யுத்த வெ(ற்)றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா!
- Details
- Published on Sunday, 20 May 2012 09:16
- Written by ndpfront
- Hits: 273
இதையோர் யுத்த வெறியாகத்தான் தமிழ்மக்கள் கொள்வார்கள். முள்ளிவாய்க்காலின் யுத்த முடிவிற்குப் பின் தமிழ்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி பயங்கரவாதம் ஓழிக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக தமழ் மக்கள் பிரச்சினைக்க தீர்வு காணப்படுமென!
கடந்த மூன்றாண்டுகள் தமிழர் தாயகம் இனச் சுத்திகரிப்பிற்குள்ளாகி, அதன் சகலதும் சர்வாதிகாரம் கொண்டு செயற்படுகின்றது. நேற்றுமுன்தினம் தனது அரசியல் கருத்தைச் ஜனநாயக வழி நின்று சொன்ன பல்கலைக்கழக மாணவன் அரச இனவெறியர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளான்!
இந்நிலையில் இந்த "யுத்த வெற்றி" யுத்த வெறிதான்!
-அகிலன் 20/05/2012


