Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுரிமையையும், சமவுரிமைக்கான போராட்டத்தையும் மறுப்பவர்கள் யார்?

இன்று சமவுரிமைக்கான அரசியல் இயக்கத்தின் அவசியம் என்ன? இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வுகான திறவுகோலை, சமவுரிமைகள் மூலம் தான் வந்தடைய முடியும். இனங்களுக்கு இடையிலும், தேசங்களுக்கு இடையில் சமவுரிமைக்கான போராட்டங்கள் இன்றி இலங்கையின் இன-மத முரண்பாட்டுக்கு தீர்வு காண முடியாது. மக்கள் தான் தீர்வை கண்டைய வேண்டும் என்ற நம்புகின்ற எவரும், சமவுரிமைக்கான போராட்டத்துக்கு வெளியில் வேறுபட்ட போராட்ட அரசியல் வழிமுறைகளை கொண்டு இருக்க முடியாது. இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் ஒன்றுபட்ட சமவுரிமைக்கான போராட்டம் தான், மக்கள் தங்கள் சொந்த தீர்வை வந்தடைவதற்கான அரசியல் அடிப்படையாகும்.

இதற்கு வெளியில் தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் தனிநாட்டுத் தீர்வு என்பது தோற்கடிக்கப்பட்டதாகவும், சாத்தியமற்றதாகவும், அதன் கோட்பாடு மற்றும் நடைமுறை வரலாறு ரீதியாக எடுத்துக் காட்டுகின்றது. அது குறுகியதாகவும், அன்னிய சக்திகளின் நலன் சார்ந்தாகவும், ஜனநாயக விரோதமானதாகவும், ஒடுக்கும் வர்க்கம் சார்ந்தாக இருக்க முடியுமே ஓழிய, மக்கள் சார்ந்தாகவோ பாட்டாளி வர்க்கம் சார்ந்தாகவோ இருக்க முடியாது. இந்த வகையில் சமவுரிமைக்கான போராட்டத்தை இவர்கள் மறுக்கின்றனர்.

சமவுரிமை போராட்டத்துக்கு பதில் தனிநாட்டுக் கோரிக்கையை தொடர்ந்து முன்வைக்கின்றவர்கள், இரண்டு அரசியல் வழிகளை அரசியல் தீர்வாக முன்னிறுத்துகினறனர்.

1.முன்பு புலிகள் உருவாக்கியது போன்று ஒரு படையை மீளக் காட்டுவதன் மூலம் தனிநாட்டை அடைவது.

2.இலங்கை அரசுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை சார்ந்து தனிநாட்டை பெறமுடியும் என்கின்றனர்.

இன்று சமவுரிமையை மறுத்தும்இ அதற்கான போராட்ட இயக்கத்தை மறுத்தும்இ தனிநாட்டைக் கோருகின்றவர்களின் வழிமுறை மேற் கூறிய இரண்டுக்குளேய இயங்குகின்றது. இதற்கு வெளியல்ல. இந்த வகையில் இதை எடுத்தால்

முன்போல் தனிநாட்டுக்கான படையைக் கட்ட முடியுமா!?

இன்று இது சத்தியமில்லை என்பதும், பெரும்பான்மையான மக்கள் அனுபவ ரீதியாக நிராகரிக்கின்ற அரசியல் செயல்முறை. கடந்தகாலத்தில் இதன் மூலம் பொருளாதார ரீதியாக லாபம் அடைந்தவர்களே, தொடர்ந்து அந்த செயற்பாடுகள் சார்ந்து பிழைக்கின்றவர்களே, இந்த அரசியல் வழிமுறையின் பெருமைகளைச் சொல்லி எமாற்றி வாழ்பவர்களின் வழிமுறையே மீண்டும் ஒரு இனவாத படை மூலம் தீர்வு என்னும் மோவடி அரங்கேறுகின்றது.

