Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 31

ஸ்டாலினிசம் என்றால், அதுதான் லெனினிசம், அதுதான் மார்க்சிசம்

ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்டாலினிசமா என்றால், இல்லை. அதுதான் லெனினிசம். இங்கு இதுதான் மார்க்சியம். 1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஸ்விக்குகள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் ‘ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி’ என்ற கட்டுரையில் ஒரு தனிப்பட்ட முழக்கம் என்கிற வகையில் உலக ஐக்கிய நாடுகள் என்பது சரியானதாக இருக்க முடியாது. எனெனில் இதற்கு, ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமானதல்ல என்று தவறான பொருள் வழங்கப்படக்கூடும்” என்றார். லெனின் புரட்சிக்கு பின்பு ரஷ்யாவில் பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிரான ஒரே உத்திரவாதம், மேற்கு நாட்டில் ஏற்படுகிற ஒரு சோசலிசப் புரட்சிதான். ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கக் கூடிய ஒரு நிலையில் நாம் இல்லை. ஆனால் ஒரு சார்பு நிலையான, நிபந்தனைக்கு உட்பட்ட “உத்திரவாதம்” ஒன்று உண்டு. ரசியாவில் கூடுமான வரை மிகமிக விரிவான விளைவுகள் ஏற்படுத்துகின்ற, முரணற்ற, உறுதியான முறையில் புரட்சியை நிறைவேற்றுவதில்தான், பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிராகக் கூடுமான வரையில் மிகவும் சாத்தியமான தடைகளை எழுப்புவதில் பொதிந்துள்ளது” என்றார்.

இதுதான் 1925 களில் மீளத் தொடங்கிய அரசியல் விவாதத்தின் அடிப்படையும், உள்ளடக்கமுமாகும். அதாவது ஸ்டாலினிசமாகவும் அதன் மீதான எதிர்ப்பாகவும் இருப்பதன் அரசியல் உள்ளடக்கமும் இதுதான். ஆனால் ஸ்டாலின், கட்சியின் நீண்ட காலத் தலைவர் என்ற வகையில், லெனினியத்தை முன்னெடுப்பதில் வேறு யாரையும் விட முன்னணியில் இருந்தார். லெனின் ஏழாவது காங்கிரசில் “ரஷ்யாவில்பாட்டாளி வர்க்க அரசின் கரங்களில் உள்ள பொருளாதாரச் சக்தியானது, கம்யூனிசத்தை நோக்கிய மாறுதலை உறுதி செய்ய போதுமானது” என்றார். கூட்டுறவு பற்றிய கட்டுரையில் “நம்மைஇப்போது எதிர்கொண்டிருப்பது இக் கலாச்சார புரட்சிதான். இக்கலாச்சாரப் புரட்சியானது, நம் நாட்டை ஒர் முற்றிலும் சோசலிச நாடாக உருவாக்குவதற்கு போதுமானது” என்றார். இது போல் லெனின் பலமுறை இதை விரிவாக்கியுள்ளார். இதை டிராட்ஸ்கி தொடர்ச்சியாக எதிர்த்ததுடன், இதையே ஸ்டாலினிசமாக, லெனினை முடி மறைத்தபடி மார்க்சியத்துக்கு எதிரானதாக காட்டினார், காட்டுகின்றனர்.

ஒரு நாட்டில் புரட்சிக்கு பின்பு வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து சோசலிசத்தை கட்டுவதா இல்லையா என்ற கேள்விக்கு டிராட்ஸ்கி “தோல்வியடையும் -அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலிய சர்வாதிகாரமாக முடியும்” என்றதன் மூலம், ஸ்டாலினை எதிர்த்தன் மூலம், மீளவும் பழைய மென்ஸ்விக்குகள் நிலையில், லெனினை மறுத்து நின்றார். இதை இன்னும் இழிவாக்கி ஸ்டாலினிசமாக்கினார். ஸ்டாலினுக்கு பதில் டிராட்ஸ்கி ஆட்சிக்கு வந்தால் என்ன நடந்திருக்கும். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியாது. அது தேங்கிவிடும் அல்லது சர்வாதிகார நெப்போலியன் ஆட்சியாகி விடும் என்று கூறிய படி, பழையதுக்கு திரும்பிச் செல்வதையே முன்வைத்திருக்க முடியும். இதைத் தாண்டி அவரால் தனது கோட்பாட்டுக்கு விளக்கம் சொல்ல முடியாது. இதைத்தான் இன்று தூக்கி பிடித்து காவடி எடுப்பதன் மூலம், முன்வைக்கும் ஸ்டாலின் எதிர்ப்பின் வர்க்க நோக்கம் தெட்ட தெளிவானவை. இந்த அரசியல் உள்ளடகத்தில் தான் ஸ்டாலின் முரண்பாடு உருவாகின்றது. கட்சி எதற்காக உருவாக்கி, எதற்காக போராடி புரட்சியை நடத்தியதோ (இந்த போராட்டத்தில் டிராட்ஸ்கி எதிர்த்தே நின்றவர்), அந்த கட்சியின் நோக்கத்தை எதிர்த்த போது, கட்சியில் தொடர்ச்சியாக தோற்றுப் போனர்கள்;. கட்சி இவைகளை விவாதிகவும், கருத்தை வைக்க வழங்கிய ஜனநாயக மத்தியத்துவத்தையும், அரசியல் அதிகாரத்தையும் முறை கேடாக பயன்படுத்தினர். கட்சியின் ஜனநாயகத்தை குழதோண்டி புதைத்தன் மூலம், சதிகளைத் திட்டமிட்டனர்.

