Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 29

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 29

ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொடரவும் அதைப் பாதுகாக்கவும் போராடிய ஒரு தலைவர்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க ஸ்டாலினின் நடத்திய பேராட்டத்தில் சரிகளையும் தவறுகளையும் ஆராயும் போது, அவதூறுகளை அது தரைமட்டமாக்குகிறது. ஸ்டாலின், வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் பாத்திரம் என்பதன் மூலம், அவர் நேர்மையாக பாட்டாளி வர்க்கத்துக்காக போராடினார் என்பதும், ஸ்டாலினால் இதை விட எதுவும் செய்ய முடியாது என்று கூறும் அனுதாபம் அல்லது வரலாற்றை விளக்கும் எல்லா அடிப்படையின் பின்பும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டுச் செல்வதை கோருகின்றது. ஸ்டாலின் காலம் அதிகார வர்க்க ஆட்சி, அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் சோசலிசம் அல்ல, என்ற அனைத்து விளக்கமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்றது. இவைகளை முன் வைப்போர் ஏன்?, எப்படி? .. என்பதை முன்வைப்பதில்லை. இதை முன்வைக்க முடியாத போது அவதூற்றை விரும்பியவாறு வைப்பது நிகழ்கிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், அங்கு தொடரும் வர்க்கப் போராட்டத்தையும், வர்க்க சமுதாயத்தில் மறுப்பதில் இருந்து இவர்கள் அரசியல் வெளிப்படுகின்றது. இதற்கு முதலாளித்துவ ஜனநாயகம் பற்றிய பிரமைகளை விதைப்பதில் இருந்தே, இடதுசாரி முகமூடிகளின் பின்பு அவதூறுகள் கட்டமைக்கப்படுகின்றது. இதன் பின்பான தமது வர்க்க நலனை மூடிமறைப்பதில் மிகுந்த சந்தர்ப்பவாத அக்கறை எடுத்துக் கொண்டு, மார்க்சியம் மீது பொறுக்கியெடுத்த தாக்குதலை நடத்துகின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருந்து பிரச்சனைகளை பகுத்தாய்வதற்கு பதில், குறிப்பானதை முழுமையானதாக காட்டி, தமது வர்க்க நலன்களை தக்க வைப்பதில், இவர்கள் ஏகாதிபத்தியத்தின் வளர்ப்பு நாய்களாக இருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பவாத இடதுசாரிகளின் நோக்கங்கள் பற்றி லெனின் ”உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறு விளைவிக்கக் கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் நிரூபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது” என்றார். ஸ்டாலின் பற்றிய அவதூறுகள் பற்பல விதமானவை. எல்லாவிதமான வடிவங்கள் ஊடாகவும், ஸ்டாலினை தாக்குவதன் மூலம், மார்க்சியத்தை குழி தோண்டிப் புதைக்க கனவு காண்கின்றனர். ஸ்டாலின் புதைகுழி அரசியலைக் கொண்டு இருந்ததாக முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்னிறுத்தி பிதற்றுகின்றனர். இப்படி வர்க்க அரசியலை முன்னெக்க முடியாது அரசியல் ரீதியாக ஆண்மை இழந்து மலடாகிப் போனவர்கள், ஸ்டாலினையும், மார்க்சியத்தையும் புதைகுழியில் புதைத்து விட தலைகீழாக சபதம் எடுத்து குதித்தெழும்புகின்றனர்.

யார் இந்த ஸ்டாலின்?