இன்றைய அரசியல் சூழலில், மீண்டும் புலிகள் உருவாக்கிய போன்று தனிநாட்டுக்கான படைகளை இனி உருவாக்க முடியாது. 1980களில் சமூக விழிப்பு கொண்ட தன்னியல்பான ஜனநாயக செயற்பாடுகளும், 1990களில் ஜனநாயக மறுப்புகளும் கொண்ட மூன்று சகாத்தங்களை அடிப்படையாகக் கொண்டதுமான அன்றைய சூழலும், அன்னிய சக்திகளின் நலன் சார்ந்த செயற்பாடுகளும் கொண்ட அரசியல் பின்புலத்தில் தான் புலிகள் உருவானர்கள். அது தன் சொந்த அழிவுடன் கூடிய ஒன்றாக, வீங்கி வெம்பி அழுகியது. இதற்கான அதன் அரசியல் முதல் அன்னிய சக்திகளின் நலன்களுடன் பின்னிப்பிணைந்த அதன் அரசியல் பின்புலத்தில் முடிவுக்கு வந்தது. இது மீண்டும் ஒருமுறை வர முடியாது. அதே போன்று வரலாறு தோன்றுதில்லை. மீண்டும் புலியைப் போன்ற பாரிய படையைக் கட்ட முடியாது. அதை மிஞ்சவும் முடியாது. தோற்றுப் போன இனவாத கைக் கூலி அரசியலில் தோற்றுப் போன வழிமுறையாக இருக்கின்றது.

மீண்டும் புலியை மிஞ்சி படையைக் கட்டி தீர்வு என்பதுஇ அரசியல் ரீதியாகவே மக்களுக்கு எதிரான மோசடி.

அரசுடான மேற்கு நாடுகளின் முரண்பாடுகள் மூலம் தனிநாட்டைப் பெற முடியுமா!?

இதை நம்பியே பெரும்பான்மை மக்களின் அரசியல் சிந்தனைகளும், செயற்பாடுகளும் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் தனிநாட்டுக்கான படை மூலம் தீர்வு என்று கூறியவர்களின் பெரும்பான்மையானவர்கள், இன்று தஞ்சமடைந்து மக்களை ஏமாற்றி வழிநடத்தும் இடம் தான் இது. தனிநாட்டுக்கான கடந்தகால படை செயற்பாட்டை அழிக்க யார் உதவினரோ, அவர்களை நம்ப வைக்கின்ற அவலம். கடந்த காலத்தில் புலிகள் தோற்க அவர்களின் அரசியல் காரணமல்ல, அன்னிய சக்திகளின் உதவிகள் என்று கூறியவர்களே இன்று அந்த அன்னிய சக்திகள் மூலம் தீர்வு என்கின்றனர். இந்த வகையில் இரண்டாக பிரிகின்றன்றனர். 1.இந்தியா சார்பு 2.மேற்கு சார்பு ஆக இரண்டு அணியாக, தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை இதன் மூலம் கண்டைய முடியும் என்கின்றனர்.

கடந்த காலத்தில் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்துக்கு உதவி, அதன் மூலம் அழித்த அதே சக்திகள் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற கூறுகின்ற தனிநாட்டுக்காரர்களின் அரசியல் மோசடிகள் மிஞ்சி எதையும் இது முன்வைக்கவில்லை.

தங்கள் சர்வதேச நலன்களுக்கு எற்ப இலங்கை ஆளும் தரப்புடன் முரண்படும் நாடுகள், தங்கள் நலனை அடைவதற்கான செயற்பாடுகள் மூலம் எங்களுக்கு எலும்புகளை போடுவர்கள் என்ற அரசியல் நப்பாசையை தீர்வுகளாக மக்கள் முன் முன்வைக்கின்றனர். இதன் மூலம் சமவுரிமைக்கான போராட்டத்தை நிராகரிக்கின்றனர்.

இனப்பிரச்சனை தீர்வுக்கான வழி என்ன?

மக்கள் தங்கள் பிரச்சனைக்காக, தன் தீர்வுக்காக தாமே போராடுவதுதான் ஓரேயொரு நேர்மையான வழி. இது சாத்திமற்றதாக கூறி மக்களை மோசடி செய்பவர்கள் தான், மக்களின் இதை சாத்தியமற்றதென்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். சமவுரிமைக்கான மக்கள் போராட்ட வழிமுறையை மறுக்கிறவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர்.

மக்கள் தமக்காக, தங்கள் உரிமைக்காக போராடுவது தான் ஒரே தீர்வு. இதன் அர்த்தம் இலங்கை மக்கள், இதற்கு தீர்வு காண்பது தான். இலங்கையில் தனித்து ஒரு இனம் அல்லது மதம் தீர்வு காண முடியாது. இலங்கையில் உள்ள மொழி மற்றும் மதங்களின் சமவுரிமைக்கான, ஜனநாயக உரிமையை முன்னிறுத்திப் போராடுவதன் மூலம் தான் மக்கள் தமக்கான சொந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். ஒடுக்கப்பட்டவர்கள் சமவுரியைக் கோருவதும், அதை தங்களை ஓத்த பிறமக்களுக்கு வழங்குமாறு கோரி பேராடுவதும், அடிப்படையான ஜனநாயகப் போராட்டமாகும். இந்த சமவுரிமையை மறுப்பவர்கள், இந்தப் போராட்டத்தை (முன்னெடுக்க) மறுப்பவர்கள் ஜனநாயக விரோதியாக இருக்கின்றனர். அரசியலில் இந்த உண்மையைத் தாண்டி உண்மை இருப்பதில்லை.

