Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சீனப் பண பெறுமதி குறைக்கப்பட்டதும் - அதன் விளைவுகளும்

சீனப் பணத்தின் பெறுமதி குறைக்கப்பட்டதன் மூலம், உலக பொருளாதாரத்தில் அதிர்வை உருவாக்கி இருக்கின்றது. இது ஏன் எதற்காக என்பதும், என்ன விளைவுகளை உருவாக்கும் என்பதை புரிந்து கொள்வதன் மூலமே, உலகை எதிர்கொண்டு வாழ்வதற்காக போராட முடியும்.

உலகில் மிக மலிவானதும் - தொழில் திறன் கொண்டதும் - ஒழுகுபடுத்தப்பட்ட உழைப்பைக் கொண்ட நாடாக சீனா இருந்தது. இதனால் உலக மூலதனமானது, சீனாவை நோக்கிப் பாய்ந்தது. இதனால் உயர் தொழில் நுட்பம் வரை சீனா உற்பத்திப் பொருளாக சந்தையில் குவிய, பன்நாட்டு மூலதனம் பெரும் லாபங்களைப் பெற்றுவந்தது. அதே நேரம் சீனா பொருளாதார வளர்ச்சி பெற்று வந்ததுடன், சீனாப் பணத்தின் பெறுமதி அதிகரித்து வந்தது.

சீனாப் பணத்தின் பெறுமதி அதிகரிப்பானது, சீனா மலிவான கூலி கொண்ட நாடு என்ற இடத்தை இல்லாதாக்கத்; தொடங்கியது. சர்வதேச மூலதனம் இதை விட மலிவான நாடுகளை நோக்கி நகரத் தொடங்கியதன் பின்னனியில், சீனா பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியது.

சீனாத் தொழிலாளார்களின் கூலியை குறைப்பதன் மூலமே, சர்வதேச மூலதனத்தை சீனாவில் தக்க வைக்க முடியும் என்ற நிலையில், பணத்தின் பெறுமதியைக் குறைத்து இருக்கின்றது. அதாவது முன்பைவிட அன்னிய பணத்தைக் கொண்டு சீனாவில் அதிகம் உழைப்பையும், அதனால் உற்பத்தியான பொருளையும் வாங்கக் கூடிய எற்பாட்டை சீனா அரசு செய்துள்ளது. அதே நேரம் வெளிநாட்டு இறக்குமதிக்கு முன்பைவிட அதிக பணம் செலவு செய்ய வேண்டி இருப்பதானது, சீனா மக்களின் வாழ்க்கை செலவை அதிகரிக்கும். இப்படி சீன நாட்டைச் சுரண்டம் அன்னிய மூலதனத்துக்கும் - சீனாவுக்கு எற்றுமதி செய்யும் மூலதனத்தின் நலனக்கு ஏற்ப, பணம் பெறுமதியைக் குறைத்து இருக்கின்றது.

இதை சீனாவில் வளர்ச்சியாகவும் - சீனா மக்களின் வேலையை பாதுகாக்கவும் என்று கூறி, அன்னிய மூலதனத்தின் நலன்களை தேசத்தின் நலனாக முன்வைத்திருகின்றது.

இந்த கொள்கையை சீனா மாத்திரமல்ல, எல்லா நாடுகளும் கடைப்பிடிக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் சீனப் பணத்தின் பெறுமதி அதிகரிப்பால் வெளியேறும் மூலதனத்ததை கவரும் வண்ணம், மற்றைய மூன்றாம் உலக நாடுகள் முன்னெடுத்த பொருளாதார - கல்விக் கொள்கைகள் அனைத்தையும், சீனா பணத்தின் பெறுமதியைக் குறைத்தன் மூலம் திவலாக்கி இருகின்றது.

நாட்டு மக்களுக்கான பொருளாதாரக் கொள்கைக்கு பதில் அன்னிய மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் உலகளாவிலான விளைவுகளைக் கொண்டது என்பதை இது எடுத்துக் காட்டுவதுடன் - இதன் விளைவுகள் உலகளவில் விரைவில் எதிர்ரொலிக்கும் என்பது எதார்த்தமாகும்.