ஸ்டாலின் தனது பாடசாலை வாழ்க்கையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் கண்டு அதைத் துடைக்க, தனது 16 வது வயதில் அதாவது 1895 இல் கம்யூனிஸ் கட்சியுடனான உறவைத் தொடங்குகின்றார். 1890 களின் இறுதியில் பல போராட்டத்தை நடத்தியதுடன், கட்சி வாழ்வை தொடங்கிவிடுகின்றார். கட்சி வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு சென்ற மென்ஸ்விக்குகள், போராட்ட நெருக்கடியில் கட்சிக் கலைப்பு வாதத்தை முன்வைத்த ஓடுகாலிகள், நடுநிலை சந்தர்ப்பவாதிகள், பலர் பலவிதத்தில் நீண்ட விடாமுயற்சியான நெருக்கடியான வர்க்க போராட்டத்தை கைவிட்டுச் சென்ற எல்லா நிலையிலும், ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை முன்நிலைப்படுத்தினார், அதற்காக போராடினார், அதைப் பாதுகாத்து நின்றார். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அவர் இரும்பு மனிதனாக இருந்ததால், அவரை லெனின் ‘இரும்பு’ என்ற பெயரால் ‘ஸ்டாலின்’ என்று அழைத்தார். பாட்டாளி வர்க்க, வர்க்கப் போராட்டத்தை உறுதியாக நடத்திய வரலாற்றில், அவர் ஆறு முறை தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து பலமுறை புரட்சியின் கடமையை முன்னெடுக்க தப்பிச் சென்றார்.

1912 ம் ஆண்டு போல்ஸ்விக் கட்சி பிராக்கில் கூடிய போது, மென்ஸ்விக்குகளை கட்சியில் இருந்து முற்றாக வெளியேற்றியதுடன், லெனின் தலைமையிலான கட்சி தனது சுயேட்சையான பாட்டாளி வர்க்க புரட்சிகரத் தன்மையை ஸ்தாபன வடிவில் பகிரங்கமாக அறிவித்தனர். இந்த காங்கிரஸ் நடந்த காலத்தில் ஸ்டாலின் சிறையில் இருந்த போதும், ஸ்டாலினை மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யபட்டார். அத்துடன் லெனின் ஆலோசனைப் படி நாட்டில் நடைமுறையை வழிகாட்டும் தலைமை உறுப்பு ஒன்றை உருவாக்கியதுடன், அதன் தலைவராக அதற்கு தகுதியான ஸ்டாலினையே நியமித்தார். நாட்டின் புரட்சிகர அமைப்பாக்கல் மற்றும் அனைத்து வர்க்கப் போராட்டத்தையும், கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் 1912 இல் இருந்தே ஸ்டாலின் கட்சிக்கு நேரடியாக வழிகாட்ட தொடங்கிவிட்டார். 1917 போல்ஸ்விக் புரட்சியில் லெனின் பங்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவுக்கு லெனினை முக்கியத்துவப்படுத்திய புரட்சியை நடைமுறையில் முன்னெடுத்தவர் ஸ்டாலின். இதை அவர் 1912 முதல் வழிநடத்தியவர். லெனின் கோட்பாட்டு தலைமை புரட்சியில் எவ்வளவுக்கு முக்கியமாக நடைமுறை சார்ந்து வழிகாட்டலுக்கு உள்ளாகியதோ, அதேபோல் ஸ்டாலின் நடைமுறைத் தலைமை புரட்சியை முன்னெடுத்த அமைப்பை உருவாக்குவதில் தொடங்கி கோட்பாட்டு வழிகாட்டலை ஒருங்கிணைத்தது. இந்த இரு தலைமையும் ஒரு சேர ஒருங்கினைந்த வரலாற்றில் தான், சோசலிச புரட்சி வெற்றி பெற்றது. இவ் இரண்டும் இன்றி சோவியத் புரட்சி என்பது கற்பனையானது. இரண்டு துறை சார்ந்த முன்னணி பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், தத்தம் பணியில் வெற்றிகரமாக இணைந்து வழிகாட்டிய வரலாறு தான், சோவியத் புரட்சியை நடத்தியது. இந்தளவுக்கு வேறு எந்த தலைவரும் புரட்சியை முன்னெடுக்கும் தலைமைப் பொறுப்பை, பல்வேறு நெருக்கடிகளில் கொண்டிருக்கவில்லை. நாட்டுக்கு வெளியில் இருந்த லெனின் வழங்கிய கோட்பாட்டு தலைமையும், நாட்டுக்குள் ஸ்டாலின் வழங்கிய நடைமுறை அமைப்பாக்கல் தலைமையும், ஒன்றிணைந்த புரட்சி தான் சோவியத் புரட்சியாகும்.

