Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 23

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 23

“தனி நாட்டில் சோசலிசம்” என்பது டிராட்ஸ்கியமாகும்

“தனிநாட்டில் சோசலிசம்” கட்டப்போவதாக என்றும் ஸ்டாலின் ஒரு நாளும் கூறியது கிடையாது. ஆனால் டிராட்ஸ்கியம் இதைக் கூறிதான் இன்று வரை பிழைக்கின்றது. இதையே ஸ்டாலினிசம் என்று முத்திரை குத்துகின்றது.

இதன் அரசியல் உள்ளடக்கம் என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்வதன் மூலம், டிராட்ஸ்கியத்தின் அப்பட்டமான சேறடிப்புக்களையும், அரசியல் வங்குரோத்தையும் கண்டு கொள்ள முடியும். ஸ்டாலினை தூற்றி டிராட்ஸ்கியால் முத்திரை குத்தப்பட்ட “தனிநாட்டில் சோசலிசம்” என்பதையே ஸ்டாலின் எப்போதும் எதிர்த்து வந்தவர். சொந்த நாட்டிலும், உலகளவிலும் தலைமை பத்திரத்தை எற்ற ஸ்டாலின் அதை விளக்கும் போது, மார்க்சியத்தின் இயங்கியல் பண்பை மிகச் சிறப்பாக வெளிக் கொண்டுவந்தவர். ஸ்டாலின் டிராட்ஸ்கியின் கண்டுபிடிப்பான “தனிநாட்டில் சோசலிசம்” என்பதை எதிர்த்து தனியான ஒரு நாட்டில் உள்ள சக்திகளை மட்டும் கொண்டு, சோசலித்தைத் தொழிலாளி வர்க்கத்தால் இறுதியாக உறுதிப்படுத்த முடியும் என்றோ, எதிரிகள் மீண்டும் தனது நாட்டில் நுழைந்து குறுக்கிட்டு அதன் விளைவாக முதலாளித்துவத்தை திரும்பவும் ஸ்தாபிக்க இனி முயற்சிக்க மாட்டார்கள் என்று உத்தரவாதம் உண்டு என்றோ அhத்மாகுமா? அப்படி அவர்கள் முயற்சித்தால், அதை சமாளிக்ககூடிய அளவுக்கு சோசலிசத்தை உறுதிப்படுத்தி விட்டோம் என்ற சொல்வதற்கு முடியும் என்று அர்த்தமாகுமா? இல்லை. அப்படி அர்த்தமில்லை. அப்படி அர்த்தம் கொள்வதற்க்கு முன், இன்னும் குறைந்த பட்சம் பல நாடுகளில் புரட்சி வெற்றி பெறவேண்டியது அவசியம்; ஆகவே வெற்றி பெற்ற நாட்டில் புரட்சியானது, மற்ற நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றியைத் துரிதப்படுத்தவதற்குத் தான் ஒரு உதவி புரிபவனாக, ஒரு கருவியாகத் தன்னை பாவிக்க வேண்டும். தனியே தன்னோடு நின்று கொள்ளும் ஒரு பொருளாகத் தன்னைக் கருதிக் கொள்ளக் கூடாது. தனியே நின்று தனக்கு வேண்டியதனைத்தையும் தானே சாதித்துக் கொள்ளக் கூடிய ஒன்றாகக் கருதிவிடக் கூடாது” என்றார். சொந்த நாட்டில் தொடரும் வர்க்கப் போராட்டம் என்ற புரட்சிகர பணி, சர்வதேசப் புரட்சி என்ற ஒரேயோரு குறிக்கோளை கடந்து எதையும் ஸ்டாலின் முன்னெடுக்கவில்லை, முன்வைக்கவில்லை. அவர் லெனினிய பாதையில் வர்க்கப் போராட்டத்தையே ஆணையில் வைத்தார்.