லெனின் தொடரும் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி ‘பஞ்சத்தைமுறியடிப்பது’ என்ற அறிக்கையில் “ஆ! தொழிலாளர் வர்க்கம் பழைய முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து ஒரு இனப்பெருஞ் சுவற்றால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் ஒரு தனி நபர் இறந்து போகும் விவகாரத்தில், இறந்தவர் சாதாரணமாகத் தூக்கிச் சென்று விடப்படுவதைப் போல் புரட்சியின் போது நடப்பதில்லை. பழைய சமுதாயம் சிதைவுறும் போது அதன் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து ஆணியடித்து சவக்குழியில் புதைத்து விட முடியாது. நமது மத்தியிலேயே அது உருக்குலைகிறது. பிணம் அழுகுகின்றது. நமக்கு நச்சிடுகிறது” என்றார். எதிரி வர்க்கத்தைச் சார்ந்து கட்சியின் சிறுபான்மை, எதிர் புரட்சிக்கு முயற்சி எடுத்தது நஞ்சிட்டது.

இது புரட்சி நடந்த நாடுகளில் இருக்கக் கூடிய பொது விதியும் கூட. சோவியத்தில் நடந்தவை வர்க்கப் போராட்டத்தின் புற நிலைமையின் விளைவே ஒழிய, ஸ்டாலின் தனிபட்ட அகநிலையோ, நாட்டின் பொதுவான நிலைமையோ அல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் வேறுபட்ட வர்க்கத்தினை பிரதி செய்தவர்களின், ஜனநாயக விரோத வன்முறை அரசியல் மீதானது தான் மாஸ்கோ விசாரனையாகும்.

வர்க்கப் போராட்டத்தை சிதைக்க முயல்பவர்களை எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்பதை லெனின் ‘சோவியத்அரசாங்கத்தின் உடனடிக் கடமைகள்’ என்ற பிரசுரத்தில் “முதலாளித்துவத்திலிருந்துசோசலிசத்திற்கான ஒவ்வொரு மாறுதலின் போதும் இரண்டு முக்கிய காரணங்களுக்காக அல்லது இரண்டு முக்கிய வழிகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம். முதலாவதாக சுரண்டலாளர்களின் எதிர்ப்புகளை இரக்கமற்ற முறையில் நசுக்குவது இன்றி முதலாளித்துவம் வீழ்த்தப்படவும் ஒழித்துக்கட்டப்படவும் முடியாது. சுரண்டலாளர்களிடமிருந்து அவர்களது செல்வத்தை அறிவிலும் அமைப்புத் துறையிலும் அவர்களுக்கு உள்ள சாதகத்தை உடனடியாகப் பறித்துவிட முடியாது. அதன் பயனாய் அவர்கள் வறியவர்களின் வெறுக்கத்தக்க ஆட்சியை (ஒரு நீண்ட காலத்திற்கு) தூக்கியெறிவதற்குத் தவிர்க்க முடியாமல் முயன்று கொண்டிருப்பார்கள். இரண்டாவதாக ஒவ்வொரு மாபெரும் புரட்சியும் குறிப்பாக ஒரு சோசலிசப் புரட்சியும் உள் நாட்டு யுத்தம் இல்லாமல் நினைத்துப் பார்க்கமுடியாது…. ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஊசலாட்டங்களையும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடுகின்ற உதாரணங்களையும் உள்ளடக்கியதாகும்…. முந்தைய புரட்சிகளின் துரதிஷ்டம் என்னவென்றால் உருக்குலைக்கும் கூறுகளை ஈவு இரக்கமின்றி நசுக்க மக்களுக்கு பலத்தைத் தொடுக்கவும், அவர்களை ஒரு இறுக்கமான நிலையில் வைத்திருக்கவுமான புரட்சிகர உற்சாகம் நீண்ட காலத்திற்கு நீடிக்காததுதான் பரந்துபட்ட மக்களின் இந்த புரட்சிகர உற்சாகத்தின் நிலையின்மைக்கான சமுதாய வர்க்கக் காரணம் பாட்டாளி வாக்கத்தின் பலவீனம்தான்…. என்று தெளிவுபடவே விளக்குகின்றார். இதைத் தான் ஸ்டாலின் ஒருநாட்டில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதற்கு எதிரான, சதிக் குழுக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்க போராடினர். இதில் தோற்றுப் போய்யிருந்தால் 1956 இல் குருசேவ் உருவாகியிருக்க வேண்டிய வரலாறு தோன்றிருக்காது. அது 1930 களிலேயே ஏற்பட்டு இருப்பதுடன், பாசிசம் உலகை ஆண்டிருக்கும்.

வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு பின்பு மிக தீவிரமாக மாறுவதுடன், எல்லாவிதமான முறையிலும் எதிரி வர்க்கம் போரட்டத்தை முன்னெக்கின்றது. இது ஸ்டாலின் கற்பனையல்ல. இது மார்க்சியத்தின் அரசியல் உள்ளடக்கம். இதையே ஸ்டாலின் முன்னெடுத்தார். இவை பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் அதிக அனுபவத்தை நடைமுறையில் சந்திக்க விட்டாலும், முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றுவாய்கள் பற்றி பலமுறை குறிப்பிட்டே எழுதியுள்ளனர். அவைகளை நாம் பார்ப்போம்.

மார்க்ஸ் ‘பிரான்சில்வர்க்கப் போராட்டம்’ என்ற தலைப்பில் “பொதுவாகவர்க்க வேறுபாடுகளை ஒழித்துக் கட்டுவதற்கு, அவை தங்கியிருக்கும் எல்லா உற்பத்தி உறவுகளையும் ஒழித்துக் கட்டுவதற்கு, இந்த உற்பத்தி உறவுகளுக்குப் பொருத்தமான எல்லா சமூக உறவுகளையும் ஒளித்துக் கட்டுவதற்கு, இந்த சமூக உறவுகளில் இருந்து விளையும் எல்லாக் கருத்துகளையும் புரட்சிமயமாக்குவதற்கு அவசியமான மாறுதலுக்கான முறை என்கிற வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, புரட்சியின் நித்தியத்துவத்தைப் பிரகடனப்படுத்துவது சோசலிசம்” என்றார்.

இதையே லெனின் “வர்க்கங்களைஒழிப்பது ஒரு நீண்ட, இடர்பாடுகள் மிக்க மற்றும் உறுதியான வர்க்கப் போராட்டத்தைக் கோருகிறது. மூலதனத்தின் அதிகாரம் தூக்கியெறியப்பட்ட பிறகு முதலாளித்துவ அரசு நொருக்கப்பட்ட பிறகு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்ட பிறகு (பழைய சோசலிசம், மற்றும் பழைய சமூக ஜனநாயகம் ஆகியவற்றின் ஆபாசமான பிரதிநிதிகள் கற்பனை செய்வது போல்) வர்க்கப் போராட்டம் மறைந்து விடுவதில்லை. மாறாக வெறுமனே அதன் வடிவங்களில் மாறுதலடைகிறது. மேலும் பல விவகாரங்களில் மிகவும் கடுமையானதாக மாறுகின்றது” என்றார் லெனின்.

இதை மேலும் அவர் ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் அரசியலும் பொருளாதாரமும்’ என்ற பிரசுரத்தில் “பாட்டாளிவர்க்கத்தின் கீழ் சுரண்டும் வர்க்கத்தினர், அதாவது முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் மறைந்து விடவில்லை. எல்லோரும் ஒரே சமயத்தில் மறைந்து விடவும் முடியாது, சுரண்டலாளர்கள் வீழ்த்தப் பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒழிக்கப்பட்டுவிடவில்லை… இன்னமும் விசாலமான சமூகத் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களது எதிர்ப்பின் சக்தி ஒரு நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகாரிக்கின்றது. மக்கள் தொகையில் இருக்க வேண்டியதில் அவர்களது எண்ணிக்கையை விட ஒப்பிட முடியாத அளவு மிகப் பெரும் முக்கியத்துவமுடையதான வகையில் அரசு, இராணுவம் மற்றும் பொருளாதார நிர்வாகத்தின் “கலை” அவர்களுக்கு மேலாண்மையை, ஒரு மிகப்பெரிய அளவிலான மேலாண்மையைக் கொடுக்கின்றது. வென்ற சுரண்டப்படுபவர்களின் முன்னணிக்கு அதாவது பாட்டாளி வர்க்கத்தக்கு எதிராக தூக்கியெறியப்பட்ட சுரண்டலாளர்கள் தொடுக்கும் வர்க்கப் போராட்டம் ஒப்பிட முடியாதவாறு கசப்பானது. மேலும் புரட்சியைப் பற்றி பேசுகையில், இந்தக் கருத்தோட்டம் சீர்திருத்த மாயைகளால் இடமாற்றம் செய்யவில்லையானால், இது வேறானதாக இருக்கமுடியாது” என்றார் லெனின். இதைத் தான் ஸ்டாலின் பின்பற்றினர். லெனின் வர்க்க போதனைகளை உறுதிபட முன்னெடுப்பதில் அவர் இரும்பாக அதாவது ஸ்டாலினாக இருந்தார். இந்த வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்த போது, அதில் சில கடுமையான தவறுகளைச் செய்தார். அவை என்ன? எப்படி இத்தவறுகள் நேர்ந்தன. இதற்கு பதிலாக எதை முன்னிறுத்தியிருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

முதற்பதிவு: செங்கொடி

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 19

20. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 20

21. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 21

22. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 22

23. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 23

24. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 24

25. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 25

26. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 26

27. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 27

28. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 28

29. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 29

30. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 30