ஸ்டாலின் திடீரென அதிகாரத்தை கைப்பற்றினான் என்பது எல்லாம் இடது வேடம் போட்டவர்களின் வெற்று அவதூறுகளாகும். ஸ்டாலின் நீண்ட அனுபவம் கொண்ட, போராட்ட தலைவனாக, நெருக்கடிகளில் முன் மாதிரி போல்ஸ்விக்காக போராடிய முன்னணி தலைவராக திகழ்ந்தமையால், 1912 லேயே மத்திய குழுவுக்கு தெரிவு செய்ததுடன், நாட்டின் நடைமுறை போராட்டத்துக்கான தலைமைப் பொறுப்பை லெனினின் முன்மொழிவுடன், 1912 லேயே ஏற்றுக் கொண்டு போல்ஸ்விக் தலைவரானார். இந்த தலைமைப் பொறுப்பை சதிகள் மூலமல்ல, பாட்டாளி வர்க்க போராட்டத் தலைவனாக நடைமுறையில் இருந்தமையால், அவர் சிறையில் இருந்த போதும் கட்சி அவரிடம் தனாகவே ஒப்படைத்தது.

1917 இல் நடந்த முதல் (பிப்ரவரி) புரட்சியைத் தொடர்ந்து, ஜூன் மாதம் மென்சுவிக்குகள் ஆதிக்கம் வகித்த சோவியத்தின் முதல் காங்கிரசின் மத்திய நிர்வாக குழுவுக்கு, ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், ஒரு தலைவராகவே இருந்தார். 1917 இல் பிப்ரவரி புரட்சியை நடத்தியவர்கள் போல்ஸ்விக்குகளை கைது செய்து, லெனினை கொன்று விட அவதூறுகளை பொழிந்த போது, டிராட்ஸ்கியும், காமனேவும் சிறைப்பட்டு நியாயம் கோரி வழக்காட வேண்டும் என்றே முன்மொழிந்தனர். ஸ்டாலின் அதை நிராகரித்ததுடன், லெனினின் பாதுகாப்பை தானே பொறுப்பெடுத்தார். ஐரோப்பாவில் புரட்சி நடைபெறாமால் பாட்டாளி வர்க்க புரட்சியா? என்ற கேள்வியுடன் டிராட்ஸ்கி, ருசியாவில் சோசலிஸத்தை சாதிக்க முடியாது என்று புரட்சியை எதிர்த்த போது, ஸ்டாலின் “சோசலிஸத்துக்குப் பாதை வகுக்கும் தேசமாக ரஷ்யா இருக்கக் கூடுமென்பதை புறக்கணிக்க முடியாது…. ஐரோப்பா மட்டுமே வழிகாட்ட வேண்டுமென்ற பத்தாம் பசலிக் கருத்தைக் கைவிடவேண்டும். குருட்டுத்தனமான வறட்டு மார்க்சியமும் இருக்கின்றது. படைப்புத் தன்மை கொண்டு வளரும் மார்க்சியமும் இருக்கின்றது. இரண்டாவது வகையை ஆதரிக்கின்றேன்” என்றார்.

ஐரோப்பா புரட்சியின்றி தொடரும் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறாது என்று கூறி, டிராட்ஸ்கி சோசலிசம் என்ற வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து முன்வைத்த வாதம் மற்றும் நடைமுறைகள், உண்மையில் முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்தை ஒரே தாவில் தாண்டிவிடக் கோரும் இடது தீவிரத்தின் உள்ளடக்கமாகும். அராஜகவாதம் எதை கோட்பாட்டில் முன்வைக்கின்றதோ, அதையே இது பின் பக்கத்தால் வைக்கின்றது. சோசலிச சமூகம் என்பது கம்யூனிசத்தை நோக்கிய, அடுத்த கட்ட வர்க்கப் போராட்ட தயாரிப்பு மற்றும் முன்னெடுப்பு காலம் என்பதை மறுப்பதில் இருந்தே, ‘தனிநாட்டு சோசலிசம்’ என்ற எதிர்ப்பின் பின்னான அரசியல் உள்ளடக்கமாகும். பாட்டாளிகள் வர்க்கப் போராட்டம் மூலம் கைப்பற்றும் ஆட்சி மாற்றம், வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு வடிவ மாற்றம் மட்டுமே தான். இங்கு கம்யூனிசத்தை நோக்கிய போராட்டத்தை சோசலிச சமூகத்தில் கைவிடக் கோருவது, வர்க்கப் போராட்டத்தை பின்பக்க கதவால் இழுத்து தடுப்பதாகும்.

