்தை தகர்த்தார்) டிராட்ஸ்கி தனது ஆராய்ச்சியுரைகளில் என்ன எழுதினாரோ அது அதிகார வர்க்க தோராணையில் செயலே என்பதை இது எற்கனவே நிரூபிக்கிறது. …கொள்கை அறிக்கைகள் எழுதுவதும் மிகவும் பயனற்ற வகையைச் சேர்ந்த “பொதுக் கட்சி வீண் பேச்சு” இது உற்பத்தி வேலையில் இருந்து காலம், கவனம் மற்றும் மூல வளங்களைத் திசை திருப்புகின்றது. இது ஆழந்த பொருள் இல்லாத, வெட்டித்தனமான அரசியலாகும்.

 

பொது விதியைத் தான் தோழர் டிராட்ஸ்கி தனது எல்லா ஆராய்ச்சியுரைகள் மற்றும் அணுகுமுறையின் மூலம் மீறியிருக்கிறார். அவரது ஆராய்ச்சியுரைகள் அனைத்தும், அவரது கொள்கைப் பிரசுரம் முழுவதும் மிகவும் தவறானவையாக இருப்தால், அவை கட்சியின் கவனத்தையும் நன்மை வாய்ப்புகளையும் நடைமுறை “உற்பத்தி” வேலையில் இருந்து கவைக்குதவாத வெறும் பேச்சக்குத் திசைதிருப்பியுள்ளன.

 

ஒரு தவறைச் செய்யும் ஒருவரின் உணர்வு பூர்வமான அடிப்படை முதற்கோள்களின் மத்தியில் கிடக்கும் அதன் தத்துவார்த்த அடிவேர்களை ஆழத் தோண்டிப் பார்க்கா விட்டால், அரசியல் தவறு மட்டுமின்றி எந்தத் தவறையும் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறும் லெனினின் நீண்ட விவாத்தில் இருந்து, ஒரு பகுதியை இங்கு எடுத்துக் காட்ட வேண்டி உள்ளது. லெனினின் இந்த விவாதம் மிகவும் விரிவானது. டிராட்ஸ்கியம் மார்க்சியமா? அல்லது மற்றொன்றா? என்பதை புரிந்து கொள்ள இது உதவுகிறது. டிராட்ஸ்கி 1917 இல் தன்னை சுயவிமர்சனம் செய்து மார்க்சியவாதியாக மாறி லெனினிஸ்ட்டாக மாறியிருந்தாரா என்பதை சொந்தமாகவும் சுயமாகவும் புரிந்து கொள்ள, லெனினின் இயக்கவியல் பிரச்சனைகள் பற்றி” எனும் நூல் முழுமையாக படிக்கப்பட்டாக வேண்டும். மிகவும் நீண்ட விவாதமாக, நீண்ட காலம் நடந்த இந்த விவாதத்தின் சிறுபகுதியை மட்டுமே இதில் எடுத்துக் காட்டியுள்ளேன். லெனின் டிராட்ஸ்கிக்கு எதிராக எதை எல்லாம் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தினரோ; அதை அப்படியே ஸ்டாலின் மீது அடிப்படையற்ற வகையில் திருப்பி போட்டதைக் கடந்து எதுவும் டிராட்ஸ்கியத்திடம் இல்லை என்பதை, இந்த விவாதத்ததைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஸ்டாலின் தூற்றப்பட வேண்டும் என்பதற்காக டிராட்ஸ்கி தன் மீதான லெனினின் விவாதத்தை, அடிப்படையும் ஆதாரமும் இன்றி ஸ்டாலின் மீது திருப்பி நடத்தியதை நாம் இனம் காணமுடியும். அதிகார வர்க்க முறையில் தனது தலைமை நிலைநாட்டவும், கட்சியின் தலைமையை நிராகரித்து, இயல்பான பொதுவான மக்களின் பின்தங்கிய உணர்வு மட்டத்துக்கு விவாதத்தை நடத்தி, தலைமைகளை மாற்றி அமைக்க முயன்றான். இந்த வகையில் டிராட்ஸ்கி சாதாரண மக்களின் பூர்சுவா மனநிலையைக் கூட தனக்கு சதாகமாக பயன்படுத்தினான். இந்த விவாதத்தின் அடிப்படை மார்க்சிய உள்ளடகத்தை டிராட்ஸ்கி என்றும் எற்றுக் கொண்டு சுயவிமர்சனம் செய்யவில்லை. அதாவது லெனினின் சரியான முடிவை டிராட்ஸ்கி அங்கிகரிக்கவில்லை. மாறாக விவாதத்தில் தோற்றுப் போய், கட்சி அணிகள் மத்தியில் தனிமைப்பட்டதன் மூலமே, டிராட்ஸ்கி இந்த விடயம் மீதான விவாதத்தை நிறுத்த வேண்டி எற்பட்டது. இது மீண்டும் மீண்டும் பல்வேறு வழிகளில் சோவியத் ஆட்சியை கவிழ்க்கும் ஒரு டிராட்ஸ்கிய கோட்பாடாகவே மேலெழுந்து வந்தது. டிராட்ஸ்கி தனது முதலாளித்துவ மீட்சிக்கான ஆட்சிக்காக இத்துடன் தன்னை நிறுத்திவிடவில்லை. தொடர்ந்து போராடிய போது சதிகள், கோஷ்டிவாத பிளவு முயற்சிகள், சோவியத் எதிரிகளை ஒன்றிணைத்த வகையிலான சதிகள், ஆயுதம் ஏந்திய குழுக்கள், சோவியத் அரசுக்கு எதிரான பகிரங்க ஆர்ப்பட்டங்கள், இராணுவத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு என்ற பல வழிகளில் முயன்று இறுதியில் முற்றாக தோற்றான்.