லெனின் சோசலிசம் பற்றி கூறும் போது இந்த சகாப்தம் முடிவுறும் வரையிலும் நிச்சயமாக சுரண்டலாளர்கள் மீண்டும் நிலைநாட்டுதல் எனம் நம்பிக்கையில் திளைக்கிறார்கள். மேலும் இந்த நம்பிக்கை மீண்டும் நிலை நாட்டுதலுக்கான முயற்சியாக மாற்றப்படுகிறது” என்றார். இவை லெனினின் கற்பனைகள் அல்ல. மீண்டும் சுரண்டலை நிலைநாட்டுதல் என்பது சோவி

யத் யூனியனில் எங்கிருந்து எப்படி உருவாகின்றது என்பதை ஆய்வு செய்யவும், விளக்கவும் எந்த ஸ்டாலின் எதிர்ப்பாளரும் முன்வருவதில்லை. இது பற்றி மாவோ சொந்த அனுபவத்தில் லெனினியத்தின் அடிப்படையை மீள உறுதி செய்தார். சீனத்தில் உடமை முறையைப் பொருத்தவரை சோசலிச மாற்றம் பிரதானமாக முடிந்து விட்டிருப்பினும்… தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவம் மற்றும் தரகு முதலாளித்துவ வர்க்கங்களின் மிச்ச சொச்சங்கள் இன்னமும் இருக்கின்றன. இன்னமும் முதலாளித்துவ வர்க்கம் இருக்கிறது. குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை மறு வார்ப்பு செய்வது இப்பொழுது தான் தொடங்கியிருக்கின்றது” என்று எச்சரிக்கின்றார். தொடர்ந்து அவர் சொந்த நாட்டில் இந்த அபாயத்தை எதிர்கொண்டர். அப்போது மவோ பாட்டாளி வர்க்கத்துக்கும் வெவ்வேறு அரசியல் சக்திகளுகுமிடையிலான வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்குமிடையிலான சித்தாந்தத் துறையிலான வர்க்கப் போராட்டம் நீண்ட நெடியதாகவும், சித்திரவதை மிக்கதாகவும் நீடிக்கும் சமயங்களில் மேலும் கூர்மையானதாகவும் மாறக்கூடும்” என்ற எச்சரிக்கையை செய்து கட்சியின் கவனத்தை அதன் பால் திருப்புகிறார். மீண்டும் சோவியத் அனுபவத்தை சரியாக தொகுத்தளித்த மாவோ 1963 இல் இந்த எச்சரிக்கையை துல்லியமாக முன்வைக்கின்றார். வர்க்கப் போராட்டத்தையும் வர்க்கங்களையும் மறந்து விட்டால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறந்து விட்டால், பிறகு நீண்ட காலம் பிடிக்காது, சில ஆண்டுகளில் மட்டுமே அல்லது ஒரு பத்து அல்லது அதிகம் போனால் சில பத்து ஆண்டுகளக்கு முன்பே எதிர்புரட்சி மீட்பு தேசிய அளவில் நடந்துவிடும். மார்க்சிய லெனினியக் கட்சி சந்தேகத்துக்கிடமின்றி ஒரு திரிபுவாதக் கட்சியாக அல்லது ஒரு பாசிசக் கட்சியாக மாறிவிடும். சீனத்தின் மொத்த நிறமும் மாறிவிடும். தோழர்களே இது பற்றி சிந்தியுங்கள். இது எவ்வளவு அபாயகரமான நிலைமையாக இருக்கும்” என்பதை கூறிவிடும் ஒரு வர்க்க சமூக அமைப்பு பற்றி தீர்க்கதரிசியாகி விடுகிறார். ஆம், சோவியத் முதல் சீனா வரை இது நடந்தேறியது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தில் வர்க்கப் போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டியதை இது செம்மையாக உறுதியாக கோருகின்றது. இந்த வர்க்கப் போராட்டத்தையே டிராட்ஸ்கி தனிநாட்டு சோசலிசம் என்று கூறி நிராகரித்தான். இதற்கு மாறாக முதலாளித்துவ மீட்சியை கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் கோரினான். உள்நாட்டில் வர்க்கப் போராட்டத்தை நடத்தக் கூடாது என்றான். இதை அவன் “தனிநாட்டு சோசலிசம்” என்றான். ரஷ்யாவில் ஸ்டாலினுக்கு பின்னும், சீனாவில் மாவோக்கு பின்னும் டிராட்ஸ்கிய வழியில் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டதால் தான் முதலாளித்துவ மீட்சியாக அரங்கேறியது.