வர்க்கப் போராட்டத்தைப் பற்றி லெனினின் தெளிவான நிலைப்பாட்டைப் பார்ப்போம், சுதந்திரம், சமத்துவம் என்ற முழக்கங்களால் மக்களை ஏமாற்றுவது பற்றிய உரைக்கான தனது முன்னுரையில் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கப் போராட்டத்தின் முடிவல்ல, ஆனால் புதிய வடிவங்களில் இதன் தொடர்ச்சியாகும். தோற்கடிக்கப்பட்ட ஆனால் துடைத்தொழிக்கப்படாத ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக, மறைத்து போகாத, எதிர்ப்பைத் தருவதை நிறுத்தாத, ஆனால் எதிர்ப்பை மேலும் ஆழப்படுத்தியுள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை கரங்களில் எடுத்துக் கொண்ட பாட்டாளி வர்க்கத்தால் தொடுக்கப்படும் வர்க்கப் போராட்டமே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாகும்” என்றார் லெனின். ஆனால் இதை எதிர்ப்பதில் தான் இன்றைய எல்லா இடது முகமூடிகளும் சரி, அன்றைய டிராட்ஸ்கி மற்றும் புக்காரின் போன்றவர்களும் தங்கள் அரசியலை கட்டமைத்தனர், கட்டமைக்கின்றனர். இவர்கள் லெனின் காலத்தில் சந்தர்ப்பவாதமாக மூடிமறைத்தபடி இதைப்பற்றி வாய்திறந்து எதிர்க்கவில்லை. ஆனால் முடிமறைத்த வகையில் தமது ஆட்சியை நிறுவுவதன் மூலம், இதை மறுக்க முனைந்தனர். இதில் தோற்ற போது இதை எதிர்ப்பது ஒரு அரசியல் கொள்கை விளக்கமாகி அதுவே சதியாகியது. ஆனால் ஸ்டாலின் இதை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்ததில் தான், அவர் மீதான அவதூறுகள் கட்டமைக்கப்பட்டன, கட்டமைக்கப்படுகின்றன.

1917 அக்டோபர் 23ம் தேதி கட்சியின் மத்தியக் கமிட்டி கூடி எடுத்த வரலாற்று புகழ்மிக்க புரட்சியை நடத்துவது பற்றிய முடிவில், ஆயுதம் ஏந்திய எழுச்சிக்கு தலைமை தாங்க அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். புரட்சியை தலைமை தாங்கி நடத்தியது ஸ்டாலின் தான். வேறு யாருமல்ல. இங்கு ஸ்டாலின் சதி செய்து புரட்சிக்கு தலைமை தாங்க வந்தவர் அல்ல. கட்சி தனது தலைவரை தெரிவு செய்வது இயல்பானது. இந்த பொறுப்புமிக்க நடைமுறை ஸ்தாபனப் பணியை செய்யும் தகுதி, ஸ்டாலினைத் தவிர வேறு எந்த மத்திய குழு உறுப்பினருக்கும் அன்று இருக்கவில்லை. ஆனால் இடதுசாரி பெயரில் எழுதுபவர்கள் இதைப் பற்றி வகை வகையாக, வண்ணம் வண்ணமாக எழுதுவது மட்டுமே, அவர்களின் மலட்டுப் பிழைப்பாக உள்ளது.