முரணற்ற ஜனநாயக்கோரிக்கை தான் சமவுரிமை. இதை மறுக்கின்றவர்கள் ஜனநாயக விரோதியாகவும், மக்களின் சமவுரிமைக்கு எதிரானவராகவும் இருக்கின்றனர். இந்த வகையில் சமவுரிமையை மறுக்கின்றவாகள் அரசும் மட்டுமல்லஇ அதை கோரிய போராடுவதை மறுக்கின்ற அரசியலும் தான் இதையே சமந்தரமாக செய்கின்றது.

சமவுரிமையும் தன்னாட்சி உரிமையும்

சமவுரிமை போராட்டத்தை மறுத்து சுயநிர்ணய அடிப்படையிலான தன்னாட்சி உரிமையை பெற முடியாது. சுயநிர்ணயத்துகான போராட்டம் என்பது, சமவுரிமைக்கான போராட்டம் மூலம் தான் நடக்கின்றது.

சமவுரியைக்கோரிப் போராடுவதை மறுத்தும், போராடுவதை அரசியல் ரீதியாக இழிவுபடுத்தியும் நிற்பவர்கள், சமவுரிமையைக் கடந்த கோரிக்கை முன்வைக்கும் போது சமவுரிமைக்கு எதிரானது. அதாவது மக்களுக்கு எதிரான சலுகை பெற்ற வர்க்கங்களின், கோரிக்கைகள் தான், சமவுரிமையை மறுத்து முன்வைக்கும் கோரிக்கைகளாகும்.

லெனின் மார்க்சிய ரீதியான அரசியல் சுயநிர்ணய முன்மொழிவுகளில், சமவுரிமையை முன்வைத்து போராடுவதையே தன் கோட்பாடாக முன்வைக்கின்றனர். தேசிய முரண்பாட்டுகான நடைமுறையிலான வர்க்க போராட்டத்தை, சமவுரிமையை அடிப்படையாகக் கொண்ட போராட்டத்தை முன்னிறுத்தியதே சுயநிர்ணயம் பற்றிய லெனின் தேசிய இனக் கோட்பாடுகள்.

தன்னாட்சி உரிமையை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயக் கோட்பாடு, தங்கள் ஆட்சி அதிகாரத்தில் முன்னெடுக்கும் தீர்வையே முன்னிறுத்துகின்றது. அதை அடைவதற்காக சமவுரிமைக்கான அரசியல் போராட்டங்களையே முரணற்ற வகையில் வழிகாட்டுகின்றது.

சுயநிர்ணயம் முன்வைக்கும் தன்னாட்சி உரிமையை பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திக்கு வந்த பின் முன்னெடுக்கும் தீர்வையே முன்வைக்கின்றதே ஒழிய, அதற்கு முன்னான எதையும் குறித்து முன்வைக்கவில்லை. பாட்டாளி வர்க்க அதிகாரத்தில் தான் தன்னாட்சி உரிமை கொண்ட (இனங்களுக்கு அல்ல) தேசங்களையே அரசியல் தீர்வாக வழிகாட்டுகின்றது. இது தான் மார்க்சியம் கூறும் சுயநிர்ணய அரசியல் உள்ளடக்கம்.

இதற்கு அனைத்து இன மக்களை அணிதிரட்டுவது அவசியம். இது சமவுரிமையின் அடைப்படையில் தானே ஓழிய, வேறு சிறப்பு சலுகைகள் மூலமல்ல. ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் சமவுரிiமையைக் கோரியும், ஒடுக்கும் இனத்தைச் சேந்தவர்கள் சமவுரிமையை அங்கிகரிக்க கோரியும் போராடும் அடிப்படைதான், சமவுரிமைக்கான சிறப்பான அரசியல் போராட்டத்தை குறித்து நிற்கின்றது.

அனைவருக்குமான சமவுரிமையை மறுக்கின்றவர்களாக அரசு மட்டும் இருப்பத்தில்லை என்ற உண்மை, மக்களின் பொது எதிரிகளை ஓட்டு மொத்தமாக இன்று அம்பலமாக்கின்றது.

பி.இரயாகரன்
01.12.2013