 

லெனின் பாட்டாளி வர்க்க ஆட்சி பற்றி கூறும் போது முதன் முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வாகை சூடும்” என்றார். இந்தக் கூற்று எந்தவகையிலும் சர்வதேச வர்க்கப் புரட்சியை மறுக்கவில்லை. முதலாளித்துவ நாடுகள் முரணற்ற முதலாளித்துவ புரட்சியையும், அதன் உள்ளார்ந்த சமூகக் கூறுகளையும் சமூக மயமாக்கும் போது பாட்டாளி வர்க்க புரட்சி பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் அல்லது ஒன்றன் பின் ஒன்றாக நாடக்கும் வாய்ப்பு நிகழ்ச்சி நிரலில் இருந்தது. ஆனால் முதலாளித்துவ புரட்சி முரணற்ற ஜனநாயகத்தை கைவிட்டு சொந்த புரட்சிக்கே துரோகமிழைத்த நிலையில், முதலாளித்துவம் பண்பியல் பாய்ச்சல்களை கண்டது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது எகாதிபத்தியமாக வளர்ச்சியுற்றது. உலகம் எற்றத் தாழ்வான வளர்ச்சியிலும், சமூக அமைப்பிலும் கூட பாரிய இடைவெளிகளை கண்டது. முதலாம் உலக யுத்தத்தின் முன்பு சில விரல்விட்டு எண்ணக் கூடிய முதலாளித்துவ நாடுகள், உலகின் மிகப் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இதனால் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடக்கும் பாட்டாளி வர்க்க புரட்சி உலகம் தழுவிய புரட்சிக்குள் நகர்த்திவிடும் பொதுவான கூறுகள் காணப்பட்டது. இரண்டாவது உலக யுத்தம் தொடங்கிய போது உலக நிலப்பரப்பில் 59.9 சதவீதமும், மக்கள் தொகையில் 63.6 சதவீதமானோர் ஏகாதிபத்தியத்தின் நேரடி காலனித்துவ கட்டுபாட்டில் வாழ்ந்தனர். பிரிட்டன் தனது சொந்த நாட்டை விட 73 மடங்கும், பிரான்ஸ் தனது சொந்த நாட்டை விட 20 மடங்கு நிலப்பரப்பை சொந்த காலனியாக கொண்டிருந்தன. மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்தில் மிகச் சிலவே சுதந்திர நாடுகளாக இருந்த நிலையில், சுதந்திர நாடுகளில் நடக்கும் புரட்சி முழு உலகையே மாற்றிவிடும் நிலையில் இருந்தது. ஆனால் இந்த சுதந்திர முதலாளித்துவ நாடுகள் காலனிகளில் எற்றத் தாழ்வான பிளவை பேணியதுடன், பிரித்தாளும் தந்திரங்களையும் ஏகாதிபத்திய கொள்கையையும் நடைமுறைப்படுத்தின. முதலாளித்துவம் தன் நிலைக்கு எற்ப மாற்றி புரட்சிகளை ஒடுக்கி, உலகை எற்றத் தாழ்வான சமூக அமைப்பாக உருவாக்கின. தாழ்வான சமூகத்தில் இருந்து உறுஞ்சி எடுத்ததை எற்றமாக வாழ்ந்த சமூகத்துக்கு லஞ்சம் கொடுத்தன் மூலம், பாட்டாளி வர்க்க புரட்சியை பின்னுக்கு நகர்த்தியதுடன் புரட்சியின் முன்னைய வரையறைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இந்த நிலையில் தான் லெனின் புரட்சி முதன் முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வாகை சூடும்” என்றார். சமூக நிலைமைகளின் எற்றத் தாழ்வான வளர்ச்சியில் இது தவிர்க்க முடியாது என்பதை எடுத்துக் காட்டினார். இதை டிராட்ஸ்கிகள் மறுத்தனர்.   