ஸ்டாலின் என்ற தலைவருக்கு 1919 நவம்பர் 27ம் திகதி லெனின் முன்மொழிந்த தீர்மானத்தின் படி, ஸ்டாலினுக்கு செங்கொடி பதக்கம் வழங்கப்பட்டது. இதே விருதை டிராட்ஸ்கியும் பெற்றார். டிராட்ஸ்கி செஞ்சேனை சார்ந்து பாதுகாப்பு மந்திரியாக இருந்த போதும், சோவியத் புரட்சியை பாதுகாக்க செஞ்சேனையை தலைமை தாங்கி, எதிரிகளை ஒழித்துக் கட்டிய பங்களிப்பு சார்ந்து வழங்கிய விருது, அதே கராணத்துக்காக ஏன் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

சோவியத்துக்கு ஆபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம், கட்சியின் விசேட வேண்டுகோள்களை நிறைவேற்றுவதில், ஸ்டாலின் முன்முயற்சியுடன் செஞ்சேனையை வழி நடத்திய திறமைமிக்க தளபதியாக திகழ்ந்த தனித்துவமான பணிக்காக வழங்கப்பட்டது. கட்சியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஸ்டாலின் பல போர்முனைகளில் பல வெற்றிகளை சாதித்ததன் மூலம், சோவியத்தை பாதுகாத்தார். ஸ்டாலின் கிராட்டில் (ஜாரீட்ஸின்) இருந்து தேவையான உணவை பெறவும், இராணுவ ரீதியாக அதை வெற்றி பெறவும் கட்சியின் வேண்டுகோளின் படி, அதை மீட்டு எடுத்தார். இந்த யுத்த பிரதேசத்தில் டிராட்ஸ்கி செஞ்சேனைக்கு தளபதியாக நியமித்த பழைய ஜார் மன்னனின் இராணுவ தளபதிகளை நீக்கி, புரட்சிகரமான செஞ்சேனை, புரட்சிகரமான தளபதிகளின் தலைமையில் அப்பகுதியை மீட்டு எடுத்தார்.

அடுத்த மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க உக்ரேனுக்கு சென்று அப்பகுதியை மீட்டதுடன், கார்க்கோ, பேலோ ரஷ்யாவையும் மீட்டார். 1918 இல் கிழக்கு முனையில் ஏற்பட்ட ஆபத்தை எதிர்கொள்ள மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க அங்கு சென்று கிழக்கு போர்முனையை வென்றார். அங்கு இருந்து மீண்ட ஸ்டாலின் புதிய பொறுப்பாக அரசாங்கச் செயலாட்சி அமைச்சராக கட்சியால் நியமிக்கப்பட்டார். இது தொழிலாளர், விவசாயிகள் கண்காணிப்பு வாரியம், ஊழல், நாசவேலை, கையாலாகாத்தனம் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவதில், ஸ்டாலினின் பங்கு கோரப்பட்டது.

1919 இல் மார்ச்சில் எதிரி பெட்ரோகிராடை கைப்பற்ற முன்னேறிய போது, ஸ்டாலினை கட்சி அங்கு அனுப்பியது. அங்கு அவர் மாபெரும் சாதனையை சாதித்து எதிரியை நொருக்கித் தள்ளினார். பின்பு எதிரி ஓரெல் நகரை பிடித்த பின்பு, மாஸ்கோவை நான்கு மணிநேரத்தில் அடையும் வகையில் எதிரி அருகில் நெருங்கி வந்த நிலையில், மாஸ்கோவில் முதலில் கால் வைப்பவனுக்கு 10 லட்சம் ரூபிள் பரிசு அளிக்கப்படும் என்ற நிலையில், லெனின் “தெனீக்கின் – எதிர்ப்புப் போரில் சகல சக்திகளும் திரளட்டும்” என்றார். 1919 இல் மத்திய கமிட்டி இந்த எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்க ஸ்டாலினை நியமித்தனர். ஸ்டாலின் இந்த பிரதேசத்தை பாதுகாக்க வைத்த திட்டத்தை, கட்சி அங்கிகரித்த நிலையில், இப்போரில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்றனர். 1920 இல் முற்றாக இப்பகுதி விடுவிக்கப்பட்டது.