லெனினுக்கு எதிராக உருவான கோஷ்டிவாத பிளவு நடவடிக்கை நாம் மேலே பார்த்தோம். டிராட்ஸ்கி பற்றி லெனினின் இந்த மதிப்பீடு மிகவும் துல்லியமானதும் மிகவும் சரியானதுமாகும். டிராட்ஸ்கி எப்போதும் லெனினுக்கு எதிராக இருந்தது மட்டுமின்றி, மொத்த கமிட்டிக்கு எதிராக தனி ஒருவராக இருந்தபடி, கட்சியை எதிர்த்து ஒரு கோஷ்டிப் பிளவையும் உருவாக்கினார். இந்த கோஷ்டி 1917 இணைவு முதலே கட்சியின் உயிரோட்டத்தை இடைவிடாது தடுத்து வந்தது. தனது அதிகாரத்தை நிலைநாட்ட எடுத்த கோஷ்டிவாத பிளவு முயற்சிகள் தோற்ற போது, இரகசியமாகவும், பகிரங்கமாகவும் கோஷ்டிகளை அமைத்து இயங்கும் நிலைக்கு மாறிச் சென்றது. லெனினின் சரியான மார்க்சிய வழிகளை மாற்றி அமைக்க இடைவிடாது போராடியது மட்டுமின்றி, பரிணாம வளர்ச்சியின் வன்முறை மூலம் ஆட்சியைக் கைப்பற்றவும் திட்டமிட்டான். இந்த திட்டமிட்ட வளர்ச்சி என்பது எல்லா கம்யூனிச எதிரிகளையும் ஒன்றிணைத்து, பல்வேறு வழிகளில் பலரை கொன்று விடவும் இரகசியமாக திட்டமிட்டனர். ஸ்டாலினையும் அவர் சார்ந்த கட்சி மீதும் அன்றும், இன்றும் நடத்தும் சேறடிப்புகள் அனைத்தும், இந்த டிராட்ஸ்கிய மற்றும் வலது, இடது விலகல் பேர்வழிகளின் கூட்டுடன் கம்யூனிச விரோத சக்திகளினால் புனையப்பட்டவைதான். இதை 1917 க்கு பிந்திய, டிராட்ஸ்கியம் என்ற மார்க்சிமல்லாத கோட்பாடுகளை, லெனினின் விமர்சனங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18