 

ஒரு நாட்டில் அதுவும் ரஷ்யாவில் புரட்சி நடை பெற்ற நிலையில் லெனின் புரட்சிக்கும் சீர்திருத்தத்திற்கும் இடையேயுள்ள சம்பந்ததைப்பற்றி சரியாகவும் துல்லியமாகவும் மார்க்சியம் மட்டுமே வரையறுத்திருக்கிறது. எனினும், இந்த சம்பவத்தை ஒரே ஒரு நிலையிலிருந்து அதாவது, ஒரு நாட்டிலாயினும் சரி, ஒரளவுக்காவது நிரந்தரமானதாயும், நீடித்தாயும் இருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிகிட்டியதற்கு முன்னால் நிலவிய நிலைமைகளிலிருந்து தான் மார்க்சுக்குப் பார்க்க முடிந்தது. அந்த நிலைமைகளில், சரியான சம்பந்தத்தின் அடிப்படை இதுதான். தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான வர்க்க போராட்டத்தில் உண்டாகும் உப விளைவுகளே சீர்திருத்தங்கள்… தனியொரு நாட்டில் மட்டுமே இருந்த போதிலும், தொழிலாளி வர்க்கத்திற்கு வெற்றி கிட்டிய பிறகு சீர்திருத்தங்களுக்கும் புரட்சிக்குமுள்ள சம்பந்ததத்தில் ஒரு புதிய விஷயம் புகுகிறது. கோட்பாட்டு ரீதியில் பார்த்தால், அது பழையது தான். ஆனால் உருவத்தில் ஒரு மாறுதல் எற்படுகின்றது. இதை மார்க்சுக்கு முன் கூட்டியே அறிய வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால் இதை மார்க்சிய தத்துவத்தையும் அரசியலையும் கொண்டு மட்டும் இப்போது புரிந்து கொள்ள முடியும். …தொழிலாளி வர்க்கதின் வெற்றிக்கு பிறகு, (சர்வதேசரீதியில் சீர்திருத்தங்கள் இன்னம் “உபபொருட்களாகவே” இருக்கிற போது), வெற்றி ஏற்பட்ட நாட்டிற்கு ஏற்கனவே கடைசி மூச்சுவரை சக்தியை, முயற்சியை உபயோகித்த பிறகு மேலும் புரட்சிகரமாக மாறுதல்களை உண்டாக்க சக்தி போதாது என்று நன்கு தெரிகிற சமயங்களில், அவகாசத்தைப் பெறுவதற்கு அவசியமானவையாகவும், நியாமானவையாகவும் சீர்திருத்தங்கள் இருக்கின்றன. வெற்றியானது அவ்வளவு பலத்தை சேகரித்துத் தந்துள்ள காரணத்தால், நிர்ப்பந்தமாக  பின்வாங்கும் போது கூட பொருள் துறையிலும் தார்மீகத் துறையிலும் தாக்குப்பிடிக்க முடியும்” என்றார் லெனின். இதையே தனி நாட்டில் சோசலிசம் என்று டிராட்ஸ்கியம் மறுத்தது. லெனின் சர்வதேச புரட்சி தொடர்பாக கூறும் போது அநேக நாடுகளில் ஒரே சமயத்தில் புரட்சி நடப்பது என்பது, அபூர்வமாக நடக்கக்கூடியது. ஒரு நாட்டில் மட்டும் நடப்பதுதான் சாதாரணமாக நிகழக்கூடியது. ஆகவே ஒரு நாட்டில் மட்டும் சுரண்டல்காரர்கள் முறியடிக்கப்பட்டால், அவர்கள் முறியடிக்கப்பட்ட பிறகும் கூட சுரண்டப்பட்டவர்களை விட அதிக பலமுடையவர்களாகவே இருக்கிறார்கள்” என்றார். ஆனால் “தனிநாட்டில் சோசலிசம்” என்ற டிராட்ஸ்கிய அவதூறுகள் இப்படி லெனினுக்கு எதிராகவே புனையப்பட்டன. சர்வதேச புரட்சி இன்றி ஒரு நாட்டில் புரட்சியின் வெற்றிகளை பாதுகாக்கவும் போராடவும் கூடாது என்பதே டிராட்ஸ்கியத்தின் அடிப்படை அரசியல் உள்ளடக்கமாகும். ஒரு நாட்டில் புரட்சி நடந்த பின்பும், பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும், உள் நாட்டில் தொடர்ந்தும் சுரண்டும் வர்க்கம் தான் பலமானதாக நீடிக்கின்றது. அந்த வர்க்கம் உள்ளிருந்தே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது. டிராட்ஸ்கியம் முதல் தெங் வரை இதையே பிரதிநிதித்துவப்படுத்தினர். டிராட்ஸ்கியத்தை மறுத்த லெனின், ஒரு நாட்டில் நடந்த புரட்சி தொடர்பாக கூறும் போது, நமது முன்னறிவிப்புகள் எளிதாகவும் விரைவாகவும் நேரடியாகவும் நனவாகவில்லை என்றாலும், நாம் முக்கியமான விசயத்தைச் சாதித்துள்ளோம் என்ற