போலிஸ் படை தாக்குதலை தொடுத்த போது, அங்கும் ஸ்டாலின் அனுப்பப்பட்டார். ஏகாதிபத்திய தலைமையில் விரங்கல் புதிய தாக்குதலை யூக்ரேனில் தொடங்கிய போது, மத்திய குழு பின் வரும் தீர்மானத்தை எடுத்தது. “விரங்கல் வெற்றியடைந்து வருகின்றான். கூபான் பிரதேசத்தில் கவலைக்கிடமான நிலைமை. எனவே விரங்கல் எதிர்ப்புப் போரை மிகவும் முக்கியமானதாகவும் முற்றிலும் சுயேட்சையானதாகவும் கருத வேண்டும். ஒரு புரட்சி இராணுவக் குழுவை அமைத்துக் கொண்டு, விரங்கல் முனையில் முழு முயற்சியையும் ஈடுபடுத்துமாறு மத்தியக் கமிட்டி தோழர் ஸ்டாலினுக்கு கட்டளையிடுகின்றது” இதை ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம், ஒரு இராணுவ தளபதியாக நிமிர்ந்து நின்றார்.

இந்த புரட்சிகர யுத்தத்தில் ஒரு செஞ்சேனை தளபதியாக, தலைவனாக ஸ்டாலின் தனித்துவமான பணியை, லெனினால் முன்மொழியப்பட்டு மத்திய குழு அங்கீகரித்து வழங்கிய பதக்க அறிக்கையில் “பேராபத்தான நேரத்தில் நானா பக்கங்களிலும் விரோதிகளின் வளையத்தால் சூழப்பட்டிருந்த பொழுது…. போராட்டப் பொறுப்புக்குத் தலைமைக் குழுவால் நியமிக்கப்பட்ட ஜே.வி.ஸ்டாலின், தன் சக்தியாலும் களைப்பறியாத உழைப்பாலும், தடுமாறிய செம்படைகளை திரட்டுவதில் வெற்றி கண்டார். அவரே போர் முனைக்குச் சென்று, எதிரியின் நெருப்புக்கு முன் நின்றார். தன் சொந்த உதாரணத்தால், சோசலிஸ்ட் புரட்சிக்காகப் போராடியவர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்” இந்த தீர்மானத்தையே இன்று இடது வேடதாரிகள் திரித்து மறுக்கின்றனர். ஸ்டாலின் இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு தளபதியாக இருந்தே இருக்க முடியாது என்கின்றனர். சோவியத் புரட்சியில் ஸ்டாலின் பயந்து ஒளித்துக் கிடந்ததாகவும், வீம்புக்கும், வம்புக்கும் யுத்த முனைக்கு சென்றதாகவும், பல விதமாக அவதூறுகளை கட்டியே பிழைப்பைச் செய்கின்றனர். ஆனால் லெனின் வழங்கிய கருத்தும், பரிசும் மார்க்சிய வரலாற்று ஆவணமாக சர்வதேசிய வழியாக உள்ளது என்பதை மறந்துவிடுகின்றனர்.

1922 மார்ச், ஏப்ரலில் நடந்த பதினோராவது கட்சி காங்கிரசில், கட்சி பொதுக் காரியதரிசி பதவி ஒன்று உருவாக்கப்பட்டு, லெனின் பிரேரணைக்கு இணங்க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியை ஸ்டாலின் உருவாக்கி, அதில் அதிகாரத்தை குவித்து, கட்சி உறுப்பினர்களை தனது சார்பாக நியமித்ததாக, போலி இடதுசாரி பிழைப்புவாதிகள் பசப்புகின்றனர். போல்ஸ்விக் கட்சி வரலாற்றில் லெனினுக்கு பின்பு யாரும் ஸ்டாலினை தாண்டி கட்சித் தலைவராக உயர்ந்ததில்லை. நீண்ட கட்சி வரலாற்றில் லெனினுடன் அக்க பக்கமாக போராடியதுடன், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஸ்டாலினே மேற் கொண்டார். ஸ்டாலின், லெனின் மரணத்துக்கு முன்பே, அதாவது 1912 லேயே லெனின் முன்மொழிவுடன், கட்சியே ஸ்டாலினிடம் தலைமைப் பொறுப்பை கொடுத்திருந்தது. இதை எல்லாம் வரலாற்றில் புதைத்துவிட முயலும், இடதுசாரி புரட்டுத்தனம் வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றது.

முதற்பதிவு: செங்கொடி

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 19

20. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 20

21. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 21

22. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 22

23. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 23

24. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 24

25. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 25

26. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 26

27. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 27

28. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 28