அளவில் அவை நிறைவுபெற்றுள்ளன. உலக சோசலிசப் புரட்சி தாமதப்படும் பட்சத்திலும் கூட, பாட்டாளி வர்க்க ஆட்சி, சோவியத் குடியாரசு ஆகியவற்றைப் பாராமரிப்பது சாத்தியமாகியுள்ளது” என்று பிரகடனம் செய்தார். இதை பாதுகாப்பது தொடர்பாகவும், சோசலிச புரட்சியை தொடர்வது பற்றி லெனின் கூறும் போது முதலாளியச் சுற்றிவளைப்புக்கு நடுவே ஒரு சோசலிசக் குடியரசு நிலவுவது என்பது சிந்தித்துப் பார்க்கக் கூடியதுதானா? அரசியல், இராணுவ அம்சங்களில் இருந்து பார்த்தால் சிந்தித்துப் பார்க்க முடியாததாகத் தோன்றியது. ஆனால் அரசியல் வகையில் அதைச் சிந்தித்துப் பார்க்க முடியும் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு உண்மை” என்றார். இதையே ஸ்டாலின் இராணுவத்துறையிலும் சிந்தித்துப் பார்க்க முடியும் என்ற நிலைக்கு, நாட்டை உயர்த்தி மெய்பித்தார். லெனின் அரசியல் துறையில் பாதுகாக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டிய அதே நேரம் ஒரு புரட்சியிலுள்ள சிக்கல்களைப் பற்றி ஒவ்வொருவரும் அறிவர். அது ஒரு நாட்டில் ஒளிமயமான வெற்றியுடன் துவங்கி, வேதனைமிக்க காலகட்டங்களின் ஊடே செல்லலாம். ஏனெனின் ஓர் உலக அளவில்தான் இறுதி வெற்றி சாத்தியம். அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளிகளின் கூட்டு முயற்ச்சியின் மூலமே இது சாத்தியம்” என்றார். இங்கு இறுதி வெற்றி பற்றி லெனின் குறிப்பிடும் போது, உலக பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி வரை போராட வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தகின்றார். அதுவரை வேதனை மிக்க கடுமையான வர்க்க நெருக்கடிகளை உள்நாட்டிலும் வெளிநாட்டில் இருந்து பாட்டாளி வர்க்கம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதை எச்சரித்தார். லெனின் அனுமதித்தது போல் அரசியல் துறையலும், பின்னால் இராணுவத் துறையிலும் ஒரு சோசலிச நாட்டை ஏகாதிபத்தியத்திடம் இருந்து பாதுகாக்க முடிந்தது. இது டிராட்ஸ்கிய அரசியலுக்கு முற்றுமுழுதாக முரணான லெனினிய வரையறையாகும். டிராட்ஸ்கியத்தை மூடிமறைக்கும் உள்நாட்டு எதிரிகளிடம் இருந்தே, ஒரு நாட்டில் நடக்கும் புரட்சியை பாதுகாக்க முடியாத நிலை உருவானது. மாவோ இது பற்றிய தனது எச்சரிக்கையில் துப்பாக்கியுடன் உள்ள எதிரிகளைத் துடைத்தொழித்த பிறகு இன்னமும் துப்பாக்கி இல்லாத எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கெதிராக ஜீவமரணப் போராட்டத்தை நடத்தியே தீர்வார்கள்; இவ்வெதிரிகளை எளிதாக நாம் எப்பொழுதும் கருதக் கூடாது. இந்த வகையில் பிரச்சினையைப் புரிந்த கொண்டு தருணத்திற்கேற்றவாறு நிற்கவில்லையானால், நாம் பாரதூரமான பிழைகளை இழைக்க நேரிடும்” என்றார். இதை சரியாக கையாளாத எல்லா நிலையிலும், உள்நாட்டில் இருந்தே எதிர்புரட்சியான சுரண்டும் வர்க்கம் ஆட்சிக்கு வருவது தவிர்க்க முடியாது. 1949 புரட்சியில் வெற்றி பெற்றவுடனேயே மாவோ இந்த எச்சரிக்கையை விடத் தயங்கவில்லை. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் உள் நாட்டின் பிரதான முரண்பாடு பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான முரண்பாடு” என்றார். போராட்டத்தின் குவி மையம் அரசு அதிகாரத்துக்கான பிரச்சனையில் தங்கியிருக்கின்றது என்றார். மிகவும் நுட்பமான இந்த தீர்க்க தரிசனமிக்க கருத்துகளை, சமுதாயத்தின் கடுமையாக தொடந்தும் நீடித்த வர்க்க முரண்பாட்டில் இருந்து தான் எடுத்தாளுகின்றார்.

ஒரு நாட்டில் புரட்சி நடந்தாலும், அதை வெளிநாட்டு ஆக்கிரமிப்பில் இருந்து பாட்டாளி வர்க்கத் தலைமையால் பாதுகாப்பது ஒரு நீடித்த காலத்துக்கு சாத்தியமானது. ஆனால் உள்நாட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதே மிக கடினமானதாக இருப்பதை சென்ற நூற்றாண்டின் பல புரட்சிகள் தொடர்ச்சியாக நிறுவியுள்ளன. ஏன் மனித வராலாற்றில் பல முற்போக்கான போராட்டங்களுக்கும் இதுவே நடந்தன. புரட்சி ஒரு நாட்டில் நடந்த பின்பு, அதன் பாதுகாப்பு தொடர்பாக மற்றைய நாட்டின் புரட்சி பற்றி எடுத்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அனுபவம் சார்ந்த ஆய்வுரைகள், உள்நாட்டில் இதற்கான முயற்சியை பற்றிய எச்சரிக்கையை மிககுறைவாகவே மதிப்பிடப்பட்டன. இது பின்னால் முக்கியத்துவமுடைய விடயமாகியது. இங்கு ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியின் வெற்றி என்பது, எகாதிபத்தியத்துடான இறுதி போர் இன்றி நடக்க முடியாது என்ற உண்மை, எகாதிபத்திய அமைப்பில் அதன் நீடிப்பை நீண்ட காலத்துக்கு அதை உறுதி செய்கிறது. ஆனால் உள் நாட்டில் கட்சிக்குள் உருவாகும் எதிரி வர்க்க பிரதிநிதித்துவம், ஆட்சிக் கவிழ்ப்புகான கூறை அடிப்படையில் கொண்டே புரட்சிகள் நடக்கின்றன. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான பல்வேறு வர்க்கங்களின் கூட்டாக புரட்சி உருவாகும் போது, உள் நாட்டில் தொடரும் வர்க்கப் போராட்டத்தில் எதிரிகள் பலம்பெற்ற அணியாக கட்சியில் நீடிக்கின்ற நிலைமை தான் புரட்சிக்கு எதிரானதாக, புரட்சிகர நீடிப்பை இல்லாது ஒழிக்கின்றது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 19

20. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 20

21. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 21

22. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 22